“இறுதியாக இறுதி முடிவு எடுக்கப்பட்டு விட்டது: சட்டப்பூர்வ விளையாட்டுப் பந்தயம் என்பது இல்லை. எல்லா வாக்குவாதங்களுக்கும் முடிவில், அஸ்கோட் ஸ்போர்ட்ஸுக்கு தொடக்கத்தில் கொடுக்கப்பட்ட அங்கீகாரத்தை நிதி அமைச்சு மீட்டுக் கொண்டு விட்டதாக பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் அறிவித்தும் விட்டார்.”
அங்கீகாரம் கொடுக்கப்பட்டதை ஆனால் ‘கொள்கை அளவில்’ என்று அவர் ஒப்புக் கொண்டுள்ளார். அது அஸ்கோட்டுக்கு அனுமதி கொடுக்கப்படவில்லை என்று அவர் ஜுன் 15ம் தேதி கூறியதற்கு முரணாகும் என்பதை அவரே உறுதிப்படுத்தியுள்ளார்.
அங்கீகாரத்தை ரத்துச் செய்வது அரசாங்கத்துக்கு நல்ல சகுனம் அல்ல. அரசாங்கம் பின் வாங்கியுள்ள இன்னொரு காரியமாக அது கருதப்படுகிறது.
கடந்த சில ஆண்டுகளாக அரசாங்கம் பல விஷயங்களில் நிலை தடுமாறி முதலில் எடுத்த முடிவுகளிலிருந்து பிறண்டுள்ளது. அதனால் முழுக் கட்டுப்பாடும் அதனிடம் இல்லையோ என எண்ணத் தோன்றுகிறது.
முதலில் ஏன் அவசரப்பட்டு அனுமதியைக் கொடுக்க வேண்டும்? அதுவும் அரசியல் சூழ்நிலை கடுமையாக இருக்கும் வேளையில் விளையாட்டுப் பந்தயத்தை சட்டப்பூர்வமாக்குவது எதிர் விளைவுகளை ஏற்படுத்தும் என்று உறுதியாகத் தெரிந்தும் அரசாங்கம் ஏன் அவ்வாறு செய்தது?
அந்த விஷயத்துக்கு அரசியல் முலாம் பூசப்படும் என்பதை நஜிப்பும் அவரது பிஎன் தோழர்களும் சீர்தூக்கிப் பார்க்கவில்லையா? அரசியல் ஆதாயத்துக்கு அதனைப் பயன்படுத்திக் கொண்டு பெரிய அளவில் விளையாட்டுப் பந்தய ஆர்ப்பாட்டத்துக்கு எதிர்த்தரப்பு ஏற்பாடு செய்யும் என பிஎன் எதிர்பார்க்கவில்லையா? அது பிஎன்னை பாதகமான சூழ்நிலைக்குக் கொண்டு சென்றிருக்கும். குறிப்பாக முஸ்லிம் வாக்காளர்களிடையே எதிர்மறையான கண்ணோட்டம் உருவாகியிருக்கும். டிஎபி போன்ற கட்சி கூட அதனை முஸ்லிம் வாக்காளர்களைக் கவர பயன்படுத்தியிருக்கும்.
முகமட் நஸ்ரி அப்துல் அஜீஸ், ராயிஸ் யாத்திம் போன்ற அமைச்சர்கள் கூட அதனைச் சட்டப்பூர்வமாக்குவதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். முஸ்லிம் அல்லாதவரின் உரிமைகளை மதிக்குமாறு அவர்கள் வேண்டுகோள் விடுத்தனர். அவர்கள் கூறிய காரணத்தை சகித்துக் கொள்வதற்கு நமக்கு பொறுமை வேண்டும்.
உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டிகள் மட்டும் விளையாட்டுப் பந்தயத்தை சட்டப்பூர்வமாக்கும் முயற்சிகளுக்குக் காரணமாக இருக்க முடியாது. நாட்டின் கருவூலம் வற்றி வருவதால் வருமானத்தை எப்படியாவது தேட வேண்டிய சூழ்நிலையில் அரசாங்கம் இருக்கிறதா?
அந்த நிலை இருந்தால் முஸ்லிம்கள் வெறுக்கும் ஒரு நடவடிக்கையிலிருந்து முஸ்லிம் அல்லாதாரிடமிருந்து ஆதாயத்தைப் பெறுவது எப்படி பார்க்கப்படும்? சமய தார்மீக பிரச்னைகள் தோன்றாதா?
அரசாங்கம் பாதி உண்மைகள்
இப்போது ஒரு வழியாக அந்த விஷயத்துக்கு முடிவு கட்டப்பட்டு விட்டது. அதில் பாதிக்கப்பட்டுள்ளது அஸ்கோட் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் ஆகும். அது அரசியல் வலைப்பதிவுகளிலும் செய்தி இணையத் தளங்களிலும் கடுமையாக விமரிசிக்கப்பட்டுள்ளது. என்றாலும் அரசாங்கத்தின் தோற்றம் பாதிக்கப்பட்டுள்ளது என்பதுதான் இங்கு முக்கியமான விஷயம் ஆகும். அந்த நிறுவனம் நேர்மையான முறையில் நடத்தப்படவில்லை. அந்த நிறுவனம் எப்படிப்பட்டதாக இருந்தாலும் முதலில் கொடுக்கப்பட்ட வாக்குறுதியை மீறுவது சரியானது அல்ல. எந்த ஒரு திட்டத்தையும் அமலாக்குவதற்கு முன்னர் மக்களுடன் கலந்தாய்வு செய்வதாக அண்மையில் அரசாங்கம் தம்பட்டம் அடித்துக் கொண்டது. புதிய பொருளாதார வடிவத்தை அறிவித்த போது அது அவ்வாறு கூறியது. அது ஏன் அஸ்கோர்ட் விஷயத்தில் அப்படிச் செய்யவில்லை?
விளையாட்டுப் பந்தய சர்ச்சை தொடர்ந்த வேளையில் அரசாங்கம் வெளியிட்ட பாதி உண்மைகளும் அரசாங்கத்திற்கு நல்ல பெயரைத் தரவில்லை. தனக்கு நிதிஅமைச்சரிடமிருந்து அங்கீகாரம் கிடைத்திருப்பதாக ஜுன் 12ம் தேதி அஸ்கோட் ஸ்போர்ட்ஸ் அறிவித்தது. ஆனால் அனுமதி வழங்கப்படவில்லை என நஜிப் ஜுன் 15ம் தேதி நிருபர்களிடம் கூறினார்.
வார்த்தைகளுக்கு அர்த்தம் எப்படி இருந்தாலும் அங்கீகாரம் என்பது அங்கீகாரம்தான். அனுமதி கொடுக்கப்படவில்லை என்று நஜிப் கூறினாலும் அங்கீகாரம் கொடுக்கப்பட்டுள்ளது, அனுமதி இன்னும் இல்லை என்பதை அவர் ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்.
ஆகவே அவர் தமது அறிக்கை வழி மக்களை சந்தேகப்பட வைத்து விட்டார். அதனால் விளையாட்டுப் பந்தயம் குறித்த குழப்பம் அதிகரித்து விட்டது. சுருக்கமாகச் சொன்னால், அந்த முடிவு சேதத்தைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாகும். அந்த விஷயம் பகிரங்கமானதும் பொது மக்கள் எதிர்த்தனர். அந்த எதிர்ப்புணர்வு காலப் போக்கில் மறைந்து விடும் என்றும் நஜிப் எதிர்பார்த்தார். தமது முடிவில் அவர் உறுதியாக இல்லை என்பதையும் அது காட்டியது. அது உறுதியற்ற தலைமைத்துவத்துக்கு ஒர் உதாரணமாகும்.
யார் பொறுப்பு?
விளையாட்டுப் பந்தயத்தை ஆதரித்து மசீசவும் மஇகாவும் அறிக்கைகளை வெளியிட்டுள்ள போதிலும் அம்னோ தான் இறுதியில் அந்த முடிவை எடுத்துள்ளது.
ஜோகூர் அம்னோ விளையாட்டுப் பந்தயத்தை நிராகரித்து முதல் அறிக்கையை வெளியிட்டது. அது நஜிப்பை பாதித்திருக்க வேண்டும். ஜோகூரைத் தொடர்ந்து கெடா, பேராக் ஆகிய மாநில அம்னோக்களும் எதிர்த்தன. அம்னோ இளைஞர் பிரிவும் பின்பு அதில் இணைந்து கொண்டது.
தாம் தலைமை தாங்கும் கட்சியின் முழுக் கட்டுப்பாடும் நஜிப்பிடம் இல்லை என்பதை நடந்து முடிந்த அத்தியாயம் தெளிவாகக் காட்டியுள்ளது. அவருக்கு அந்தக் கட்சியில் தாம் விரும்பும் முழு ஆதரவும் இல்லை.
அத்துடன் விளையாட்டுப் பந்தயத்துக்கு வழங்கப்பட்ட அங்கீகாரத்தை மீட்டுக் கொள்ளும் இறுதி முடிவை அம்னோ உச்சமன்றம் எடுத்ததும் நஜிப்புக்கு நல்ல பெயரைத் தரவில்லை. அம்னோவுடன் மற்ற பிஎன் பங்காளிக் கட்சிகளையும் கொண்ட அரசாங்கம்தான் முதலில் அங்கீகாரத்தை வழங்கியது. அதனால் அரசாங்கம்தான் அதனை மீட்டுக் கொள்ளும் முடிவையும் செய்ய வேண்டும். அது நிகழாததால் அது உணர்த்தும் செய்தி தெளிவானது.
அரசாங்கம் பிஎன் கட்டுப்பாட்டில் இல்லை என்பதுதான் உண்மை. அது அம்னோவிடம்தான் உள்ளது. அதுவும் இங்கிருந்து பார்க்கும் போது நஜிப்பின் கட்டுக்குள்ளும் இல்லை.


Tun Mahathir have stated that Chinese like to gamble and cannot avoid it.Do you think other nationality in Malaysia are not gambling?.We have existing licences for Toto,Mgnum,PMP is that not enough?.why should allowed another licence for gambling and make the malaysians bankrupt.
The MAMAKTHIR told the Chinese comunity love gambling, eh mamak tongkang do you thing the malays never gamble ? Follow me to 4d clubs I”ll show you who are the majority in the Q at the clubs. Stop your nonsens ok ?