கல்வியாளர்களையும் மாணவர்களையும் அரசியலில் ஈடுபட அனுமதியுங்கள், அம்னோ இளைஞர் பிரிவு 30 Jul | செய்தி.

விரைவுரையாளர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் ஆகியோரும் அரசியலில் ஈடுபடுவதற்கு அனுமதியளிக்க வேண்டும் என அம்னோ இளைஞர் தலைவர் கைரி ஜமாலுடின் அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளார்.

ஆசிரியர்களைப் போல உயர்கல்விக்கழக மாணவர்களும் அரசியல் ஈடுபடுவதற்கு ஏதுவாக பல்கலைக்கழக – கல்லூரி பல்கலைக்கழக சட்டம் திருத்தம் செய்யப்பட வேண்டிய தருணம் நெருங்கி விட்டது என அவர் கூறினார்.

அந்த வாய்ப்பை பல்கலைக்கழக விரைவுரையாளர்கள், மாணாவர்கள் ஆகியோருக்கும் விரிவாக்க வேண்டும் என இளைஞர் பிரிவு அரசாங்கத்திடம் பரிந்துரைப்பதாக அவர் கூறினார். கோலாலம்பூரில் அந்தப் பிரிவின் செயற்குழு கூட்டத்திற்குத் தலைமையேற்ற பின்னர் கைரி செய்தியாளர்களிடம் பேசினார்.

உயர்கல்விக்கழக மாணவர்களும் விரிவுரையாளர்களும் அரசியலில் ஈடுபட அனுமதிப்பதன் வழி தரமான எதிர்காலத் தலைவர்களை உருவாக்க முடியும் என அவர் குறிப்பிட்டார்.

அதே வேளை வகுப்பறைக்கு அரசியல் கொண்டுவரப்படக் கூடாது என பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் வலியுறுத்தியிருப்பதற்கும் கைரி ஆதரவு தெரிவித்தார்.

-பெர்னாமா

 
You can leave a response, or trackback from your own site.

Leave a Reply