உங்கள் கருத்து: பினாங்கு “போர்” -இரண்டாம் சுற்று 31 Jul | செய்தி.

“மாநில நிர்வாகத்தை கீழறுப்புச் செய்கின்ற கிளர்ச்சிக்கார மாநில மேம்பாட்டு அதிகாரிகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாமல் மாநில அரசுகள் தடுமாறுவது மலேசியாவில் மட்டும் தாம் இருக்க முடியும்.”

 

கொம்தாரில் உள்ள மாநில மேம்பாட்டு அதிகாரி அலுவலகம் : அரை மில்லியன் ரிங்கிட் விரயம்

பார்வையாளன்: பயன்படுத்தப்படாத, பழசாகிப் போன இடம் அதுவும் அந்த மாநிலத்தில் முக்கியமான இடத்தில். அந்த இடத்தை விரயமாக்கிக் கொண்டிருக்கிறது கூட்டரசு அரசாங்கச் சேவை. பிஎன் அரசாங்கத்தின் அதிகச் செலவு பிடிக்கும் விரயங்களுக்கு அதுவும் ஒர் எடுத்துக் காட்டு.

1.2 மில்லியன் பேர் வேலை செய்யும் அரசாங்கச் சேவையை பராமரிப்பதே உண்மையில் பெரிய விரயம் ஆகும். நன்கு வளர்ச்சி கண்ட தைவான், சிங்கப்பூர், ஜப்பான் போன்ற நாடுகளின் மக்கள் தொகையுடன் ஒப்பிடுகையில் அவற்றின் அரசு சேவை ஊழியர் எண்ணிக்கை விகிதம் மிகவும் குறைவு. அந்த விகிதத்துடன் நாம் ஒப்பிட்டால் நமக்கு 500,000 ஊழியர்கள்தான் தேவை.

வரி செலுத்துவோரின் பில்லியன் கணக்கான ரிங்கிட் பணம் தேவை இல்லாத 700,000 ஊழியர்களுக்கு ஆண்டு தோறும் விரயம் செய்யப்படுகிறது என்பது இதன் பொருள் ஆகும்.

வீரா: மாநில மேம்பாட்டு அதிகாரி இன்னொரு கட்டிடத்துக்கு மாறிய பின்னர் அவர் அந்த இடத்தை என்ன செய்ய விரும்புகிறார் என்று அந்த மாநில  மேம்பாட்டு அதிகாரியிடம் கேட்டிருக்க வேண்டும். அவர் தாம் பயன்படுத்தப்படாத இடத்துக்காக கூட்டரசு அரசாங்கம் மற்றும் மலேசிய அரசாங்கத்தின் சார்பில் மாதம் தோறும் 15 ஆயிரம் ரிங்கிட் வாடகைப் பணம் செலுத்திக் கொண்டிருக்க வேண்டும். வாடகை ஒப்பந்தத்திற்கு இணங்க மாநில அரசாங்கம் உடனடியாக அவர் ஏற்படுத்திய விரயத்துக்காக அவருக்கு அல்லது புத்ராஜெயாவுக்கு பில் அனுப்ப வேண்டும்.

அக்கறையுள்ள குடிமகன்:  மாநில மேம்பாட்டு அதிகாரியுடன் வெளிப்படையாக சண்டையைத் தொடங்கியதின் மூலம் லிம் குவான் எங் தவறு செய்து விட்டார்.

பத்திரிகைகளுக்குச் செல்லாமல் முதலமைச்சர் என்னும் முறையில் அவர் பயன்படுத்துவதற்கு இன்னும் எத்தனையோ வழிகள் உள்ளன. இது முதலமைச்சருக்கு அழகு அல்ல. எதிர்க்கட்சியைப் போன்று சிந்திப்பதை அவர் நிறுத்திக் கொள்ள வேண்டும். பினாங்கில் அவர் ஆட்சி புரிவதை உணர வேண்டும்.

அதே வேளையில் மலேசியாகினியும் லிம் குவான் எங் சொல்லி விட்டார் என்பதற்காக குழுவில் இணைந்து கொண்டு தாக்கக் கூடாது.

ஜோ: அக்கறையுள்ள குடிமக்களே அந்த படங்களை மீண்டும் பாருங்கள். 2008ம் ஆண்டு மார்ச் மாதம் அந்த இடம் உடைக்கப்பட்டது. லிம் குவான் எங்கிற்கும் அந்த குட்டி நெப்போலியனுக்கும் இடையில் நடப்புத் தகராறு தொடங்குவதற்கு வெகு காலம் முன்னரே. உங்களுக்கு இன்னும் புரியவில்லை என்றால் பேராக்கில் நடந்ததைப் பாருங்கள். சிலாங்கூரில் இப்போது என்ன நடக்கிறது என்பதை என்பதை எண்ணிப் பாருங்கள்.

2008 மார்ச் மாதம் தொடக்கம் பனிப் போர் நடந்து கொண்டிருக்கிறது. பக்காத்தான் அரசுகளை கவிழ்ப்பதற்கு லஞ்சமும் பிரதிநிதிகளும் வெளிப்படையாகப் பயன்படுத்தப்படுகின்றனர். அடுத்த பொதுத் தேர்தல் வரையில் அந்த போராட்டம் தொடரும்.

நண்பர்களே, நீங்கள் சரியான முடிவைச் செய்வது முக்கியமாகும். உங்கள் எதிர்காலமும் உங்கள் பிள்ளைகளுடைய எதிர்காலமும் நீங்கள் சரியான முடிவை செய்திருப்பதைப் பொறுத்திருக்கிறது.

அடையாளம் இல்லாதவன்: பக்காத்தான் ராக்யாட் அந்த விஷயத்தை அம்பலப்படுத்தியிருப்பது நல்ல விஷயம்தான். ஆனால் அது ஏன் ஏற்கனவே கூறப்படவில்லை. எது எப்படி இருந்தாலும் நிக் அலி மாட் யூனுஸ் பொதுப் பணத்தை விரயம் செய்துள்ளார். ஆளும் அரசாங்கம் என்னும் முறையில் ஒர் அரசாங்க அதிகாரியின் முறையற்ற நடைமுறையை அம்பலப்படுத்துவது அதன் பொறுப்பாகும்.

லிம் குவான் எங் அவர்களே, பிஎன் பற்றி இன்னும் தெரிவிக்கப்படாத கதைகளை வெளியிடுங்கள். அது குறித்து அறிந்து கொள்வது எங்கள் உரிமை.

வான் ஹுஸ்னி: 2008ம் ஆண்டு மார்ச் மாதம் அந்த அலுவலகம் காலியாகி விட்டது. அதனை இப்போது வெளிப்படுத்துவது ஏன்? நிக் அலி உண்மையில் மோசமான மனிதர் என்பதைக் காட்டுவதற்கா? மாநில மேம்பாட்டு அதிகாரி அம்னோ ஆள் என்பது சாதாரண மனிதருக்குக் கூடத் தெரியும். அவர் தமக்கும் தமது சேவகர்களுக்கும் கிடைப்பதை எல்லாம் சுருட்டிக் கொள்வார் என்பதும் தெரியும். ஆகவே அதனை ஒதுக்கி விட்டு முன்னேறுங்கள்.

லிம் சொங் லியாங்: மாநில நிர்வாகத்தை கீழறுப்புச் செய்கின்ற கிளர்ச்சிக்கார மாநில மேம்பாட்டு அதிகாரிகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாமல் மாநில அரசுகள் தடுமாறுவது  மலேசியாவில் மட்டும் தாம் இருக்க முடியும்.

நான் லிம் குவான் எங்காக இருந்தால் கடற்கரைப் பாதுகாப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக பத்து பெரிங்கி கடற்கரையில் ஒடுகின்ற வெள்ளை நண்டுகளை  எண்ணும் வேலையை அவரிடம்  ஒப்படைப்பேன்.

 
You can leave a response, or trackback from your own site.

Leave a Reply