நசீர் சாபாருக்கு எதிராக மேல் நடவடிக்கை இல்லை, நஸ்ரி 29 Jun | சிறப்பு செய்தி.

பிரதமர் நஜிப்பின் முன்னாள் சிறப்பு அதிகாரி இவ்வாண்டு தொடக்கத்தில் மலாக்காவில் ஆற்றிய உரையில் இனத்துவேச குற்றம் ஏதும் புரியவில்லை என்று அதிகாரிகள் அவரை விடுவித்துள்ளனர்.

நாசீரிடமிருந்து வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டதாகவும் தேசநிந்தனைச் சட்டம் 1948 செக்சன் 3 (1) இன் கீழ் நசீர் இனத் துவேசத்தை தூண்டும் நோக்கம் கொண்டிருந்தார் என்பதை நிரூபிப்பதற்குப் போதுமான ஆதாரம் இல்லை என்று சட்ட அமைச்சர் முகமட் நஸ்ரி அப்துல் அசிஸ் இன்று கூறினார்.

“மேலும், நசீர் சம்பவம் நடந்த இரண்டு நாள்களுக்குப் பிறகு பகிரங்கமாக மன்னிப்பு கோரியதோடு அவருக்கு தேசநிந்தனை பிரச்னைகள் பற்றி பேசும் அல்லது இதர இனத்தை அவமதிக்கும் நோக்கம் இருந்ததில்லை என்று கூறியுள்ளார்.

“(நசீரின்) அறிக்கைகள் பொருளீட்ட வந்த குடியேறிகளைப் பற்றி குறிப்பிட்டதே தவிர, உள்ளூரில் பிறந்த சீனர்கள் அல்லது இந்தியர்களைப் பற்றி அல்ல”, என்று நஸ்ரி (டிஎபி-பூச்சோங்) கோபிந்த் சிங் டியோவின் கேள்விக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் கூறியுள்ளார்.

மன்னிப்பு கோரிய அதே நாளில் நசீர் பிரதமர் அலுவலக பதவியிலிருந்து விலகியதாக நஸ்ரி மேலும் கூறினார்.

மேற்கூறப்பட்ட காரணங்களுக்காக மேல் நடவடிக்கை எடுப்பதில்லை என்று தீர்மானிக்கப்பட்டதாக நஸ்ரி கூறினார்.

பெப்ரவரி மாதம் மலாக்காவில் மாநில பாரிசான் பங்காளிக்கட்சிகள் பங்கேற்ற ஒரே மலேசியா நிகழ்ச்சியில் நசீர் சீனர்களையும் இந்தியர்களையும் “குடியேறிகள்” என்று வர்ணித்தார்.

சீனப் பெண்கள் விபச்சாரிகளாகவும் இந்தியர்கள் பிச்சைக்காரர்களாகவும் மலேசியாவிற்கு வந்தனர் என்று நசீர் கூறியதால் அந்நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களில் பலர் சினமடைந்தனர்.

எஸ்பிஎம் தேர்வுக்கான பாடங்களுக்கு அரசாங்கம் நிர்ணயிக்க விரும்பும் உச்ச வரம்பை எதிர்ப்பவர்களின் குடியுரிமை ரத்துச் செய்யப்படும் என்றும் நசீர் மிரட்டினார்.

இதனைத் தொடர்ந்து மசீச மற்றும் மஇகா பிரதிநிதிகள் அந்நிகழ்ச்சியிலிருந்து வெளிநடப்புச் செய்தனர்.

 
You can leave a response, or trackback from your own site.

8 Responses to “நசீர் சாபாருக்கு எதிராக மேல் நடவடிக்கை இல்லை, நஸ்ரி”

  1. malaysia tamilan says:

    Ini dah tahu..kalau mereka buat memang tak salah..!! Apakah tindakan mic sekarang..?

  2. surian says:

    ஆட்சி எதிர் கட்சிக்கு போனால் தவிர நமக்கு
    இங்கே ஒன்றுமே இல்லை

  3. MUSA says:

    ITU THANDA ONE MALAYSIA

  4. Parameswaran says:

    dah tau lah dia orang boleh cakap macam -macam tapi tak salah. cuba kita cakap terus ISA, double standard, biar negara ini kena sumphan Tuhan,

  5. guna says:

    அவருக்குத் தண்டனைக் கொடுக்க மாட்டார்கள் என்பது எல்லோருக்கும் தெரிந்த உண்மை. அவர்கள் என்ன வேண்டுமானாலும் பேசலாம். சட்டம் ஒன்றும் செய்யாது. போலிஸ் கைக்கட்டி வேடிக்கைப் பார்க்கும். நாம் பேசினால் நமக்கு ISA. அவர்கள் பேசினால் அராஜக அரசாங்கத்தின் ஆசி கிடைக்கும். சரித்திர சான்று தெரியாத கழுசடைகள் எதையாவது பேசிக் கொண்டேயிருக்கும். பேசட்டும்…வாய்க்கிழிய பேசட்டும்.காலம் பதில் சொல்ல ஆரம்பிக்கும் போது தானாக மூடும்.ஆதங்கம் அவதாரமாகும் காலம் வரும்.

  6. Kudimagan says:

    Agaknya PM kita sudah memberi kebenaran kepada Nasir untuk bercakap begitu,Kan ini satu UMNO. Semua pun boleh.Bila orang UMNO atau komponen BN buat salah mereka tak akan ambil tindakan terhadap mereka tetapi orang lain mereka akan mancari kesalahan.Itulah pencapaian didahulukan dan rakyat diutamakan oleh kerajaan BN selama ini.Siapa pengemis? Orang yang rompak duit kerajaanlah pengemis.Perompak duit rakyatlah (Khazanah) Pengemis. Bukan rakyat yang memajukan Negara ini.

  7. jayain says:

    Better our vote next election for opsition party.

  8. SHANLA says:

    INILAH 11111111111 MALAYSIA HE HE HE HE HE HE HEEEEEE

Leave a Reply