உறுதியற்ற பொருளாதாரம் கவலை அளிக்கிறது என்கிறார் சிஐஎம்பி தலைவர் 30 Jul | செய்தி.

கடந்தாண்டு மலேசியா அனுபவித்த அந்நிய நேரடி முதலீடுகளின் வீழ்ச்சிக்கு, நாட்டின் பொருளாதாரத்தை  மறுசீரமைக்கும் அரசாங்கத்தின் முயற்சிகளினால் உருவான உறுதியற்ற சூழ்நிலைகளும் ஒரு காரணம் என்று  சிஐஎம்பி தலைவர் நசிர் ரசாக் இன்று கூறியுள்ளார்.

“இந்த கட்டத்தில் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் உறுதியற்றதன்மையை உருவாக்குகின்றன. மேலும் நீடித்தால் இது  முதலீட்டாளர்களிடையே அச்ச உணர்வை ஏற்படுத்தி, அவர்கள் முதலீடு செய்ய தயக்கமடையச் செய்யும்.”

கோலாலம்பூரில் நடைபெறும் 15வது மலேசிய சட்டமாநாட்டில், செய்தியாளர் கூட்டமொன்றில் அவர் இதனைத் தெரிவித்தார்.

அந்த மாநாடு மூன்று நாள்களுக்கு நடைபெறுகிறது.

உறுதியற்ற சூழ்நிலை, நாட்டின் பொருளாதாரம் மீது பாதகமான தாக்கத்தை ஏற்படுத்தி விடும் என்றும் அவர்  குறிப்பிட்டார்.

“எடுத்துக்காட்டாக இப்போது நான் முதலீடு செய்தால், பூமிபுத்ரா பங்காளி ஒருவர் எனக்குத் தேவைப்படுவார். ஆனால் இத் தேவை அடுத்தாண்டு மாறலாம். ஆக, ஒரு முதலீட்டாளர் என்ற முறையில், பொறுத்திருந்து பார்ப்பதுதான் சரியாகும்,” என்றாரவர்.

மேலும், அந்நிய நேரடி முதலீடுகளின் வீழ்ச்சிக்கு, காலநேரமும் ஒரு காரணம். முதலீடுகளின் எண்ணிக்கையைவிட, தரம்வாய்ந்த முதலீடுகளை அரசாங்கம் வரவேற்கவேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

“அரசாங்கத்தின் மறுசீரமைப்பு முயற்சிகளை நான் பார்வையிட்டேன். அது சரியான நடைமுறை. எனவே, நிதித்துறை, வலிமைமிக்கதாக உருவெடுக்கும் என நான் நம்புகிறேன். அரசாங்கம் சரியான மறுசீரமைப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதா என்று வினவப்பட்டபோது இந்த மறுமொழியை அவர் தெரிவித்தார்.

இதற்கு முன்னர், “எல்லைகளுக்கப்பால் வளர்ச்சி காணுதல்” என்பது குறித்து நசிர் உரை நிகழ்த்தினார்.

“உயரிய அவாக்களை பிரதமர் நிர்ணயித்துள்ளார். இந்த அவாக்கள் நிறைவேறுமா என்பதன் அடைப்படையில் நாடு ஒரு சிரமமான கால கட்டத்தில் உள்ளது,” என்று பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் இளைய சகோதரரான நசிர் கூறினார்.

 
You can leave a response, or trackback from your own site.

2 Responses to “உறுதியற்ற பொருளாதாரம் கவலை அளிக்கிறது என்கிறார் சிஐஎம்பி தலைவர்”

  1. surian says:

    இதற்க்கு dato ஸ்ரீ anuar அவர்களே சிறந்த தேர்வு

  2. குடிமகன் says:

    நம்மைவிட சிறிய நாடான சிங்கப்பூரின் பொருளாதாரம் மிகவும் சீராக தொடந்து நீடித்து வருகின்றதை நாம் அறிவோம் .காரணம் அந்நாட்டின் மிகச்சிறந்த பொருளாதாரக்கொள்கை.சிறந்த கல்வித்திட்டம்.ஊழல் அற்ற தன்மை.ஆக்ககரமான அந்நிய முதலீடு.அரசியல் ஈடுபாடு எதுவும் இல்லாத சுதந்திரமான நீதித்துறை இதனை மலேசியா பின்பற்றினால் நம் நாடும் பொருளாதாரத்தில் சிறந்து விளங்கும்.

Leave a Reply