முஸ்தாபா: அரசாங்கம் உண்மையை மறுக்கவில்லை 1 Aug | செய்தி.

2009ம் ஆண்டு அந்நிய நேரடி முதலீடு 81 விழுக்காடு வீழ்ச்சி கண்டதை அரசாங்கம் மறுக்கவில்லை. அதனைச் சரி செய்வதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறது.இவ்வாறு அனைத்துலக வாணிக தொழிலியல் அமைச்சர் முஸ்தாபா முகமட் கூறுகிறார்.

“நான் யாருடனும் சண்டையத் தொடங்க விரும்பவில்லை. தனியார் முதலீடுகள் தொடர்பாக பிரச்னைகள் இருப்பதை நாங்கள் அறிந்துள்ளோம். பொருளாதாரம் பொதுத் துறையை சார்ந்திருக்கிறது. நாங்கள் அந்த வழியில் செயல்படுகிறோம்,” என அவர் மலேசிய மாணவர் தலைவர்கள் மாநாட்டில் நிருபர்களிடம் கூறினார்.

இந்த வட்டாரத்தில் உள்ள மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் நாட்டுக்குள் வந்த அந்நிய நேரடி முதலீடுகள் கடுமையாக குறைந்திருப்பதற்கான காரணங்களை முழு உண்மையை விளக்கவில்லை என்று முன்னாள் நிதி அமைச்சட் தெங்கு ரசாலி ஹம்சா தெரிவித்துள்ளது பற்றி முஸ்தாபா கருத்துரைத்தார்.

நாட்டின் நிர்வாகம் மீது முதலீட்டாளர் நம்பிக்கை குறைந்து வருவது தான் அந்நிய முதலீடுகள் சரிவுக்கும் நாட்டிலிருந்து மூலதனம் வெளியேறுவதற்கும் காரணம் என்பதை ஒப்புக்கொள்ள அமைச்சர் தவறி விட்டதாக ரசாலி கூறியிருந்தார்.

ரசாலி கூறியதை நிராகரித்த முஸ்தாபா, அண்மைய கால அந்நிய முதலீடுகள் மாறுபட்ட சூழ்நிலையைக் காட்டுவதாக சொன்னார்.

குழப்பமே தவிர நம்பிக்கை இல்லாமை அல்ல

பூமிபுத்ரா பங்காளி அவசியமா இல்லையா என்பது போன்ற நிச்சயமற்ற சூழ்நிலைகள் முதலீட்டாளர்கள் இந்த நாட்டுக்குள் முதலீடுகளைக் கொண்டு வருவதற்குத் தடையாக இருக்கும் அம்சங்களில் ஒன்று என சிஐஎம்பி குழுமத் தலைவர் நாசிர் ரசாக் கூறியதை முஸ்தாபா ஒப்புக் கொண்டார்.

“ஒரளவுக்கு அது உண்மை தான். கொள்கை மாற்றங்களைச் செய்வதற்கு முன்னர் அரசாங்கம் ஆய்வு செய்ய வேண்டியிருக்கிறது. பொருளாதார மாற்றுத் திட்டம் அமலாக்கப்படுகிறது,” என்றார் அவர்.

பூமிபுத்ரா பங்குத் தேவைகள் பற்றிய “குழப்பம்” பற்றிக் குறிப்பிட்ட முஸ்தாபா, தயாரிப்புத் தொழிலைப் பொறுத்த வரையில் அது “தவறான எண்ணம்” என்றார்.

“அத்தகைய வழிமுறைகள் ஏதும் இப்போது இல்லை. நாங்கள் அந்தத் தேவைகளை பெரும் அரசியல் இழப்புடன் ரத்துச் செய்து விட்டோம்.”

இவ்வாண்டு இறுதிக்குள் சேவைத் துறையை தாராளமயமாக்குவது பற்றியும் தமது அமைச்சு ஆய்வு செய்வதாகவும் முஸ்தாபா தெரிவித்தார். அதற்குப் பின்னர் மற்ற துறைகளிலும் தாராள மயம் அமலாக்கப்படும்.

 
You can leave a response, or trackback from your own site.

Leave a Reply