15வது மலேசிய சட்ட மாநாடு முடிந்துள்ளது. அந்த மாநாட்டில் எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் கலந்து கொண்டது குறித்து எழுந்த சர்ச்சையை சாந்தப்படுத்துவதற்கு அன்வாருடன் வழக்குரைஞர் மன்றமும் முயற்சி செய்தது.
அந்த நிகழ்வில் பங்கு கொள்ள அழைத்த ஏற்பாட்டுக் குழுவின் துணிச்சலை அன்வார் தமது நிறைவு உரையில் அன்வார் பெரிதும் பாராட்டினார். அந்த முடிவு சட்டத்துறைத் தலைவர் அப்துல் கனி பட்டேய்ல் கலந்து கொள்ளாமல் போனதற்குக் காரணமாகி விட்டது.
“உண்மையில் என்னை அழைத்ததின் மூலம் உங்கள் அமைப்பு அனுபவித்த துன்பங்களுக்கு எனது பாராட்டு மொழிகள் மட்டும் போதாது.”
“எனினும் எதிர்ப்பு இருந்த போதிலும் நீங்கள் உங்கள் நம்பிக்கையில் அசையாமல் இருந்த காண்கிறேன்,” என்றும் அவர் சொன்னார்
அதனை அவர் கூறிய போது அந்த மாநாட்டில் பங்கு கொண்ட 400 பேராளர்களும் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.
கோலாலம்பூர் மாநாட்டு மண்டபத்தில் இன்று பிற்பகல் அந்த மாநாடு நிறைவுக்கு வந்தது.
செலவு பிடித்த முடிவு
வழக்குரைஞர் மன்றத் தலைவர் கே ரகுநாத்,
அந்தச் சர்ச்சையை நகைச் சுவையாக விளக்கினார். அதே வேளையில் அந்த நிகழ்வில் பங்கு கொள்வதற்கு பங்கு கொள்ள பிகேஆர் மூத்த தலைவரை அழைத்ததின் மூலம் ஏற்பட்ட விளைவுகளையும் விவரித்தார்.
“தென்னாப்பிரிக்க தலைமை நீதிபதி சாண்டில் ங்கோபோவின் உரையின் பிரதியை அன்வார் என்னிடம் கேட்ட போது நான் பிகேஆர் உதவித் தலைவரும் வழக்குரைஞருமான ஆர் சிவராசாவிடம் நியாயமான கட்டணத்தில் அதனை கொடுப்பதாகக் கூறினேன். பின்னர் ஒரு சொற்பொழிவை நிகழ்த்துவதற்கு தாம் எவ்வளவு கட்டணம் விதிப்பதை என்னிடம் கூறுமாறு அன்வார் சிவராசாவைப் பார்த்துக் கூறினார்.”
“பின்னர் நான் அவரை இங்கு பேச வைப்பதற்காக நாங்கள் எவ்வளவு பணத்தையும் விளம்பரத்தையும் இழந்தோம் என்று அன்வாரிடம் கூறுமாறு சொன்னேன்.” என ரகுநாத் கூறிய போது மண்டபத்தில் சிரிப்பலை எழுந்தது.
பின்னர் கடுமையான தொனியில் பேசிய அவர் அன்வாரை அழைக்கும் முடிவு வழக்குரைஞர் மன்றம் கூட்டாக எடுத்த முடிவு என்று தெரிவித்தார்.
“அது எங்களுக்கு எளிதான முடிவு அல்ல. ஆனால் அது தான் எங்களுக்கு சரியான முடிவாக பட்டது,” என அவர் மேலும் சொன்னார்.
சட்ட மாநாட்டில் அன்வார் அதிகாரப்பூர்வமாக கலந்து கொண்டதால் அப்துல் கனி மாநாட்டில் பங்கு கொள்வதற்கான அழைப்பை நிராகரித்தி விட்டதாக சொல்லப்படுகிறது. ஆனால் அவர் தமது முடிவுக்கு எந்தக் காரணத்தையும் அவர் கொடுக்கவில்லை.
தாம் வெளிநாட்டில் இருப்பதால் மாநாட்டில் கலந்து கொள்ள இயலாது என பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கும் தெரிவித்து விட்டார்.

உங்கள் தைரியத்திற்கு நேர்மைக்கும் எங்களின்
பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் .
வழக்கறிஞர் மன்றத்தலைவர் கே.ரகுநாத் அன்வாரை உரைநிகழ்த்த அழைத்ததிலிருந்து இவர் உண்மையிலேயே உண்மையை நேசிப்பவர் என்பது புலனாகிறது.