தேர்தல் பிரச்சாரப் பாதையில்…
‘என்னுடன் வேலை செய்யுங்கள், என்னுடன் உறங்குங்கள்’
(குறிப்பு: அப்துல்லா படாவி அவர் கலந்து கொண்ட பல நிகழ்ச்சிகளில் அயர்ந்து தூங்க காணப்பட்டுள்ளார்.)
தேர்தல் வேட்பாளர் நியமன நாளன்று அம்னோவின் தலைவர் அப்துல்லா அமாட் படாவி பெர்மாத்தாங் பாவ் தொகுதியில் எதிர்க்கட்சிகளின் நகைப்புகளுக்கு இலக்கானார்.
கெஅடிலான் மற்றும் பாஸ் கட்சிகள் ஏந்தி வ்ந்த பதாகைகளில் ஒன்று அப்துல் படாவி தூங்கிக்கொண்டிருக்கும் காட்சிகள் அடங்கிய நான்கு படங்களை கொண்டிருந்தது. அதில் “என்னுடன் வேலை செய்யுங்கள், என்னுடன் உறங்குங்கள்” (bekerja bersama saya dan tidur bersama saya) என்ற வாசகங்கள் எழுதப்பட்டிருந்தன.
இன்னொரு பதாகையில் “இமான் ஹதாரி”யால் ஏமாற்றப்பட்டுவிடாதீர்கள் என்று எழுதப்பட்டிருந்தது. அப்பதாகையில் காணப்பட்ட படத்தில் மலேசியாவில் பிறந்த நடிகையும் முந்நாள் ஜேம்ஸ்பாண்ட் பெண்ணுமான மிசேல் இயோவின் தோள்பட்டையில் அப்துல்லா படாவி அவரின் கையைப் போட்டிருப்பது காண்ப்பட்டது.
பெர்மாத்தாங் பாவ் தொகுதியில் தேசியப் பள்ளிவாசலின் முந்நாள் இமாம் பிர்டாவுஸ் இஸ்மாயிலும் (அம்னோ) அத்தொகுதியின் நாட்டாளுமன்ற உறுப்பினராக இருந்த டாக்டர் வான் அஜிஷா வான் இஸ்மாயிலும் (கெஅடிலான்) மீண்டும் போட்டியிடுகின்றனர்.
சாமி வேலு அவரது பிறந்த நாள் குறித்து பொய் சொன்னாரா?
அவரது பிறந்த நாள் மார்ச் 8 அல்லது ஜூன் 20 தா?
சுங்கை சிப்புட் தொகுதிக்கான நாடாளுமன்ற வேட்பாளராக தமது நியமனப் பத்திரங்களை மஇகாவின் தலைவர் ச. சாமி வேலு தாக்கல் செய்தபோது அவரது பிறந்த நாள் 20.6.1937 என்று காணப்பட்டது.
ஆனால், வாக்களிப்பு தினம் - மார்ச் 8 - இரட்டிப்புக் கொண்டாட்டமாக இருக்கும் ஏனென்றால் அந்நாள் அவரது பிறந்த நாளுமாகும் என்று கடந்த வாரம்தான் சாமி வேலு ஊடகங்களிடம் கூறியிருந்தார்.
அவரை எதிர்த்துப் போட்டியிடும் கெஅடிலான் வேட்பாளர் டாக்டர் ஜெயக்குமார் இந்த பெரும் வேறுபாடு குறித்து வேட்பாளர் மனு தாக்கல் செய்த பின் இடம் பெரும் ஆட்சேப நேரத்தில் சாமி வேலுவிடம் கேள்வி எழுப்பினார்.
மஇகா தலைவரின் அடையாள அட்டையை தேர்தல் ஆணைய அதிகாரி பார்த்த போது அதில் சாமி வேலுவின் பிற்ந்த நாள் ஜூன் 20 என்று குறிப்பிடப்பட்டிருந்ததால் எழுப்பப்பட்ட ஆட்சேபனையை அந்த அதிகாரி நிராகரித்தார்.
அப்படி என்றால், மார்ச் 8 யாருடைய பிறந்த நாள்?







February 25th, 2008 at 8:52 pm
மஇகாவின் தலைவர் ச. சாமி வேலுவின் பிறந்த நாள் 20.6.1937லா!!!!!!அப்படி என்றால், மார்ச் 8 யாருடைய பிறந்த நாள்? என்ன கொடுமை சார் இது!!.
February 25th, 2008 at 9:40 pm
சாதனை தலைவரின் புழுகுமூட்டை இதன் மூலம் நன்கு வெளிபட்டுள்ளது.பிறந்த தேதியைக் கூடவா மறைப்பது….?தேர்தலுக்குப் பின் இன்னும் என்னவெல்லாம் அம்பலம் ஆகுமோ..!
February 25th, 2008 at 11:48 pm
மார்ச் 8 தேதி இது வரை சாமி வேலுவின் பிறந்த நாளாக இருந்தது இனி மேல் அது மக்கள் சக்தியின் வெற்றி நாளாக அமையும். சாமி வேலுவுக்கு முதல் தோல்வி நாள்.
February 26th, 2008 at 11:49 am
“..YENGGUM POOI..!!!!!
ETHILLUM POOI..”!!!!
February 26th, 2008 at 9:41 pm
I don’t like PAS’s Islam idea. But I’ll vote them just to deny 2/3 majority for BN.
BN is very arrogant and it’s only for rich malays. Why should i support that bloody nasty for them to become richer?
50 years is ENOUGH! DO NOT PLAY THE F**KING FOOL WITH INDIANS.
BN “OLIGA” MIC “GET LOST”.
February 27th, 2008 at 11:36 pm
Malaysi Indru kanden. Agam magilthen. Tamilargalin sintanai maadratirku itu oru mailkallaaga irukkum. Varum kaalangalil naanum yelutuven. Nandri Malaysia Kini.