கைரி ஜமாலுதீன் x இப்ராஹிம் அலி விவாதம் நிகழும் !!! 30 Jul | செய்தி.

மலேசிய மாணவர் தலைவர்களின் 4வது மாநாடு இந்த வார இறுதியில் நடைபெறவிருக்கிறது. அதில் மலேசியப் பெரு மக்கள் பேசவிருக்கின்றனர். என்றாலும்  எம்பிக்களான கைரி ஜமாலுதீனும் இப்ராஹிம் அலியும் அவர்களில் முக்கியமானவர்கள்.

அவர்களுடன் ஷா அலாம் எம்பி காலித் சமாட்டும் ஒரே மேடையை பகிர்ந்து கொள்ளவிருக்கின்றனர். அவர்கள் பங்கு கொள்ளும் விவாதத்தின் தலைப்பு அவர்களுக்கு மிகவும் பிடித்தமான “அரசியலும் இனமும் ” என்பதாகும்.

அந்த மாநாட்டின் கருப்பொருள் ‘மலேசிய அரசியல் சிந்தனை- அரசியல் சித்தாந்தம் இனத்தை வலுப்படுத்துமா’ என்பதாகும்.

நேற்று மாலை வரை தனது பங்கேற்பு குறித்து உறுதியற்ற சூழ்நிலையில் இருந்த அது குறித்து தமது டிவிட்டர் பக்கத்தில் ஆதரவாளர்களின் கருத்தைக் கேட்டிருந்தார்.

இன்று மாலையில் கைரி தாம் அந்த மாநாட்டில் கலந்து கொள்வதை உறுதிப்படுத்தினார்.

மலேசியாகினிக்கு அனுப்பிய குறுஞ்செய்தியில் அவர் அந்தத் தகவலை தெரிவித்தார்.

மாநாட்டில் பங்கு கொள்வதை ஒட்டி தமது ரெம்பாவ் நிகழ்வுகளை தள்ளி வைப்பதாகவும் அவர் சொன்னார்.

தமது முடிவை அவர் டிவிட்டர் பக்கத்திலும் அறிவித்து விட்டார்.

கைரிக்கும் இப்ராஹிமுக்கு இடையில் வேறுபாடுகள் அதிகம்

அண்மைய வாரங்களில் கைரியும் இப்ராஹிமும் பல விஷயங்களில் மோதிக் கொண்டுள்ளனர்.

இப்ராஹிம் தலைமை தாங்கும் பெர்க்காசா மசீச இளைஞர் தலைவர் வீ கா சியோங்கைத் தாக்கிய போது கைரி வீக்கு ஆதரவாகப் பேசிய பின்னர் இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடுகள் முற்றத் தொடங்கின.

அதனைத் தொடர்ந்து கைரியை சொந்த இனத்துக்குத் ‘துரோகி’ என இப்ராஹிம் வருணித்தார். தனிப்பட்ட முறையிலும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.

இப்ராஹிம் கம்பத்து ஹீரோ என்றும்  சந்தர்ப்பவாதக் குண்டர் என்றும் கூட கைரி குறிப்பிட்டார்.

கைரி மோசமான தலைவர் என்றும் அவர் தலைமைத்துவத்தில் அம்னோ இளைஞர் பிரிவு நலிவடைந்து விட்டதாகவும் இப்ராஹிம் சொன்னார். கைரி மலாய் அடி நிலை மக்களுடைய தேவைகளை புறக்கணிக்கிறார் அதனால் ஏற்பட்ட வெற்றிடத்தை பெர்க்காசா நிரப்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மலேசியாகினி தலைமை ஆசிரியர் உரையாற்றுவார்

குவா மூசாங் எம்பி தெங்கு ரசாலி ஹம்சா மாநாட்டை தொடக்கி வைப்பார்.

துணைப் பிரதமர் முஹைடின் யாசின் உள்துறை அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசேன் ஆகியோரும் உரையாற்றுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மலேசியாகினி தலைமை ஆசிரியர் ஸ்டிவன் கானும் பேச்சாளர்களில் ஒருவர் ஆவார்.

 
You can leave a response, or trackback from your own site.

One Response to “கைரி ஜமாலுதீன் x இப்ராஹிம் அலி விவாதம் நிகழும் !!!”

  1. us subra says:

    sekurang kurang melayu bersatu

Leave a Reply