10-ஆவது மலேசியத் திட்டம் மீதான பினாங்கு ஆய்வரங்கில் வாய்ச்சண்டை 29 Jul | செய்தி.

பினாங்கு மலேசிய அறிவியல் பல்கலைக்கழகத்தில் நேற்று நடைபெற்ற புதிய பொருளாதார வடிவம் மீதான பொது ஆய்வம் அம்னோவுக்கும் மக்கள் கூட்டணிக்கும் இடையிலான அரசியல் விவாத மேடையாக மாறியதால், அதில் கலந்துகொண்டோர் வியப்புக்கு ஆளாகினர்.

அந்த விவாதத்தின் போது 2008 பொதுத்தேர்தலின் போது கெ-அடிலான் தேர்தல் அறிக்கையை சுட்டிக்காட்டி நிதித்துணை அமைச்சர் அவாங் அடேக் ஹுசேன் சுபாங் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர் சிவராசாவைக் கண்டித்தார்.

பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் பொருளாதாரக் கொள்கைகள் குறித்து விமர்சித்த சிவராசாவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சிலாங்கூர் அரசாங்கத்தில் அண்மையில் ஏற்பட்டிருக்கும் அரசியல் நெருக்கடிகளான சட்டவிரோத மணல் அள்ளும் நடவடிக்கைகள், சகாக்களுக்கு தனிச்சலுகை அளிப்பது ஆகியவற்றை அவாங் அடேக் சுட்டிக்காட்டினார்.penang usm forum 280710 01

அண்மையில் ஊராட்சி மன்ற உறுப்பினர் ஒருவர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினரின் அதிகாரத்துவக் கடிதத்தாளைப் பயன்படுத்தி ஒரு மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான குத்தகைகளைப் பெற்றதாகத் தகவல் வெளியானது. ஆயினும், சம்பந்தப்பட்ட தரப்பு அதனை நேற்று நிராகரித்தது.

“உண்மையில் நாட்டை நிர்வகிப்பது மிகக் கடினம். தற்போது ஒரு மாநிலத்தை நிர்வகிப்பதே கேள்விக்குறியாகியுள்ளது. சிலாங்கூரில் என்ன நடந்தது என நாம் அறிவோம். இன்னும் ஒரு தவணைக்கூட ஆகாத நிலையில் ஊராட்சி மன்ற உறுப்பினர் ஒருவர் அதிகாரத்துவக் கடிதத்தாளைப் பயன்படுத்தி அரசாங்கக் குத்தகைகளைப் பெறுகிறார்”, என அம்னோவால் நியமிக்கப்பட்ட மேலவை உறுப்பினரான அவர் கடுமையாச் சாடினார்.

” அது குறித்து மிகவும் குழம்பியுள்ள சிலாங்கூர் மந்திரி பெசார் விசாரணை நடைபெற்றுவருவதாகக் கூறுகிறார். ஆனால் நீங்கள் வெளிப்படையான போக்கு குறித்து பேசுகிறீர்கள். சிலாங்கூரில் நிகழ்ந்த இது மட்டும் வெளிப்படையான ஒன்றா,” என அவாங் அடேக் சிவராசாவை நோக்கி வினவினார்.penang usm forum 280710 awang adek hussin

கொள்கை ஆய்வு மற்றும் அனைத்துலகக் கல்வி மையம் (சென்பிரிஸ்) ஏற்பாடு செய்திருந்த அந்தக் கொள்கை மீதான விவாதத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். பேச்சாளர்களாக கலந்துகொண்ட அவாங் அடேக்கும் திரங்கானு முன்னாள் மந்திரி பெசார் இட்ரிஸ் ஜுசோவும் நாட்டின் மந்தமான பொருளாதார அடைவுநிலையை நியாயப்படுத்திய வேளையில் மக்கள் கூட்டணி கடந்த பொதுத் தேர்தலின் போது வாக்குறுதியளித்த கொள்கைகளை நடைமுறைபடுத்தவில்லை எனச் சாடினர்.

பேராசிரியர் சான் சீ கூன் வழிநடத்திய அந்த விவாத நிகழ்ச்சியில் சென்பிரிஸ் இயக்குநர் முஹமட் அஸ்ஹாரி கரிம், கோலாலம்பூரில் உள்ள கொள்கை வகுப்பு மைய இயக்குநர் லிம் தெக் கீ ஆகியோரும் பேச்சாளர்களாகக் கலந்துகொண்டனர்.

ஆய்வரங்கில் நடுக்கம்

அண்மையில் நாட்டை திடுக்குறச் செய்த 81 விழுக்காட்டு அந்நிய முதலீடுகள் இழப்பு குறித்தும் மலேசியாவின் உயர்கல்வி கற்றோர் நாட்டை விட்டு வெளியேறுவது குறித்தும் சிவராசா அந்த ஆய்வரங்கில் பேசத் தொடங்கிய போது அவாங் அடேக்குக்கு நடுக்கம் ஏற்பட்டது.

மலேசியாவின் அடைவுநிலை அண்டைநாடுகளைக் காட்டிலும் மோசமாக இருப்பதாகவும் நாட்டின் வளப்பம் குன்றிவருவதால் மக்கள் அயல்நாடுகளில் குடியேறுவதாகவும் சிவராசா குறிப்பிட்டார்.penang usm forum 280710 sivarasa rasiah

மிகப் பெரிய திட்டங்கள் மற்றும் அரசாங்கக் குத்தகைகளில் வெளிப்படையான போக்கு கடைபிடிக்கப்படாதது, நீதி பரிபாலனத்தில் நடுநிலையில்லாமை, உண்மையான மக்களாட்சி அரசாங்கத்தை இன்னும் எட்டாதது போன்ற சர்ச்சைக்குரிய விவகாரங்களையும் வழக்குரைஞரான சிவராசா தொட்டு பேசினார்.

தொடர்ந்து அவாங் அடேக்குக்கு பதிலளிக்கையில் கல்வியாளர்கள் நாட்டை விட்டு வெளியேறும் விவகாரத்துக்கு அரசாங்கம் உடனடி கவனம் செலுத்த வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார். பல இனங்களையும் சார்ந்த நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான மலேசியர்கள் நாட்டைவிட்டு வெளியேறுகின்றனர் அல்லது அயல்நாடுகளில் முதலீடு செய்கின்றனர் என சிவராசா சுட்டிக்காட்டினார்.

வாய்ப்பும் வசதியும் வழங்கப்பட்டால் சட்டவிரோத மணல் அள்ளும் நடவடிக்கை, சகாக்களுக்குச் சலுகை  போன்ற விவகாரங்கள் தொடர்பிலான எல்லாக் குற்றச் சாட்டுகளுக்கும் பதிலளிக்க சிலாங்கூர் அரசாங்கம் தயாராக இருப்பதாக சிவராசா தெரிவித்தார்.

“நீங்கள் எழுப்பிய மணல் விவகாரம் முக்கியமான ஒன்றுதான், நான் பதிலளிக்கத் தயாராக இருக்கிறேன் ஆனால் அதை தேசிய தொலைக்காட்சியின் வாயிலாக சொல்லவிரும்புகிறேன். முடிந்தால் டிவி3-இல் 20 நிமிடம் எனக்கு ஒதுக்க வேண்டும். நாங்கள் விடையளிக்க அதுதான் எங்களுக்கு வேண்டும். ஒவ்வொரு நாளும் விவாத்தில் கலந்துகொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம். நான் நம்பச் சொல்லவில்லை, கேட்க மட்டுமே சொல்லுகிறேன்,” என அவர் கூறினார்.

“வாருங்கள் விவாதிக்கலாம், முடிவு நாம் ஒப்புக்கொள்கிறோமா இல்லாயா என்பது அல்ல; எனது சகா சிலாங்கூர்penang usm forum 280710 idris jusoh மந்திரி பெசார் சொல்வதைக் கேட்டு மக்கள் பயனுறவேண்டும். ஆனால் மணல் விவகாரம் மட்டுமல்ல மற்றவற்றையும் விவாதிக்கவேண்டும். பின்னர் மக்களே அந்த விவகாரத்தின் உண்மை குறித்து முடிவுசெய்துகொள்வர்,” என அவர் மேலும் குறிப்பிட்டார்.

இதனிடையே பக்காத்தான் தலைவர்கள் வெளிப்படையான அரசாங்கம் குறித்து மட்டுமே பேசி வருவதாக 2008 முதல் மாராவின் இயக்குநராக இருந்துவரும் இட்ரிஸ் கூறினார்.

வெளிப்படையான போக்கு, ஊழல் போன்ற விவகாரங்களை அம்னோ அடையாளம் கண்டு நல்ல மாற்றாங்களைக் கொண்டுவருவதாகவும் மலேசியர்கள் அனைவரும் ஒன்றாகப் பலனை அனுபவிப்பர் என்றும் அவர் பங்கேற்பாளர்களிடம் உறுதியளித்தார்.

“வெளிப்படையான போக்கு என்பது எதிர்கட்சிகளுக்கு மட்டும் உரியதல்ல, அம்னோவிலும் அதனை நாம் வலியுறுத்துகிறோம். ஆனால் தற்புகழ்ச்சிக்காக நாம் அதனைக் குறிப்பிடவில்லை, அவாங் அது குறித்து விவரித்துள்ளார்”, என அவர் கூறினார்.

“ஊழலைத் துடைத்தொழிப்பது குறித்து நீங்கள் பேசுகையில், அம்னோவிலும் அது குறித்து நாங்கள் பேசுகிறோம். அதனால்தான் புதிய பொருளாதார வடிவம், பத்தாவது மலேசியத் திட்டம் ஆகியவற்றை நாங்கள் கொண்டுவந்துள்ளோம்”, என இட்ரிஸ் மேலும் விவரித்தார்.

 
You can leave a response, or trackback from your own site.

Leave a Reply