மலேசியாவை மாற்றுவதற்கு சீன அமைப்புகளின் 20 ஆண்டு திட்டம் 4 Jul | சிறப்பு செய்தி.

நாடு எதிர்கொண்டுள்ள பிரச்னைகளைக் கவனித்து அவற்றுக்குத் தீர்வுகாண்பதற்கு 20 ஆண்டு செயல் திட்டம் ஒன்றை ஹுவா ஸோங் என்ற மலேசிய சீன மன்றங்களின் சம்மேளனம் வரைந்துள்ளது.

அச்செயல் திட்டத்தின் இரண்டாண்டுகளுக்கான (2010-2011) முதல் கட்டத்தில் 13 முக்கிய பிரச்னைகள் கவனிக்கப்படும். கற்றோர் நாட்டை விட்டு வெளியேறுவதைத் தடுத்தல், மாணவர்கள் பாதியில் படிப்பை நிறுத்துவதை முடிவிற்கு கொண்டுவருதல், சீன அமைப்புகளை வலுப்படுத்தல், மற்றும் இந்நாட்டு சமூகங்களின் உரிமைகளுக்கு ஊக்கமளித்தல் ஆகியவை அவற்றில் அடங்கும்.

புதிய பொருளாதார வடிவம் செயல்படுத்தப்படுவதைக் கண்காணிப்பதற்காக நிபுணர்கள் அடங்கிய குழு ஒன்றை அமைப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

“நாட்டை மாற்றுதல்: மலேசியாவுக்கான 20 ஆண்டு செயல் திட்டம்” என்ற தலைப்பைக்கொண்ட திட்டத்தை ஹுவா ஸோங் தலைவர் பெங் யின் ஹுவா கடந்த வியாழக்கிழமை வெளியிட்டார். இத்திட்டம் அனைத்து மக்களுக்கும் நன்மை பயக்கும் என்று நம்புவதாக அவர் கூறினார்.

“அனைத்து மலேசியர்களின் நலனின் நாம் அக்கறை கொண்டுள்ளோம். நமது நாட்டிற்கு ஆக்ககரமான மாற்றத்தை கொண்டுவருவதில் இத்திட்டம் வெற்றி பெறும் நாம் நம்புகிறோம்”, என்று அவர் கேஎல் மற்றும் சீன அசம்பிளி மண்டபத்தில் ஆற்றிய உரையில் கூறினார்.

1991 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட ஹுவா ஸோங் தேசிய அளவில் பெரும் சீன அமைப்புகளைப் பிரதிநிதிக்கிறது.

குறுகிய கால நடவடிக்கையாக கவனம் செலுத்தப்படுபவற்றில் ஊராட்சி தேர்தல்கள்  மீண்டும் நடத்துவதற்கு ஆதரவு தேடப்படும் என்று பெங் மேலும் கூறினார்.

ஹுவா ஸோங் அதனுடன் தொடர்புடைய அரசு சார்பற்ற அமைப்புகள் மற்றும் தன்னார்வலர்கள் ஆகியோருடன் இணைந்து இத்திட்டத்தை அமல்படுத்தும் என்று செயல் திட்டத் தலைவர் டான் யுவ் சிங் கூறினார்.

“நமது நாட்டிற்கு ஒரு மாற்றத்தைக் கொணர விழையும் அனைவருக்கும் நாம் ஓர் அரங்கை வழங்குகிறோம். இத்திட்டம் இன வேறுபாடின்றி அனைத்து மலேசியருக்கும் உதவுவதாகும்.

“சம்பந்தப்பட்ட அதிகாரத்துவ அமைப்புகள், வாணிக சமூகம் மற்றும் பொதுச்சமூகம் ஆகியவை அதனதன் பங்கை அவற்றுக்குச் சொந்தமானதாக ஏற்றுக்கொள்ள வேண்டும்”, என்று அவர் மேலும் கூறினார்.

இத்திட்டம் அனைத்து இனங்களையும் சார்ந்த 33 உள்ளூர் கல்விமான்கள் மற்றும் சமூக தன்னார்வலர்களால் வரையப்பட்டது என்று அவர் மேலும் கூறினார்.

-த ஸ்டார்

 
You can leave a response, or trackback from your own site.

3 Responses to “மலேசியாவை மாற்றுவதற்கு சீன அமைப்புகளின் 20 ஆண்டு திட்டம்”

  1. பிதாமகன் says:

    சரி!….. சரி!……. திட்டமெல்லாம் பிரமாதமாகத்தான் உள்ளது…இந்த திட்டத்தில் அரசாங்கத்தின் கறுத்து என்ன ? அவர்கள் ஒத்துழைப்பார்களா? நிறைவேரும்மா?

  2. Kumaravel says:

    Dear Indian political friends,

    What is Indian goal and plan towards Malaysian Indian’s developments?

  3. MOHAN says:

    SAY NO TO RACISM… ESPECIALLY BETWEEN TOP POLITICIAN,CIVIL SERVANTS,SCHOOLS.,
    RECENTLY I WENT ONE OF SEK KEBANGSAAN IN JOHOR, WHEREBY ONE OF THE SCHOOL TEACHER WHICH THINKING HE IS MANUSIA BERTAMADUN TINGGI STOP NON-MALAY PUPILS NOT TO JOIN MAKAN BERSAMA OPENLY..
    SEDIH…WHAT HAPPEN 1MALAYSIA CONCEPT AMONG THEM..PLS DO NOT BE FANATIC N EXTREMIST. GOD IS PENYAYANG..AND PLS DO NOT DRAINAGE OUT BEST BRAIN..FRM COUNTRY..AND THINK TO UPGRADE EDUCATION SYSTEM NOT DOWNGRADE…
    EVRY MALAYSIAN RESPONSIBLE FOR MOVE FORWARD…

Leave a Reply