தலைப்புச் செய்திகள்-ஜனவரி 5,2009 5 Jan | செய்தி.

மலேசிய  நாளிதழ்களின் முக்கிய செய்திகளும் தலையங்கமும்.

முகப்புச் செய்திகள்

ஆங்கில நாளிதழ்கள்

நியு ஸ்ரேய்ட்ஸ் டைம்சிலும் த ஸ்டாரிலும், காசா பகுதியில் இஸ்ரேலின் படையெடுப்பு என்பது தலைப்புச் செய்தி.

மலாய் நாளேடுகள்

பெரித்தா ஹரியானும், காசாவில் இஸ்ரேலிய படையெடுப்பைத்தான் தலைப்புச் செய்தியாக வெளியிட்டிருக்கிறது.

உத்துசான் மலேசியா, கிளந்தானிலும் திரெங்கானுவிலும் வெள்ளம் ஏற்ப்பட்டிருக்கும் செய்தியையும் அதனால் 30,000 முதலாம் ஆண்டு மாணவர்கள் பாதிக்கப்பட்டதையும்  முதல் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறது.

தமிழ் நாளேடுகள்

மலேசிய நண்பனிலும் மக்கள் ஒசையிலும் மஇகாவின் கல்வி மேம்பாட்டுக் கழகமான எம்ஐஇடி வழங்கிய குத்தகைகளில் முறைகேடுகள் நிகழ்ந்ததாகக் கூறப்படுவதை விசாரிக்க விசாரணைக் குழு அமைக்கப்பட்டிருப்பது தலைப்புச் செய்தி.

தமிழ் நேசனின் தலைப்புச் செய்தி, தமிழ்ப் பள்ளிகளில் பணியாற்ற தற்காலிக ஆசிரியர்கள் 1,522 பேர் சேர்க்கப்பட்டிருப்பதாகக் கூறுகிறது. தமிழ்ப் பள்ளியின் மாணவர் எண்ணிக்கையும் கூடியுள்ளது.

தலையங்கம்

நியு ஸ்ரேய்ட்ஸ் டைம்ஸ்: ஐநாவின் டிசம்பர் 16 ஆம் நாள் பிரகடனம், கடற்கொள்ளையர்களைத் தடுப்பதாக தெரியவில்லை, என்றாலும் கடற்கொள்ளைச் சம்பவங்கள் வெற்றி பெறுவது குறைந்துள்ளது.

பெரித்தா ஹரியான்: பொருளகக் கணக்குகளில் பணம் காணாமல் போகும் மோசடிகள் குறித்து கருத்துரைக்கிறது.

உத்துசான் மலேசியா: பாலஸ்தீன-இஸ்ரேலிய விவகாரத்தில் அமெரிக்கா காட்டும் பாகுபாடு இஸ்லாமிய தீவிரவாதிகளின் ஆத்திரத்தைத் தூண்டி விடும்.

மக்கள் ஓசை: வங்கியில்  வைக்கப்பட்டிருக்கும் பணத்தைப் பாதுகாக்கும் கடப்பாடு பொருளகங்களுக்கு உண்டு.

மலேசிய நண்பன்: வங்கிக் கணக்கில் உள்ள பணம் மாயமாய் மறைவது பற்றியே எழுதுகிறது. பொருளகங்களில் உள்ள பணம் அபகரிக்கப்படுவதைத் தடுக்க வேண்டும்.

 
You can leave a response, or trackback from your own site.

Leave a Reply