தலைப்புச் செய்திகள்-ஏப்ரல் 16 16 Apr | செய்தி.

newspaper.jpgஇன்றைய ஆங்கில மலாய் நாளிதழ்களில் வெளிவந்துள்ள முக்கிய செய்திகளின் தொகுப்பு.

ஆங்கில நாளேடுகள்
 
நியு ஸ்ரேய்ட்ஸ் டைம்ஸ்: தேர்தல் தோல்வி குறித்து அம்னோவில்  பல்வகை கருத்து தெரிவிக்கப்பட்டிருப்பதைக் குறைகூறும் தலையங்கம் ஒன்றை முதல் பக்கத்திலேயே வெளியிட்டிருக்கிறது.

உறுப்பினர்கள் கட்சித் தலைவரும் பிரதமருமான அப்துல்லா அகமட் படாவிக்கு முழு ஆதரவு தெரிவிக்க வேண்டும் எனவும் அது வலியுறுத்தியுள்ளது.

நாட்டுக்கும் கட்சிக்கும் பொருத்தமான நடவடிக்கை குறித்து அப்துல்லா செய்துள்ள முடிவின்மீது தமக்கு நம்பிக்கை இருப்பதாக துணைத் தலைவர் நஜிப் துன் ரசாக் கூறியிருப்பதையும் அது முதன்மைச் செய்தியாக வெளியிட்டிருக்கிறது.

த சன்: புதிய தலைவர் தேவை என்று கோரும் கட்சி உறுப்பினர்களை அம்னோ மகளிர் தலைவி ரவிடா அசீஸ் எச்சரித்துள்ளார். இது முன் எப்போதும் நிகழ்ந்திராத ஒன்று என்று குறிப்பிட்ட அவர் அதனால் பிரதமரும்கூட மாற நேரலாம் என்றார்.

ஸ்டார்: தனியார் மருத்துவமனைகளில் கட்டணம் அதிகம் என்ற முறையீடுகள் வருவதால் அது பற்றி ஆய்வு செய்ய சுகாதார அமைச்சு எண்ணம் கொண்டிருப்பதாக முதல் பக்கத்தில் செய்தி வெளிவந்துள்ளது,

மலாய் நாளேடுகள்

பெரித்தா ஹரியான்: அம்னோவில் ஏற்பட்டுவரும் மாற்றங்கள் குறித்து நஜிப்பின் கருத்து முதன்மைச் செய்தியாக இடம்பெற்றுள்ளது.

உத்துசான் மலேசியா: உலக அளவில் அரிசிக்கு பற்றாக்குறை நிலவுவதால் கடந்த ஞாயிற்றுக்கிழமையிலிருந்து அதன் விலை 10-20 விழுக்காடு உயர்ந்திருப்பதாக அறிவித்துள்ளது.

ரபிடாவின் கருத்தும்  முதல் பக்கத்தில் வெளிவந்துள்ளது.

தலையங்கம்

த சன்: இளைஞரிடையே நாட்டுப்பற்று குறைந்து வருவதாகக்

குறிப்பிடும் அதன் அறிக்கையை இளைஞர் விளையாட்டு அமைச்சு

வெளியிட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டிருக்கிறது. நாட்டின்

முக்கியத்துவத்தை இளைஞர்கள் உணரும்படி செய்ய வேண்டும்.

பெரித்தா ஹரியான்: அம்னோ தொடர்ந்து முன்னேற்றம் கண்டு

நாட்டை வழிநடத்தும் திறன் தனக்கிருப்பதை நிரூபிக்க வேண்டும்.

உத்துசான் மலேசியா: அம்னோ சீரமைக்கப்பட்ட பின்னர் அடிமட்ட

உறுப்பினர்களின் கோரிக்கைகளுக்கு ஏற்ப தலைமைத்துவ மாற்றமும் நிகழ  வேண்டும். 

 
You can leave a response, or trackback from your own site.

Leave a Reply