பிகேஎஃப்ஸெட்: வழக்கின் தீர்ப்புதான் முக்கியம், ரோனி லியு 30 Jul | செய்தி.

கிள்ளான் துறைமுகத் தீர்வையற்ற பகுதி மேம்பாடு ஊழல் தொடர்பில் “பெரிய தலை” ஒன்றை நீதிமன்றத்தில் நிறுத்திவிட்டால் மட்டும் போதாது. மாறாக அந்த விவகாரத்துக்கு உண்மையாகத் தீர்வு காணவேண்டும் என டிஎபியில் ரோனி லியூ வலியுறுத்தியுள்ளார்.

அந்த மேம்பாட்டுத் திட்டம் தொடர்பில் அரசாங்கத்தை ஏமாற்றியதாக போக்குவரத்து முன்னாள் அமைச்சர் டாக்டர் லிங் லியோங் சிக் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தாலும் அது முன்பே மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும் என பண்டமாரான் சட்டமன்ற உறுப்பினரான அவர் கருத்துரைத்தார்.

பிகேஎஃப்ஸெட் ஊழல் பற்றி 2004-க்கும் 2007-க்கு இடையே செய்த மூன்று போலீஸ் புகார் குறித்து போலீஸும் ஊழல் தடுப்பு நிறுவனமும் (தற்போது அது மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் என வழங்கப்படுகிறது) எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.

“லிங் மீது குற்றம் சாட்டியது நல்லதொரு நடவடிக்கை. பெரிய மீன் ஒன்றைப் பிடிப்பதற்கு கூட்டரசு அரசாங்கம், போலீஸ், எம்எசிசி, சட்டத்துறை அலுவலகம் ஆகியவை மேற்கொண்டிருக்கும் சிறிய முயற்சி இது”, என ஷா ஆலாமில் உள்ள மாநிலச் செயலகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் ரோனி குறிப்பிட்டார்.NONE

எவ்வாறாயினும் நம்பகத்தன்மையை ஏற்படுத்த வேண்டும் என்றால் லிங் மீதான நீதிமன்ற வழக்கு நல்லதொரு முடிவைத் தரவேண்டும் என 2004-ஆம் ஆண்டின் பிற்பகுதியில் அந்தச் சர்ச்சைக்குரிய திட்டத்தில் ஊழல் நடப்பதாக அம்பலப்படுத்திய ரோனி வலியுறுத்தினார்.

“லிங் மீதான குற்றச்சாட்டு கடைசியில் என்னவாகும் எனக் கருத்துரைக்க முடியாது. காரணம் “பெரிய தலைகள்” உடன் கடந்த காலங்களில் கசப்பான அனுபவங்கள் உண்டு. பெரும்பாலானவை போதிய ஆதாரங்கள் இல்லாததால் தள்ளுபடி செய்யப்பட்டன.”

“ஆயினும் அரசு தரப்பில் போதிய ஆதாரங்கள் இல்லாததால் தள்ளுபடி செய்யப்படும் வழக்குகளில் ஒன்றாக இதுவும் ஆகாது என நாங்கள் நம்புகிறோம்”, என ரோனி தெரிவித்தார்.

அமைச்சரவையில் தவறான தகவலைத் தந்த குற்றச்சாட்டு

கிள்ளான் துறைமுகத் தீர்வையற்றப் பகுதி திட்டத்துக்காக புலாவ் இண்டாவில் 999.5 ஏக்கர் நிலத்தைக சதுர அடி 25 ரிங்கிட் என்ற விலையில் கொள்முதல் செய்யவும் அதற்கான தொகையை 15 ஆண்டுகளில் 7.5 விழுக்காட்டு வட்டியுடன் கட்டுவதாகவும் இணக்கம் காணப்பட்டது தொடர்பில் 2002 செப்டம்பர் 25-ஆம் தேதிக்கும் நவம்பர் 6-ஆம் தேதிக்கும் இடையே அமைச்சரைவில் தவறானத் தகவலை லிங் வழங்கியதாக நேற்று அவர் மீது புத்ராஜெயா செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.

இதனால் அந்த நிலத்தைக் கொள்முதல் செய்வதற்கான மொத்த செலவு 720 மில்லியன் ரிங்கிட்டை எட்டியுள்ளது.

தண்டனைச் சட்டம் 417-ஆவது பிரிவின் கீழ் லிங் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.NONE

நீதிமன்றத்தின் அந்த நடவடிக்கை சிறிது நம்பிக்கையை ஏற்படுத்தியிருப்பதாகக் குறிப்பிட்ட ரோனி லியு அரசு தரப்பு மேலும் ஆதாரங்களைத் திரட்டுவதற்கு ஏதுவாக அதிகமான சாட்சிகள் விசாரிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.

லிங் மீது குற்றம் சாட்டியிருப்பதன் வழி பிகேஎஃப்ஸெட் ஊழல் பற்றி 2004-க்கும் 2007-க்கு இடையே செய்த மூன்று போலீஸ் புகார்களின் உண்மை வெளிச்சத்துக்கு வந்திருப்பதாகக் கூறிய அவர் அந்த புகார்கள் குறித்து இன்னும் அதிகமான ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாகத் தெரிவித்தார்.

ஆயினும் அந்த ஆதாரங்கள் குறித்து விவரிக்க மறுத்த அவர் லிங் மீதான வழக்கு தொடர்பில் நீதிமன்றம் தன்னிடம் கேட்டுக்கொண்டால் அவற்றை வெளியிடத் தயாராக இருப்பதாக் குறிப்பிட்டார்.

“போலீசும் நீதிமன்றமும் சாட்சியமளிக்க என்னை அழைத்தால் அப்போது அவர்களுக்குத் தெரியும் அவை என்ன ஆதாரங்கள் என”, என்றும் அவர் கூறினார்.

லிங்குக்கு எதிரான அந்தக் குற்றச்சாட்டு பொதுக்கணக்காய்வுக் குழுவினுடையது இல்லை என்பதாலும் போலீஸ் விசாரணையை அடிப்படையாகக் கொண்டது என்பதாலும் அரசு தரப்பு லியூவைச் சாட்சிக்கு அழைப்பது சரியான நடவடிக்கையாக இருக்கும் என செகாம்புட் டிஎபி நாடாளுமன்ற உறுப்பினர் லிம் லிப் எங் குறிப்பிட்டார்.

“போலீஸ் வழக்குகளில் புகாரின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் எந்தக் குற்றச் சாட்டும் நீதிமன்றத்தில் விசாரிக்கப்படலாம்”, என லிம் கூறினார்.

 
You can leave a response, or trackback from your own site.

Leave a Reply