செம்மொழி மாநாட்டின் தொடக்கத்திலேயே ஆங்கிலத்தின் ஆதிக்கம்: மக்கள் விசனம் 25 Jun | சிறப்பு செய்தி.

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் ஆரம்ப விழாவில் ஆங்கில மொழியே  ஆதிக்கம் செலுத்தியதால், மாநாட்டுக்கு வந்த தமிழ் மக்களிடையே மனச்சஞ்சலம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 செம்மொழி மாநாட்டின்  ஆரம்ப விழாவில் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்ற அதிபர் பிரதிபா பட்டீல் மற்றும் கவர்னர் சுர்ஜித் சிங் பர்னாலா, பின்லாந்து நாட்டில் இருந்து பங்கேற்ற அஸ்கோ பார்போலா ஆகியோருக்கு தமிழ் தெரியாததால் ஆங்கிலத்தில் உரை நிகழ்த்தினர்.

இவர்கள் அனைவரும் “வணக்கம்’ என்ற ஒரு வார்த்தையை மட்டும் தமிழில் சொல்லத் தவறவில்லை. துணை முதல்வர் ஸ்டாலின் மட்டுமே ஆங்கில கலப்பில்லாமல் பேசினார்.

முதல்வர் கருணாநிதி உட்பட மீதமுள்ள அனைவரின் உரையிலும் ஆங்கிலம் இடம் பெற்றிருந்தது, தமிழ் ஆர்வலர்கள், கட்சித் தொண்டர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியது.

ஆங்கிலத்தில் பேசியவர்களின் உரையை தமிழில் மொழி பெயர்க்கக் கூட எந்தவித ஏற்பாடுகளும் செய்யப்படாததால், மாநாட்டின் உரையைக் கேட்க வந்திருந்த பாமர மக்கள் மேடையில் என்ன நடக்கிறது என்பது தெரியாமல் விழித்தனர். அவ்வப்போது கூச்சல் எழுப்பி அதிருப்தியை தெரிவித்தனர்.

ஐக்கிய நாடுகள் சபை, நாடாளுமன்றம்  என தான் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் திருக்குறள் வரிகளை சொல்வதோடு, அதை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து விளக்கி தமிழுக்கு பெருமை தேடி தரும் முன்னாள் அதிபர் அப்துல் கலாம் செம்மொழி மாநாட்டின் எந்த நிகழ்விலும் இடம் பெறவில்லை.

[APJ+Kalam+image.jpg]மாநாட்டு மேடையில் ஆங்கிலத்தின் ஆதிக்கத்தைக் கண்டு அதிருப்தி அடைந்த பொதுமக்களுக்கு, அப்துல் கலாம் பற்றிய நினைவு வருவதை தவிர்க்க முடியவில்லை. அனைவரும் இது பற்றி சிந்தித்தபடி மாநாட்டு நிகழ்ச்சிகளில் மூழ்கியிருக்கும் போது, அதே கருத்தை மையமாக வைத்து பரப்பப்பட்ட ஒரு குறுந்தகவல் (S.M.S), கூட்டத்தினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

அந்த குறுந்தகவலில், “தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் சிறப்பு விருந்தினர்கள் தமிழ் தெரியாத வடமாநிலத்தவர், ஆனால் நன்கு தமிழ் தெரிந்த நம் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் பெயர் சிறப்பு விருந்தினர்கள் பெயர் பட்டியலில் இல்லை. தமிழர்களான நாம் ஒவ்வொருவரும் இதை நினைத்துப் பார்க்க வேண்டும்” என கூறப்பட்டிருந்தது.

 
You can leave a response, or trackback from your own site.

33 Responses to “செம்மொழி மாநாட்டின் தொடக்கத்திலேயே ஆங்கிலத்தின் ஆதிக்கம்: மக்கள் விசனம்”

  1. Robin Salleh says:

    அந்தோ பரிதாபம்! எந்தா நம்ம மொழி? கலைஞர் பெயருக்கும் புகழுக்கும் ஆசைப்பட்டுப் பிறமொழி பிரமுகர்களை, பிரபலங்களை அழைத்திருப்பது போலத் தோன்றுகிறது! அவர்கள் புகழாரம் அவரை உச்சி குளிரச் செய்திருக்கும் என்பதில் ஐயமில்லை!
    இப்போதெல்லாம் இந்த மாநாடுகள் யாவும் பேச்சளவோடு சரி; உறுப்படியான காரியம் ஒன்றும் மாநாட்டுக்குப் பிறகு இருக்காது! வீண், வெட்டிச் செலவுதான் மிச்சம்!
    ராபின்

  2. குடிமகன் says:

    அன்னைத் தமிழுக்கு செம்மொழி அங்கீகாரம் என்றதும் மெய்சிலிர்த்துப்போனேன்.My mother tongue “Thamizh” has been declared as classical language என்று மற்ற இனத்தவரிடம் சொல்லி புளகிதம் அடைந்தேன்.ஆனால் அன்னைத் தமிழ் உலகில் தோன்றி ஆயிரம் அகவைதான் ஆகின்றது என்ற அங்கீகாரம் அறிந்து அதிர்ந்துப்போனேன்.பாரசீகமொழிக்கும்,ஆரியர்களின் மொழியான சமற்கிருதமொழிக்கும், அரபுமொழிக்கும் கிடைத்த அங்கீகாரம் போல் அல்லாமல் அகவை ஆயிரம் என்பதை அறிந்து வெட்கித்தலை குனிந்து போனேன்.இந்திய மொழிகளில் முந்திய மொழி தற்போது பிந்திய மொழியாகிவிட்டது.எதற்கு இந்த விழா?

  3. Robin Salleh says:

    ஏதோ காலங்கடந்தாவது செம்மொழித் தகுதி கிடைத்ததே என்று மனநிறைவு கொள்வோம், குடிமகனே! Jangan bimbang atau berasa kecewalah Kudimahan!
    Robin

  4. தமிழன் தமிழனிடம் தமிழ் பேசினால் போதும் , தமிழ் தானாக வளரும் .தமிழ்நாடில் மற்றும் அல்ல மலேசியாவிலும் இதே நிலைமைதான்.பொது இடங்களில் , வங்கிகளில்,அரசாங்க அலுவலகங்களில் மற்றும் சில இடங்களில் மலாய் மொழி ,சீனா மொழி இருப்பதை நாம் பார்திருக்கிறோம் …….ஏன் தமிழ் மொழி இல்லை? இதுக்கு அரசாங்கம் காரணமா? இல்லை…….
    நாம்தான் கரணம் ….தமிழன் தமிழ் பேசாமல் ,முக்கியத்துவம் வழங்காத போது …அரசாங்கம் எப்படி முக்கியத்துவம் வழங்கும் ?
    இப்போ சொல்லுங்கள் யார் காரணம் ?

  5. செம்மொழியை உருவாக்கியது முதல்வர் கருணாநிதிதான், அவரே அவர் பிள்ளைக்கு தமிழில் பெயர் வேய்க்காமல் வேற்று ஒரு மொழியில் பெயர் வேய்திருக்கிறார்…..சரி அது விடுங்க …விசியத்துக்கு வருவோம் .

    ” செம்மொழி மாநாட்டின் ஆரம்ப விழாவில் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்ற அதிபர் பிரதிபா பட்டீல் மற்றும் கவர்னர் சுர்ஜித் சிங் பர்னாலா, பின்லாந்து நாட்டில் இருந்து பங்கேற்ற அஸ்கோ பார்போலா ஆகியோருக்கு தமிழ் தெரியாததால் ஆங்கிலத்தில் உரை நிகழ்த்தினர் ”

    தமிழ் தெரியாதவர்களை தமிழ் மாநடுட்கு அழைத்து விட்டு தமிழில் உரையாட நினைப்பது சாத்தியமா? பாவம் அவர்கள் என்ன செய்வார்கள்….இந்தியாவில் Hindi 41%, Bengali 8.1%, Telugu 7.2%, Marathi 7%, Tamil 5.9%, Urdu 5%, Gujarati 4.5%, Kannada 3.7%, Malayalam 3.2%, Oriya 3.2%, Punjabi 2.8%, Assamese 1.3%, Maithili 1.2%, other 5.9%
    note: English enjoys associate status but is the most important language for national, political, and commercial communication; Hindi is the national language and primary tongue of 41% of the people.

    இந்தியாவில் எத்தனை பேரிடம் தமிழ் பேச முடியும் சொல்லுங்கள்…? அத்கர்வபூர்வ ஹிந்து மொழியான(sanskrit) சன்ச்க்ரிட் மொழியை துளைத்து விட்டு இப்போது தமிழ் மாநாட்டை நடத்தவதால் என்ன பயன்?

    சன்ச்க்ரிட்(sanskrit) மொழி என்பது சீனர்களின் மன்றின்(mandrin) மொழிக்கு சமமாகும். உதாரணம் ” சீனர்கள் சீனர்களிடம் சீனா மொழி ,அதாவது (mandrin) மொழி பேசுவார்கள்.உங்களுக்கு (mandrin) மொழி தெரிந்தால் போதும் நீங்கள் china நாட்டில் எங்கு சென்றாலும் யாரிடமும் பேசலாம் .ஆனால் இங்கு நமக்கு (sanskrit) மொழி இருந்தும் ,(sikh)க்ஹியர்களிடம்,(bengali)பெங்களியர்களிடம் மற்றும் பலரிடம் மலாயில் அல்லது (english)அங்கிலத்தில் தான் பேசுகிறோம்.(sanskrit)சன்ச்க்ரிட் மொழி வழிப்பாடு தளங்களுக்காக ஒதுக்கப்படாது அனால் இப்போது எத்தனை பேர் உபயோகிகிரர்கள்?
    தமிழ்நாடு அரசாங்கம் தமிழ் மொழியை செமொழியாக மாற்றுவதை விட ஹிந்தி மொழி கற்று கொள்ளவது தான் சரி என்று நான் நினைகிறேன்…….

  6. srh says:

    tamil no damil …. kevalam

  7. குடிமகன் says:

    வழக்கொழிந்த சமற்கிருதம் தமிழனின் தாய் மொழியன்று.தமிழினத்தை அழிக்க வந்த ஆரியர்களின் தாய்மொழி.ஆரியர்களின் தாய்மொழியான சமற்கிருதமும்,இந்தியும் தமிழனை ஆள வேண்டும் என்று நினைப்பவன் உண்மயில் தமிழினத்தின் அசல் விந்தாக இருக்கமாட்டான்.

  8. எதற்கு ஊருக்கொரு மொழி ,எல்லாம் இந்திய இனத்தினரும் ஒரே மொழியில் பேசகூடிய ஒரு இந்திய மொழியை சொல்லுங்கள் பார்போம் ?

  9. Kudimagan says:

    Attention to Dear Pithamagan:-You have rights to give your comments. You must give positive comments us but not negative.Don,t ask Thamilians to study sanskrit or Hindi which are not our mother tongue.Ask kalainyar why Thamizh has not been declared as classical language of 3000 year ago.That is Tholgapiar,s period.But dont give us suggetion to study as you have stated.
    For your information,
    The Singapore population in pecentage as follows ,Chinese 74.2% ,Malays 13.4%,Indians 9.2% while Eurasian ,Arabs & others 3.2% and yet the Singapore government recognise four official languages.English,Malay,Chinese(Mandarin) and our mother tongue Thamizh. So no more negative comments to us Please.

  10. pithamagan says:

    thank you for your suggestion mr.kudimagan. i,m niether gave negative comments nor asked thamilans to study sanskrit or hindi. note this :தமிழ்நாடு அரசாங்கம் தமிழ் மொழியை செமொழியாக மாற்றுவதை விட ஹிந்தி மொழி கற்று கொள்ளவது தான் சரி என்று நான் (நினைகிறேன்…….)..it was just my view or thought.I have been read your comment about the execution of language management by singapore “gubmint” and i’m not denying about thier manipulation of dealing languages in their country. They are doing much much better than us in such as case.Not only in term of language recognition but currency.Even you could see the tamil language in their currency. what about our country ? i think you aren’t singaporean.
    if you competent in malay language, than you will get a “gubmint” job.
    if you competent in chinese language than you will get a possession of controlling or financial influences and yet even you could find a work in singapore with only chinese language.you may ask me how do you know?……yes..i have already been there.
    what would you have with tamil language…?

  11. Thiyagu says:

    Dear Mr. Kanunanithi…. we are as Thamilan very proud of you for make thamil mozhi as SEMMOZHI…
    But, if the same initiative you should take to safe our thamil makkal in Sri Lanka and we are more proud…
    Thamil mozhi pesuvatharkku, thamilan vendama ??

  12. Kudimagan says:

    Dear Pithamagan, Thank you very much for your response and explanation.singapore is much more better than us because of this its economy very much better than Malaysia.To overcome all our problem.We must change the present government in this forth coming election.When we ask for our rights Perkasa leader Ibrahim Ali asking us to go to India.Our ex PM.Dr.Mahathir is thier good Adviser.He had agreed in the letter (1969) that he send to Our late Bapa Malaysia Rahman Putra in which he asked him to step down Tunku. He had stated (Mahatir) that he has two spoon of pakistani blood in his body which confirmed that he is a pakistani origin then Where he has to go for to ask his rights.It means that he is an alien too.

  13. thamizan abdul klam why not participate at senthamil maanadu all world thamizarkal ketkirarkal says:

    THNKS TO KAZAINYAR KARUNANITHI WHY EX PRESIDENT OF INDIA DR ABDUL KALAM WAS NOT IN THE VIP LIST THIS IS VERY BIG LOST FOR TAMIL MOZLI WORLD TAMILZANS WORRYS

  14. pithamagan says:

    Yes you are right dear kudimagan!.Next election will be the only one chance those who prefer to change the current gubmint is ruling this country forever.But the poorest thing is some of our community haven’t realise it especially illiterated person.They seems nothing worry about it at all. we need to “blow the whistle” to open the eyes of ignorant.HMMMM…….when i read your comment it’s seems like you have highest regards on mahathir.you know something he is the man who is source or root of all problems.

    There is a man who is pinch a baby then pretended to rock the cradle by pacify the crying baby.mahathir is a man of this kind.he will stir up a problem and sit in the corner by watching it happily.he is invented “bumiputra” scheme where which dosen’t brought any benefits to minorities in this country.Beside it has effected our students who scored 10A’s and 11A’s in the SPM examination denied entry to the Higher Learning Institution in Malaysia recently.Students and parents are dissatisfied with the explanation and reasons given for the rejection of their applications.is it means 1 malaysia concept? in my point of view it’s just a peice of pile of dogs crap. yes its can’t be worth anymore. b’coz its just on their mouths but not in their hearts.

    Perkasa leader Ibrahim Ali is a big mouth ignorant moron i ever seen.just imagine what would be happen to this country without ethnics? without them this country will be worthless and see how billionaires are malays? and how many etnics are gubmint servent?they are just incompetent and a layabout.Ethnics are contribute huge part to boost up our economy in this country and this is denied truth.we live in multi-cultural society, but according to the foreign countries view this country is remain perceived as islamic country and that might be what one of a reason why other countries pay less interest to invest in this country especially “whites”.Just compare it with our less endowed neighbour country as you quoted.I think 2020 vision wil be impossible if this issue continue to exist.

  15. Kudimagan says:

    “White Autors” knew exactly how our greatman Tun mahathir ruled Malaysia.It is already in Book form and They are waiting to launch the book here.KND is still considering and holding it whether the Rakyat should know his achivement or not.The KDN should allowed to launch this book and let the public know his great achivement in our country.
    The present 1 UMNO policy has not only discriminated non Bumis it has been also discriminated the malays in other parties.Leaders in BN becoming filthy rich.Rakyat becoming poorer and poorer.Let us follow the policy of Pakatan Rakyat “MERAKYATKAN EKONOMI MALAYSIA”

  16. இந்தக் கட்டுரை சற்று மிகைப்படுத்தப்பட்டு எழுதப்பட்டிருப்பதாகக் கருதுகிறேன். திறப்புவிழாவில் கலந்து கொண்டவர்களில் நானும் ஒருவன் :)

    அதிபரும் ஆளுநரும் தமிழர்கள் அல்லர். தமிழறியாதவர்களும் கூட. மலேசியாவில் ஒரு தமிழ் மாநாடு நடத்தி அதை பிரதமர் திறந்து வைக்க ஏற்பாடு செய்து அவரை தமிழில் பேச வைக்க முடியுமா? பிரதமர், ஆளுநர், அதிபர் — இவர்களை அழைப்பதற்குக் காரணம் உள்ளது – அதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். மேலும் செம்மொழி மாநாட்டில் ஆங்கிலத்தில் பேசினாலும், செம்மொழியின் சிறப்பு பற்றியே அவர்கள் பேசினார்கள. இந்திய நாட்டின் அதிபர், தமிழ் செம்மொழி பற்றிப் பேசினார் என்ற செய்தி எத்தனை அனைத்துலக ஊடகங்களுக்குச் சென்றுள்ளது என்பதை நினைத்துப் பார்த்தீர்களா?

    அஸ்கோ பார்போலா செய்த ஆய்வு என்ன, அந்தக் கண்டுபிடிப்பின் விழைவு என்ன? இவை முக்கியமா அல்லது அவர் திக்கித் திக்கித் தமிழில் பேசி நம்மைப் பரவரசப் படுத்துவது முக்கியமா?

    மாநாட்டு அமர்வுகளில் தமிழே ஆதிக்கம் செலுத்தியது. தமிழ் நன்கு அறியாத தொழில்நுட்ப வல்லுநர்கள் கூட முழுக்க முழுக்கத் தமிழில் பேசி அவர்களின் ஆய்வுகளைப் படைத்தது வியக்கத்தக்கது.

    அமர்வுகளின் திறப்பு விழாவில் பல வெளிநாட்டு அறிஞர்கள் தமிழில் பேசினார்கள். குறிப்பாக ஜெர்மனி நாட்டு பேராசிரியை உல்ரிக் நிக்கலாஸ் முழுக்க முழுக்கத் தமிழில் பேசி, “ஜெர்மனி என் பிறந்த நாடு, தமிழ்நாடு என் புகுந்த நாடு” என்று பிரகடனம் செய்ததை நீங்கள் கேள்விப்படவில்லையா?

    தமிழ் தமிழர்களுக்காக மட்டுமே என்ற நிலை மாறவேண்டும் – “உலகச்” செம்மொழியாக அது திகழவேண்டும்!

    ~ முத்து.

  17. Kudimagan says:

    Dear Muthu Nedumaran,
    Thank you very much for your explanation.Is it true that the “Thamizh Language has been recognised as a classical language of only 1000 Years? Since you have attend please let us know much about this.As I understant that there are classical languages of 1000,2000,3000 years.It seems sanskrit has been recognised as a classical language of 3000 years and it has been already recognised long ago by the Indian government .

    Eventhough Thamizh has a history 3500 years (Tholgapiers period) Why did Thamizh has been regonised as only 1000 years.It seems because of this Thamizh language would be unable to get the privileges in the universities around world.Even Mr. Manavai mustapha from UNESCO is unsatisfied about this.This is my humble request, Please?

  18. அன்புள்ள குடிமகன்,

    வணக்கம். I am not an expert on this subject in order to give you an authentic view. My apologies.

    My comment was on the angle the story was written, which I think isn’t quite right.

    While I leave it to the authorities to argue the case about the number of years, I’d like to focus on taking Tamil forward in making it a living language.

    We have to do what we can do best. I’m really poor when it comes to history :)

    Hope this explains :)

    அன்புடன்,

    ~ முத்து.

  19. Kudimagan says:

    Dear Muthu Nedumaran,

    Thank you very much for your response and explaining about making Thamizh as a living language .Since your father Murasu Nedumaran Esq. is the visiting professor for Tamilnadu, I thought that you could have understand and known about how is our Thamizh language has been recognised as classical language.In future if you come to understand about this ,please let us know.

    Thank you!

    With much love

  20. நண்பரே, தந்தையாரின் துறை இலக்கியம், மொழியியல் அல்ல. என்னுடைய துறை கணினி-மொழியியல், இலக்கியம் கூட அல்ல. சார்ந்துள்ளத் துறையில் சாதனை படைபதே முதற் குறிக்கோள். எனவே, இவை தொடர்பான கேள்விகளுக்கு பதிலளிப்பதில் தயக்கமே இல்லை.

    உங்கள் கேள்வி நல்ல கேள்வியே! ஆனால் மொழி வரலாறு, மொழியியல் சார்ந்தது. பதில் எமக்குக் கிடைத்தாலும் அதைப்பற்றி எழுதுவதற்கு நான் பொருத்தமானவன் அல்லன். தகுந்த பதிலளிக்க மொழியியல் வல்லுநர்கள் நமது நாடிலேயே உள்ளார்கள். முயற்சித்துப் பாருங்கள். விளக்கம் கிடைத்தால், அன்புகூர்ந்து அதைப்பற்றி எழுதுங்கள்.

    இணையத்தில் மலேசியத் தமிழ்ப் படைப்புகளின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. உங்களைப் போன்ற ஆர்வலர்கள் நிறைய எழுத வேண்டும்!

    அன்புடன்,

    ~ முத்து.

  21. Peter Johnson says:

    திரு முத்து நெடுமாறனின் கருத்து நன்கு சிந்திக்கத் தெரிந்த, பரந்த மனப்பாங்கு கொண்டவர்கள் ஏற்றுக் கொள்ளத்தக்கதாகும். தமிழ் என்னும் செம்மொழியை ஒரு குறுகிய வட்டத்துக்குள் வைத்திருக்க விரும்புவது சரியன்று. Well done, kudos to you , Muthu!
    We should learn and try to think out of the box!
    We should shun hyper- negative views. These would not help in any way for the enrichment of the classical language.
    Peter Johnson

  22. abishegam says:

    பெருங்’குடிமகன்’ தமது கருத்துகளை தமிழில் எழுதவேண்டும். அதுவே சிறப்பு. இலக்கண வழுக்கள் மலிந்த ஆங்கிலத்தில் எழுதுவதை அவர் தவிர்க்க வேண்டும். ‘அஞ்சல் 10′ எனப்படும் மென்பொருளை (யூனிகோட்) வாங்கி (ரிங்கிட் 100 மட்டுமே) அதனை உங்கள் கணினியில் பொருத்தினால், தமிழில் இங்கு உள்ளீடு செய்யலாம்.
    அபி

  23. Kudimagan says:

    Dear Muthu Nedumaran
    I acknowledged the receipt of mail,Thank very much.
    ———————————————————
    Dear Mr.Abisegam,
    I saw your comment about me.I am terribly sorry for my comments in English.You can see my previous comments all in Thamizh.In fact I am a Thamizh lover.I had installed THAMIZHA ekalapai unicode software in my PC but my pc got corrupted recenty.Only a week ago my son reformated the hard disk .Unfortunately I have lend my Thamizha ekalapai software to my friend because of that I could not reinstall Thamizh fonts .As soon as I get it from my friend I will write my comments in Thamizh.Please excuse me for my horrible English. I am not perungkudimagan. I am Malaysia Kudimagan .Sorry sir.

  24. abishegam says:

    குடிமகன்,
    உங்கள் விளக்கத்திற்கு நன்றி, ஐயா.விரைவில் தமிழில் எழுதுங்கள் (இடுகை செய்யுங்கள்) அல்லது Romanised தமிழில் எழுதுங்கள்.
    Nandri (நன்றி).
    அபி

  25. pithamagan says:

    dear mr.kudimagan,

    I has been read your comment and i noticed that you are facing a PC problem which where seeing you in trouble to write comments in tamil fonts.Dont worry, you may write your comments in tamil like always with “GOOGLE TRANSLITERATION”.just log on in this following web address and try to write your tamil language in roman alphabet then you may see the text change into tamil fonts.

    http://www.google.com/transliterate/
    hope this information help you.

    pithamagan.

  26. குடிமகன் says:

    என்றும் வாழும் எம் இனிய தமிழ்மொழியில் இனி இனிதே எழுத முனைந்துவிட்டேன்.இனிய தமிழில் எழுதவேண்டும் என எமக்கு நினைவூட்டிய அன்பு நண்பர் அபி அவர்கட்கும் பிதாமகனுக்கும் அடியேன் மலேசியக்குடிமகன் நன்றி நவில்கின்றேன்.நன்றி நண்பர்களே! நன்றி!.

  27. Iniyan says:

    பிதாமகன் அவர்களே,
    //சன்ச்க்ரிட்(sanskrit) மொழி என்பது சீனர்களின் மன்றின்(mandrin) மொழிக்கு சமமாகும்.// என்பதற்கு ஆதாரம் அல்லது ஆய்வு ஏதேனும் உண்டா?
    தமிழன் சம்ற்கிருதம் கற்றுக் கொள்வது இருக்கட்டும்… இந்திய மண்ணில் உள்ள மற்ற மொழிக்காரர்கள் இதற்கு உடன்படுவாரா முதலில்?
    தாய்மொழியைப் பற்றிய தாழ்வு மனபான்மை தமிழரைத் தவிர வேறு யாரிடமும் இருக்குமா?

  28. abishegam says:

    சபாஷ்! நன்றே செய்தீர், அதனை இன்றே செய்தீர், குடிமகன் அவர்களே! பெருமிதம் அடைகிறேன் ஐயா.
    நன்றி. தொடர்ந்து உங்கள் கருத்துகளைத் தயக்கமின்றி, துணிவுடன், ஆணித்தரமாக முன்வையுங்கள்.
    அபி

  29. DEAR iniyan ,

    Sanskrit language (संस्कृत भाषा saṃskṛta bhāṣā), for short Sanskrit (संस्कृतम् saṃskṛtam), is a historical Indo-Aryan language, a classical language of the Indian subcontinent and the primary liturgical language of Hinduism and Buddhism. Today, it is listed as one of the 22 scheduled languages of India and is an official language of the state of Uttarakhand.

    Classical Sanskrit is the standard register as laid out in the grammar of Pāṇini, around the 4th century BCE. Its position in the cultures of South and Southeast Asia is akin to that of Latin and Greek in Europe and it has significantly influenced most modern languages of the Indian subcontinent, particularly in India and Nepal.

    The pre-Classical form of Sanskrit is known as Vedic Sanskrit, with the language of the Rigveda being the oldest and most archaic stage preserved, its oldest core dating back to as early as 1500 BCE. This qualifies Rigvedic Sanskrit as one of the oldest attestations of any Indo-Iranian language, and one of the earliest attested members of the Indo-European language family, the family which includes English and most European languages.

    The corpus of Sanskrit literature encompasses a rich tradition of poetry and drama as well as scientific, technical, philosophical and Hindu religious texts. Sanskrit continues to be widely used as a ceremonial language in Hindu religious rituals in the forms of hymns and mantras. Spoken Sanskrit is still in use in a few traditional institutions in India, and there are many attempts at revival.

    The study of Sanskrit in the Western world began in the 17th century. Some of Bhartṛhari’s poems were translated into Portuguese in 1651.In 1779 a legal code known as vivādārṇavasetu was translated by Nathaniel Brassey Halhed from a Persian translation, and published as A Code of Gentoo Laws. In 1785 Charles Wilkins published an English translation of the Bhagavad Gita, which was the first time a Sanskrit book had been translated directly into a European language.

    In 1786 Sir William Jones, who had founded The Asiatic Society two years earlier, delivered the third annual discourse; in his often-cited “philologer” passage, he noted similarities between Sanskrit, Ancient Greek and Latin—an event which is often cited as the beginning of comparative linguistics, Indo-European studies, and Sanskrit philology.

  30. குடிமகன் says:

    Like the other Dravidian languages, but unlike most of the other established literary languages of India, the origins of Tamil are independent of Sanskrit. Tamil has the longest unbroken literary tradition amongst the Dravidian languages. Tamil tradition dates the oldest works to several millennia ago, but the earliest examples of Tamil writing we have today are in inscriptions from the third century BC, which are written in an adapted form of the Brahmi script. Dating the earliest literary works themselves is difficult, in large part because they were preserved either in palm leaf manuscripts (implying repeated copying and recopying) or through oral transmission. Internal linguistic evidence, however, indicates that the oldest extant works were probably composed sometime between the second century BC and the third century AD. The earliest available text which describes the language of the classical period is the Tolkaappiyam (dating from around 200 BC).

    Linguists categorise Tamil literature and language into three periods: ancient (200 BC to 700 AD), medieval (700 AD to 1500 AD) and modern (1500 AD to the present). During the medieval period, a number of Sanskrit loan words were absorbed by Tamil, which were sought to be removed by many purists during the 1900s, notably by Parithimaar kalaignar and Maraimalai adigal. This movement was called thanith thamizh iyakkam (meaning pure tamil movement). As a result of this, Tamil in formal documents, public speeches and scientific discourses is free of Sanskrit loan words largely. Around 800-1000 AD, Malayalam is believed to have evolved into a distinct language.

    Classification
    Tamil is a member of the Tamil languages group of languages that includes Irula, Kaikadi, Betta Kurumba, Sholaga, and Yerukula languages. This group is a subgroup of the Tamil-Malayalam languages, which falls under a subgroup of Tamil-Kodagu languages, which in turn is a subgroup of Tamil-Kannada-Telugu languages. The Tamil-Kannada-Telugu languages belong to the Southern branch of the Dravidian language family.

    Malayalam, spoken by the people of Kerala state – which borders Tamil Nadu – closely resembles Tamil in vocabulary, syntax and writing system

  31. எது இருப்பினும் டாக்டர் அப்துல் கலாமை அழைத்திருந்தால் இன்னும்
    சிறப்பாக இருந்திருக்கும்.

  32. abishegam says:

    கடந்து போனவை பற்றிக் கவலைப்படுவதில் என்ன பயன்? மறப்போம்.வருவதைப்பற்றி சிந்திப்போம்.

    அபி

  33. robinsalleh says:

    Pithamagan and Kudimagan are real jokers!! They discuss the origin and development of the classical language Tamil in English! What a popycock and bunkum it is!!
    என்று திருந்துவதோ இந்த ஜீவிகள்!
    ராபின்

Leave a Reply