ஆகக் கடைசி தகவல்கள்
பில்லியன் கணக்கிலான ரிங்கிட் கிள்ளான் துறைமுக தீர்வையற்ற வாணிக வட்டார ஊழலில்
சம்பந்தப்பட்டதற்காக, முன்னாள் போக்குவரத்து அமைச்சர் லிங் லியோங் சிக், காஜாங் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்டார்.
67 வயதான லிங், அண்மைய ஆண்டுகளில் கைது செய்யப்பட்டுள்ள மிகவும் பிரபல்யம் வாய்ந்த
அரசியல்வாதியாவார்.
2002ஆம் ஆண்டு செப்டம்பர் 25க்கும் நவம்பர் 6ஆம் திகதிக்குமிடையே, இப்போது பிகேஎப்சட் (PKFZ) என்றழைக்கப்படும் திட்டத்துக்காக பூலாவ் இண்டாவில், 999.5 ஏக்கர் நில கொள்முதலுக்கு
அமைச்சரவையை ஒப்புக்கொள்ளச் செய்து தவறாக இட்டுச் சென்றதற்காக, குற்றவியல் சட்டத்தின் பிரிவு 418ன் கீழ் அவர் குற்றம்சாட்டப்பட்டார். அந்த நிலத்தின் கொள்முதல் விலை, ஒரு சதுர அடிக்கு 25ரிங்கிட். 7.5விழுக்காடு வட்டி விகிதத்தில் 15ஆண்டுகளுக்குள் அந்த கடன் விட்டு விட்டு அடைக்கப்படும்.
கடன் திரும்ப அடைக்கப்படுவதற்குள், மொத்தம் செலுத்தப்பட்ட வட்டித் தொகை, 720மில்லியன் ரிங்கிட்டாக இருக்கும்.
அதே குற்றத்துக்காக, குற்றவியல் சட்டத்தின் பிரிவு 417ன் கீழ், லிங்கிற்கு, மாற்றுக் குற்றச்சாட்டும்
முன்வைக்கப்பட்டது.
குற்றப்பத்திரிகையின்படி, நிதியமைச்சு ஏற்கனவே, ஒரு சதுர அடிக்கு 25ரிங்கிட்டில் நிலத்தை மதிப்பிட்டது.
- அதில் வட்டித் தொகை முழுவதும் அடங்கும் – அந்த கூற்றை, குற்றம்சாட்டப்பட்டவர் அமைச்சரவையிடமிருந்து மறைத்து விட்டார்.
அந்த இரண்டு குற்றச்சாட்டுக்களையும் லிங் மறுத்து விட்டார். செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி சுசானா ஹுசேன் ஒரு மில்லியன் ரிங்கிட் பிணை பணம் நிர்ணயித்துள்ளார்.
ஆகக் கடைசியான தகவலின்படி, அந்த பிணைப் பணத்தை லிங் செலுத்தியுள்ளார்.
ஆர்ஆர் சேது, லிங்கின் வழக்குரைஞராவார்.
இவ்வேளையில், காஜாங் செஷன்ஸ் நீதிமன்றத்தை அடுத்துள்ள, புத்ரா ஜெயா Palace of Justiceல் தாம் நுழைவது இது முதல் முறையாகும் என நீதிமன்றத்தை விட்டு வெளியேறுகையில், லிங் பத்திரிகையாளர்களிடம் கூறினார்.
இந்த வழக்கில் வெற்றி பெறுவாரா என வினவப்பட்டபோது, “இந்த நீதி மாளிகையில், நீதி கிடைக்கும் என்பதில் நம்பிக்கை உள்ளது என்றார்.
