அதிபர் பதவியால் இழந்த சந்தோஷங்கள், ஒபாமா 13 Jul | உலகச் செய்திகள்.

பொது இடத்தில் நடைபயிற்சி மேற்கொள்வது, குழந்தைகளை வெளியே அழைத்துச் செல்வது போன்ற சிறுசிறு சந்தோஷங்களை இழந்து விட்டேன் என்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கூறியுள்ளார்.

http://paxcommunications.org/news/wp-content/uploads/2009/06/obama_lg.jpgபொதுவாக உயர் பதவிகளில் இருப்பவர்கள் சராசரி மனிதர்கள் அனுபவிக்கும் பல சிறிய சந்தோஷங்களை இழக்க வேண்டியது வரும். அவர்களால் பொது இடங்களுக்கு தனியாக சென்று வர முடியாது. பாதுகாப்பு அதிகாரிகள் இல்லாமல் ஊரைச் சுற்றிப் பார்க்க முடியாது. இதனை ஒபாமா வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார். இஸ்ரேல் தொலைக்காட்சிக்கு அவர் வியாழக்கிழமை பேட்டியளித்தார். அப்போது அதிபரானதால் எதையாவது இழந்ததாக எண்ணுகிறீர்களா என்று கேட்கப்பட்டது. இதற்கு ஒபாமா அளித்த பதில்:

அமெரிக்க அதிபராகும் முன் எனக்கு கிடைந்த சில மகிழ்ச்சியான தருணங்களை இப்போது நான் நினைத்தாலும் மீண்டும் அனுபவிக்க முடியவில்லை. பொது இடங்களில் தனியாக நடந்து செல்வது, ஐஸ் கிரீம் வாங்கிக் கொடுப்பதற்காக குழந்தைகளை வெளியே அழைத்துச் செல்வது, பூங்காவில் அமர்ந்து தனிமையில் இயற்கை அழகை ரசிப்பது போன்றவை சராசரி மனிதர்களுக்கு மகிழ்ச்சி தரும் தருணங்களாகும்.

இப்போது அதிபராகிவிட்டதால் இதுபோன்ற சந்தோஷங்களை என்னால் அனுபவிக்க முடியவில்லை. அவற்றை அனுபவித்த நாள்களை எண்ணி திருப்தியடைந்து கொள்ள வேண்டியுள்ளது. பாதுகாப்பு அதிகாரிகள், ஹெலிகாப்டர் கண்காணிப்பு இல்லாமல் வெளியே செல்ல முடிவதில்லை என்றார்.

ஜெருசலேம் நகருக்கு முதலில் வந்த அனுபவத்தை பற்றிக் கூறிய ஒபாமா, அப்போது பழமையான அந்த நகரத்தைக் கண்டு ஆச்சர்யமடைந்தேன். தெருக்களில் சுதந்திரமாகச் சுற்றினேன். இப்போது அது நடக்காத விஷயம் என்றார்.

அதிபர் பதவி குறித்த கேள்விக்கு, “போர்க் களத்தில் இளைஞர்களைக் குவிப்பதா, வேண்டாமா?, உலகக் பொருளாதார நிலையை மேம்படுத்த மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் போன்றவை தொடர்பாக நான் எடுக்கும் முடிவுகள் அனைத்தும் நூறு சதவீதம் சரி என்று கூறிவிட முடியாது.

இன்றைய சூழ்நிலையில் எது சரி என்று தோன்றுகிறதோ, அதன் படி முடிவு எடுக்கப்படுகிறது. நாம் செய்வது சரியா அல்லது தவறா என்பதை வரும் காலம்தான் தீர்மானிக்கும்.

 
You can leave a response, or trackback from your own site.

Leave a Reply