இனிமேல் பிச்சை எடுக்க மாட்டேன் - சாமிவேலு
பகாங் மாநில ஆட்சிக்குழுவில் மஇகாவின் பிரதிநிதிக்கு இடமில்லை. நாங்கள் கேட்க வேண்டியதை கேட்டுவிட்டோம். போதும். இனிமேல் இதற்கும் அதற்கும் பிச்சை கேட்கப்போவதில்லை என்று டத்தோஸ்ரீ ச. சாமிவேலு கூறியுள்ளார்.
மாற்றரசு கட்சிகள் கைப்பற்றியுள்ள மாநிலங்களின் ஆட்சிக்குழுவில் இந்தியர்களுக்கு பாரிசான் கட்சியைப்போல ஒரு இடம் மட்டும் கொடுத்திருப்பது குறித்து சாமிவேலு அக்கட்சிகளைக் கடுமையாகச் சாடினார்.
மேலும், சுங்கை சிப்புட்டில் தோற்றது நானல்ல. மக்கள் தோற்கடித்தது பாரிசானை என்று சிறந்த விளக்கமொன்றை சாமிவேலு வழங்கினார். (தொடரும்)







March 31st, 2008 at 12:21 am
ninaipathellam nadanthuvithal
theivam ethummilai
nadanthathaiye ninaithurunthal
manathil amaithi illai…
endru samyvel ninakkirar poolirukku
pothummappa un paathu
vaaya konjum nippathu..
March 31st, 2008 at 11:27 am
வாழ்த்துக்கள். காலங்கடந்து முடிவெடுத்தாலும் தற்பொழுதாவது நாம் நம் உரிமைக்காக போராட வேண்டுமே தவிர பிச்சைக் கேட்கக்கூடாது என்பதைப் புரிந்துகொண்ட ம.இ.க. வின் தலைவருக்கு நன்றி. இனிமேலாவது உரிமையைப் பற்றி பேசுவோம்;கேட்போம்;பயனடைவோம். உன்னுரிமை இழக்காதே பிறருரிமை பறிக்காதே என்ற வேதாந்தத்தின்படி, இனி அனைத்து இந்தியர்களும் ஒன்றுசேர்ந்து உரிமைக்காகப் போராடுவோம். ஒன்றுபட்டதால்தான் (25.11.2007) இன்று நம்மால் நம்முடைய விவேகத்தைப் பொதுத்தேர்தலின் வழி காட்ட இயன்றது. தொடர்வோம் நம் விவேகத்தை;பெறுவோம் வெற்றியை. வாழ்க மக்கள் சக்தி.
March 31st, 2008 at 1:28 pm
ஐயா… ஆசிரியர் அவர்களே..?
சாமிவேலு சொன்னது என்ன…
‘பிச்சைக் கேட்க மாட்டேன்’ என்றல்லவா அவர் சொன்னார்.
நீங்கள் எப்படி அதைத் திரித்து ‘பிச்சை எடுக்க மாட்டேன்’ என்று சொன்னார் என்று எழுதலாம்..?
இரண்டுக்கும் உள்ள வேறுபாடு உங்களுக்குப் புரியாதா..?
நிற்க…
நாம் பிச்சைக் கேட்க வெண்டாம்.. கேட்கவும் மாட்டோம்.
நாம் தன்மானமிக்கத் தமிழர்கள்.
நாம் நமது உரிமைகளை தட்டிக்கேட்போம்.
அப்படியும் கிடைக்காவிட்டால், அதட்டிக்கேட்போம்.
March 31st, 2008 at 11:20 pm
அப்படியென்றால் இவ்வளவு காலம் அவர் பிச்சையாகத்தான் சமுதாயத்தின் உரிமைகளைக் கேட்டாரா? அரசாங்கம் பிச்சையாகத்தான் கொடுத்ததா?