பள்ளிக்கூடங்கள் கட்டுவதற்கான நிலத்தை அவர்களே வாங்கிக்கொள்ள முடியாதா?, கேட்கிறார் முகைதின் 23 Jun | சிறப்பு செய்தி.

தாய்மொழிப்பள்ளிகள் ஓரங்கட்டப்படவில்லை. “நாங்கள் அவர்களின் சம்பளத்தைக் கொடுக்கிறோம். அவர்கள் டிஎபியை ஆதரிக்கிறார்களோ பாரிசானை ஆதரிக்கிறார்களோ அதுகுறித்து நாங்கள் கவலைப்படுவதில்லை…இது நாங்கள் இப்பள்ளிகளை ஆதரிக்கிறோம் என்பதைக் காட்டுகிறது…இது ஒரு பெரிய ஒதுக்கீடாகும், நாங்கள் ஆசிரியர்களைத் தருகிறோம், நாங்கள் அவர்களின் சம்பளத்தைத் தருகிறோம், அவர்கள் தங்களுக்கான இடத்தைத் தேடிக்கொள்ள முடியாதா?’, என்று கல்வி அமைச்சர் முகைதின் யாசின் இன்று நாடாளுமன்றத்தில் டிஎபி செரடாங் நாடாளுமன்ற உறுப்பினர் தியோ நீ சிங்கின் கேள்விக்கு பதில் அளித்தபோது கூறினார்.

10ஆவது மலேசிய திட்ட மீதான விவாத்தை முடித்து வைத்து ஆற்றிய உரையின்போது, கல்விக்காக மத்திய அரசு ஒதுக்கிவைத்திருக்கிற நிலத்தை தாய்மொழிப்பள்ளிகளுக்கு அளிக்க அரசாங்கம் மறுத்து வருகிறது என்று தியோ நீ சிங் கூறியிருந்த குற்றச்சாட்டை கல்வி அமைச்சர் முகைதின் மறுத்தார்.

ஒதுக்கிவைக்கப்பட்டுள்ளதிலிருந்து தாய்மொழிப்பள்ளிகளுக்கு நிலம் கொடுக்கப்படாததற்கான காரணம்  நிலத்திற்கான முன்னுரிமைகள்தான் என்றார் கல்வி அமைச்சர்.

“தாய்மொழிப்பள்ளிகளை நாங்கள் ஓரங்கட்டவில்லை. ஆனால் நாங்கள் தேசிய கல்வி அமைவுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். நாங்கள் தாய்மொழிப்பள்ளிகளை மதிக்கிறோம். அவை செயல்படுவதை நாங்கள் கட்டுப்படுத்தவோ நிறுத்தவோ இல்லை. உண்மையில், தாய்மொழிப்பள்ளிகளை ஓர் அமைச்சர் மூடுவது சட்டவிரோதமானதாகும்.

” இப்போத்தைக்கு மட்டுமில்லாமல் நீண்டகால தேவைக்காக அந்த நிலங்கள் தேசியப்பள்ளிகளுக்காக ஒதுக்கிவைக்கப்பட்டுள்ளன. அந்த இடங்களை தாய்மொழிப்பள்ளிகளுக்குக் கொடுத்து விட்டால், தேசியப்பள்ளிகள் விரிவாக்கம் செய்யப்பட வேண்டிய நேரத்தில் அதிக விலையுள்ள இடங்களுக்குச் செல்ல வேண்டும்”, என்று மேலும் கூறினார்.

அதிகமான மாணவர்கள் இருக்கும் இடத்திற்குத் தாய்மொழிப்பள்ளிகளை இடமாற்றம் செய்வதற்கு இடம் வழங்க மறுக்கும் கல்வி அமைச்சின் கொள்கைப் பற்றி அமைச்சரிடம் தியோ நீ சிங் முன்னதாக கேள்வி எழுப்பியிருந்தார்.

“வேறு இடங்களுக்கு மாற்றம் செய்ய விரும்பும் அனைத்துப் பள்ளிகளும் தாங்களாகவே நிலத்தைத் தேடிக்கொள்ள வேண்டும். கல்விக்காக ஒதுக்கிவைக்கப்பட்டிருக்கும் நிலத்தைப் பயன்படுத்த முடியாது. இந்த நிலத்தை ஏன் அவர்கள் பயன்படுத்தக்கூடாது? இதுதான் ஒரே மலேசியாவா? தேசியப்பள்ளிகள் அந்த நிலத்தைப் பயன்படுத்திக்கொள்ளும்போது, ஏன் தமிழ் மற்றும் சீனப்பள்ளிகள் அவ்வாறு செய்ய முடியாது?”, என்று அவர் கேட்டார்.

அத்துடன், (தாய்மொழிப்)பள்ளிகள் ஓரங்கட்டப்படுவதாகவும் தியோ குற்றம் சாட்டினார்.

நிலம் கொடுக்க மறுப்பது தாய்மொழிப்பள்ளிகளுக்கு அமைச்சு ஆதரவு அளிக்கவில்லை என்று அர்த்தமாகாது என்றார் முகைதின். மாறாக, தேசியப்பள்ளிக்கு அமைச்சு முன்னுரிமை அளிக்க வேண்டியுள்ளது என்பதை புரிந்து கொண்டு ஒத்துழைப்பு வழங்குமாறுதான் சீன மற்றும் தமிழ் சமூகங்கள் கேட்டுக்கொள்ளப்பட்டன என்று அவர் மேலும் கூறினார்.

இவ்விவகாரத்தை அரசாங்கம் கையாண்ட முறையில் நியாயம் இல்லை என்ற கூற்றை மறுத்த முகைதின் யாசின், சீன மற்றும் தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களின் சம்பளத்திற்காக அரசாங்கம் ஆண்டுதோறும் ரிம1.8 பில்லியனைச் செலவிடுகிறது என்பதைச் சுட்டிக் காட்டினார் அமைச்சர்.

“நாங்கள் அவர்களின் சம்பளத்தைக் கொடுக்கிறோம். அவர்கள் டிஎபியை ஆதரிக்கிறார்களோ பாரிசானை ஆதரிக்கிறார்களோ அதுகுறித்து நாங்கள் கவலைப்படுவதில்லை…இது நாங்கள் இப்பள்ளிகளை ஆதரிக்கிறோம் என்பதைக் காட்டுகிறது…இது ஒரு பெரிய ஒதுக்கீடாகும், நாங்கள் ஆசிரியர்களைத் தருகிறோம், நாங்கள் அவர்களின் சம்பளத்தைத் தருகிறோம், அவர்கள் தங்களுடைய இடத்தைத் தேடிக்கொள்ள முடியாதா?”, என்று கல்வி அமைச்சர் முகைதின் யாசின் கேட்டார்.

தாய்மொழிப்பள்ளிகளுக்கு இதற்கு முன்பு அரசாங்கம் நில விவகாரங்களில் உதவாமல் இருந்ததில்லை என்று கூறிய அவர், “உலுசிலாங்கூரில் ஒரு சீனப்பள்ளிக்கான நிலத்திற்கு ரிம3 மில்லியனை நானே நேரில் சென்று கொடுத்தேன்”, என்றார்.

கல்விக்கான நிதி ஒதுக்கீடு

முகைதினின் அதே உரையின்போது, கல்வி மேம்பாட்டிற்கான நிதி ஒதுக்கீட்டை பள்ளியிலுள்ள மாணவர்களின் விழுக்காடு அடிப்படையில் ஒதுக்கீடு செய்யும் சாத்தியம் குறித்து பினாங்கு முதல்வர் லிம் குவான் எங் வினவினார்.

லிம்மின் ஆலோசனையை நிராகரித்த அமைச்சர் முகைதின், “நாம் கட்டமைப்பைப் பார்க்க வேண்டும், மாணவர்களின் எண்ணிக்கையைப் பார்ப்பதல்ல. நாம் 5.6 மில்லியன் மாணவர்களைக் கவனிக்க வேண்டியிருப்பதால், முழுமையான போக்கை கடைபிடிக்க வேண்டும்”, என்றார்.

 
 

 
You can leave a response, or trackback from your own site.

29 Responses to “பள்ளிக்கூடங்கள் கட்டுவதற்கான நிலத்தை அவர்களே வாங்கிக்கொள்ள முடியாதா?, கேட்கிறார் முகைதின்”

  1. Sivan says:

    Madaiyan maathiree pesum ivar (முகைதின் யாசின்)

  2. narayanan says:

    சரியா சொன்னீங்க அண்ணன்……

  3. janathipathi says:

    mengapapula pula kita kena cari tempat sendiri apa kami bukan warganegara malaysia ini kah satu malaysia apa yang terpapar disini mereka menganak tirikan sekalah sekoalah tamil dan china.

  4. sandra segaran says:

    muyaddin,ini kah satu malayasia(tolonglah tuan jangan ingat kami semua kosong) (BODOH)

  5. மறவன் says:

    அய்யா, மெத்தப் படித்த முஹிடின் அவர்களே…

    நான் ஒரு சிறப்பான வழியைச் சொல்கிறேன், கேட்பீர்களா..

    தாய்மொழிப் பள்ளிகளையெல்லாம் தேசியப் பள்ளிகளாக மாற்றிவிடுங்களேன், பிரச்சினை எதுவும் வரப் போவதில்லை, அதை விடுத்து அது சொத்தை இது சொத்தை என்கிற வீண் கதையெல்லாம் எதற்கு? மக்கள் முபு போல் ஏமாளிகள் அல்ல..நாங்கள் எல்லோரும் கணினி யுகத்தில் வாழ்கிறோம், நாங்கள் மாறிட்டோம், நீங்களும் மாறிடுங்களேன்

  6. KANNA says:

    United Nation and malaysian federal law says
    Education for the citizens of every country, is the
    responsible of their goverment. how come the Minister
    don”t know about it?

  7. maeganmala says:

    if goverment give land also good if we tamils find or buy a land or someone donate the land also good both ways is good

  8. maeganmala says:

    MINISTER KNOWS ABOUT EVERY THING IF GIVE LAND TO TAMIL SCHOOLS OR TAMIL PEOPLE WHAT I MEAN IS IF IN ONE BIG PIECE OF CAKE IF HE GIVE QUATER PIECE TO TAMILS HE WONT BE REGONISE OR PUT IN RECYCLE BIN
    EVERY THING A MENTERI TALK OR SUGGEST THERE ARE PEOPLES BEHIND THEM THE MAIN PERSON IS COMUNIST ANCESSTORS SECOND THEIR CRONIES MENTERI KENA JAGA KERUSI DIA BAGI LEBIH UNTUK KELING OR KELING KUI
    TAK MOLEH TAK MOLEH OH
    KALAU KUIL DIROBOH MEMANG MELAYU YANG ROBOH MANA MANA KUIL ROBOH SIAPA BELAKANG DIA SIAPA MAHU TANAH ITU ORANG KETURUNAN KOMUNIS BELAKANG DIA DIA MAHU GUNA TANAH ITU PEGAWAI PEGAWAI DI SUAP KETURUNAN KOMINIS CUBA DAN DAPAT TANAH KUIL ITU YANG ORANG INDIA TAHU MELAYU YANG ROBOH KUIL ITU TAPI SIAPA BELAKANG DIA SIAPA MAHU TANAH KUIL ITU CUBA FIKIR

    SELEPAS AH ENG AH CHONG AH MING BAGI SUAP RACUN SUAP NASI LEMAK SUAP RENDANG SUAP NASI KANDAR SUAP BAKSO SUAP MEE KARI MACAM MACAM DIA BAGI UNTUK PEGAWAI MELAYU SELEPAS KUIL ROBOH DAPAT TANAH PEGAWAI ITU DIBAGI TIKET PERLANCONGAN KE LUAR NEGERI INI STRAGEI KETURUNAN KOMUNIS DI MALAYSIA BAGI RASUAH TIPU MUSLIHAT PELACURAN BUAT APA SAHAJA UNTUK CARI MAKAN

    MENETRI TAHU MENTERI PANDAI MENTERI MAHU SENANG MENTERI MAHU DRAMA

    CUMA KEJUJURAN ITU SIKIT DIA KENA SUAP KRONI DIA
    REZEKI DATANG HARI HARI DIA TAK BOLEH TOLAK

    MALAYSIA KUASA ADA PADA ORANG MELAYU YANG MEMERINTAH ITU ORANG KETURUNAN KOMUNIS DARI SEBELUM PARAMESWARA SELEPAS PARAMESWARA SEHINGA KINI

    SEBAB ITU MENTERI BISU PEKAK BUTA KALAU HAL ORANG INDIA KALAU MELAYU DAPAT TANAH UNTUK APA-APA KETURUNUAN KOMUNIS PUN OK TAPI KALAU ORANG INDIA DAPAT TANAH KETURUNAN KOMUNIS DAN MELAYU INDONESIA KADAZAN MURUT BAJAU HIMPIT MENTERI JUGA INI ORANG INDIA KENA FAHAM

    KALAU KERAJAAN MALAYSIA TAK CUKUP TOLONG ORANG INDIA CUBA ALTERNATIF LAIN APA YANG UTHYA KUMAR DAN WAYTHAMORTHI BUAT ITU BAGUS

    KERAJAAN MALAYSIA TAKUTDUA ADIK BERADIK INI KETURUNAN KOMUNIS BENCI DUA ADIK BERADIK INI

  9. siva says:

    untuk anak indonesia kerajaan malaysia boleh bina sekolah.tapi untuk kita kena cari tanah bodoh menteri tak fikir sebelum sembang

  10. குடிமகன் says:

    மலேசியக் கூட்டரசு அரசமைப்பு (Perlembagaan Persekutuan) உறுப்பு 152 (1) குறிப்பிட்டுள்ளது போல் மலாய் நம் நாட்டின் தேசிய மொழி என்பதை ஏற்றுக்கொள்கின்றேன்.

    ஆனால் அதே உறுப்பு 152ல் குறிப்பிட்டுள்ள கீழ்காண்பவை:-

    (அ) ஆள் எவரும்,வேறேதேனும் மொழியினை (அதிகாரமுறை நோக்கங்காக அல்லாமல் வேறு வகையில்) பயன்படுவத்துவதிலிருந்து அல்லது கற்பிப்பதிலிருந்து அல்லது கற்பதிலிருந்து தடைசெய்யப்படுதலோ ஆகாது;மற்றும்

    (ஆ) இந்தக் கூறிலுள்ள எதுவும் கூட்டரசிலுள்ள வேறேதேனும் சமுதாயத்தினரின் மொழியினைப் பேணிக்காப்பதற்கும்,அதனைப் பயன்படுத்துவதையும் கற்பதையும் ஊக்குவிற்பதற்கும் கூட்டரசு அரசாங்கத்திற்கு அல்லது ஏதேனும் மாநில அரசாங்கத்திற்கு உள்ள உரிமைக்குக் குந்தகம் செய்தல் ஆகாது.

    என்பதனை மாண்புமிகு துணைப்பிரதமரும் கல்வி அமைச்சருமாகிய முகைதீன் யாசின் அவர்கள் கற்றுணர்ந்திருப்பார் என நம்புகிறேன்.

    சட்டம் இயற்றுவதற்கு மட்டும் அன்று ஒவ்வொரு குடிமகனும் கடைப்பிடிப்பதற்கும் கூட என்பதை மாண்புமிகு அவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

  11. S.krishnan (Bkt. Selambau kedah) says:

    Sampai bila masalah tanah untuk sekolah tamil dan cina ? Jika kerajaan beli tanah dan bina sekolah kebangsaan mengapakah tok boleh bagi sekolah lain. ? Konsep 1 Malaysia hanya untuk laungkan saja bukan untuk amalan .

  12. pithamagan says:

    muhyi(DIN) SAYS…
    “நாங்கள் அவர்களின் சம்பளத்தைக் கொடுக்கிறோம். அவர்கள் டிஎபியை ஆதரிக்கிறார்களோ பாரிசானை ஆதரிக்கிறார்களோ அதுகுறித்து நாங்கள் கவலைப்படுவதில்லை…இது நாங்கள் இப்பள்ளிகளை ஆதரிக்கிறோம் என்பதைக் காட்டுகிறது…இது ஒரு பெரிய ஒதுக்கீடாகும், நாங்கள் ஆசிரியர்களைத் தருகிறோம், நாங்கள் அவர்களின் சம்பளத்தைத் தருகிறோம், அவர்கள் தங்களுக்கான இடத்தைத் தேடிக்கொள்ள முடியாதா?’, என்று கல்வி அமைச்சர் முகைதின் யாசின் இன்று நாடாளுமன்றத்தில் டிஎபி செரடாங் நாடாளுமன்ற உறுப்பினர் தியோ நீ சிங்கின் கேள்விக்கு பதில் அளித்தபோது கூறினார்.”
    “GUBMINT” shouldn’t gave “big talk” such as saying that ,they are organize the teachers and their salary to tamil schools b’coz it’s thier responsibilities as “gubmint” don’t they.if you do a count against what you did for us, so what about the election vote that we voted for you last time?
    aren’t you recall the event where you begging for vote to us last time by saying ” kita akan tolong masyarakat india”?
    wake up folks..!!!! please choose the right person next time and don’t be ignorant for centuries .there is no different between politicians and actors . Dont fall into their’s sweet speech and fake smile.SycophantPoliticians are like “ANT” you know how?
    when the scrap of sweet drop down ,all ants will come from nowhere and enjoy the sweetness .After the sweet finish all ants will be vanish.they will be there for your vote(sweet) , not you..

  13. Elaveanir Kumar says:

    Sesiapapun tidak akan menafi bahawa mendiskriminasi adalah polisi dan amalan kerajaan UMNO selama 53 tahun yang lepas demi mencapai slogan 1 Malaysia iaitu satu bahasa, satu bangsa dan satu agama. MIC & MCA khususnya menjadi sekutu kuat UMNO untuk kepentingan diri, menjaga periuk nasi mereka.

    Di bidang mana tiada polisi diskriminasi? Mulai dari bidang pendidikan, pekerjaan, perniagaan, jawatan awam dan di segala bidangpun terdapat polisi diskriminasi.

    Malangnya, kita tidak mempunyai pemimpin nasional dan apa yang ada itu adalah pemimpin yang hanya menjaga kepentingan satu bangsa. Polisi Muhiyiddin pula Melayu didahulukan Nasional dibelakangkan. Apa yang boleh diharapkan daripada pemimpin seperti beliau?

  14. Kudimagan says:

    Saudara Elavenir Kumar,Tk.Erti slogan 1 malaysia yang kamu tersebut itu memang benar tetapi dengan sedikit berbezaan Melayu UMNO didahulukan Nasional dibelakangkan.

  15. selva says:

    menteri ni hantu ,,bukan menteri lagi,, ni kaki pasir,dan judi ….. what he knows about education…?basically he ,zero . bukan hero …

  16. pithamagan says:

    To all my dear friends,

    Recall last time you has voted BN in Hulu Selangor /Batang Kali parlimen seat election and now you get received this “GIFT” as a return of voted for BN.

    Chinese people are already awake and they dont believe in BN at all but indians aren’t just there!…yes we are cheap!
    Awake please folks !!!

    Take this as a lesson for life and dont repeat your mistake again and again.BN aren’t ready for you help but only yourself!This problem always be there like every year more to come if “hypocrite and parasitic BN” keep ruling this country.Next time in election, don’t believe in their “sweet speech” and fake smiles .Dont be a ignorant for centuries!!!enough its enough!!!!b ‘coz they do have time to keep you in their soles but not in their hearts.

    Do you all still remember the issue of students who scored 10A’s and 11A’s in the SPM examination denied entry to the Higher Learning Institution in Malaysia ?UMNO ‘kills’ 2,237 top Indian students up to 13 straight As’in SPM and tokoh pelajar every year the last 40 years.

    spremacy does’nt exist in any other part of the world except in our pm’s one malaysia.Today malaysia is the most racist and supremacist country in the world.
    With better education, Singaporeans have achieved a better lifestyle for their families compared with a large percentage of ethnics in Malaysia. We studied hard to be where we are today and yet , Over the years, I have seen and learnt that for the minority to succeed in Malaysia, they need to “kowtow” to others even in term of education.

    That’s why they said our pm One (Malay)-sia is an exporter of talents and importer of cheap labours.
    UMNO/BN government can keep talking, but the facts remained that Malaysia can never become a developed country or high-income country. Talk is cheap!
    Scholarships are for bumiputras even the rich ones while the poor intelligent non bumiputras gets nothing although they and their parents were all born and bred here in Malaysia but still treated as second class citizens !

    think it well my dear friends……………..

  17. தமிழன் says:

    மத வெரி பிடித்தவர்கள் அமைச்சராக இருந்தால் இப்படி தான். போகிர போக்கில் மலேசியாவில் தமிழர்களுக்கே இடம் இல்லாமல் போக போகிறது. இவர்களுக்கு ஜால்ரா அடிக்க ம.இ.கா தலைவர் இருக்கிறார்…………………

  18. சிவபாலன் says:

    அனைவருக்கும் வணக்கம். நமது கல்வி அமைச்சர் பொருப்பேற்றதிலிருந்து பல காரியங்களை செய்து வருகிறார். அவற்றில் தமிழ் மற்றும் சீன தமிழ்ப்பள்ளிகளின் மீது ‘அதிக’ அக்கறை காட்டுகிறார். அவரின் செயல்களும் பேச்சிகளும் பலரின் மனதை புண்படச் செய்துள்ளது. தற்போதைய நிலவரத்தைப் பார்த்தால் எதிர்காலத்தின் தமிழ் சினப் பள்ளிகளே இல்லாமல் போய்விடும் போலுள்ளது. மேலே, ஒரு சகோதரர் தாய்மொழிப் பள்ளிகளை தேசிய மொழி பள்ளிகளாக மாற்ற விடுங்களேன் என்று கூறியிருந்தார். அவரின் கருத்தை நான் மறுக்கிறேன். தாய்மொழிப்பாடங்கள் தேசிய மொழிப் பள்ளிகளாக மாற்றப்பட்டால் நமது கலை, கலாச்சாரம், பண்பாடு, மொழி, போன்ற அனைத்தும் அழிந்து விடும் அபாயம் உள்ளது. அதோடு, தாய்மொழிப்பள்ளிகள் தேசிய மொழி பள்ளிகளாக மாற்றப்பட்டால் நமது தமிழ் ஆசிரியர்கள் என்ன ஆவார்கள் என்று நாம் சிந்திக்க வேண்டும். தேசிய பள்ளி தலைமை ஆசிரியராகவோ, துணை தலைமை ஆசிரியராகவோ ஆக முடியுமா…???? அனைத்து நிர்வாகமும் மலாய் சமுதாயத்திற்கே செல்லும் வாய்ப்பு உள்ளது. எனவெ, இந்தியர்களின் பிரதிநிதியான ம.இ.காவும் ம.மு.காவும் ஒன்றும் செய்யவில்லை என்றாலும் பரவாயில்லை. உபத்திரவம் செய்யாமல் இருந்தால் போதும். எனவே, நாம் தமிழர்கள் என்றால் உண்மையான தமிழர்கள் என்றால் தமிழ்ப் பள்ளிகளை தேசியப் பள்ளிகளாக மாற்றுபவதை கடுமையாக எதிர்க்க வேண்டும்…………..

  19. TAMIL says:

    HMMM…. NAMMA KODUKIRAI KASAI NAMALUKU SEIYA IVANUKU VALIKITHAM…. VERY BAD…GUYS PLEASE OPEN YOUR EYES…

  20. RAJ says:

    He had showed tat he is nt educated n nt eligible to be minister of education la… giving salary and teachers r enough to get a land for tamil skul… hw much teacher gt as a salary may be around rm3000. is it enough to buy land????? talking rubbish and damn stupidly….

  21. mohan says:

    The truth and the real colour of Umno was proof by the stupid ( apply to all umno & others stupid ministers) education cum deputy Pm. Pls take note of Pithamagan comments on Indians vote BN and the buyback after vote in Hulu selangor . Umno not botherd of indians or chinese.They only need vote and reject after that.
    We should learn how the Chinese wake up and reject the culprit BN. Next GE around corner and its time for Indians make wise decision to determine the future of next generation.

  22. mohan says:

    Good, malay-sia have this kind of leaders as education minister. When election all leaders gave thousand of promises. After election all janjni kosong. Al theys want just our vote. Wake up Indians. Dont fall on the janji kosong from the BN leaders and regret later. Vote for change.

  23. நக்கீரன் says:

    தமிழ்ப் பள்ளிகளுக்கு இந்தியர்கள் நிலத்தை வாங்கிக் கொள்ள முடியுமா? நிச்சயம் முடியும். இதை நீங்கள் பூமிபுத்ராக்களிடம் சொல்லி அவர்களும் தங்கள் பள்ளிகளுக்குத் தாங்களே நிலத்தை வாங்கிக் கொண்டால்! அவர்கள் மாட்டர்கள், நாங்கள் இதைச் செய்ய வேண்டும் என்றால் தேசிய ஒருமைப்பாடு என்றும் ஒரே மலேசியா என்றும் ஊளையிடாதீர்கள். அந்த ஊளையை நிறுத்துங்கள்!

  24. shamni says:

    very good. Ia sebagai cerita dongeng. Seorang bapa menyuruh anaknya mencari dan mendapatkan makanannya sendiri malah dia yang bertanggungjawab atas segala keperluan anaknya sendiri. Muhidin YOSIDA!! LOOSU

  25. keerthan says:

    supporting to mr kanna..im sure ths idiot duno bt tht..better send him to skul to study history again..he shd shame of himself tellin gth t he is a education minister…duno a simple regulation in our conutry!!!ivan ellam enna pudungu raaNO!!!bloody hell!!!

  26. paveen says:

    தேர்தல் காலங்களில் மட்டும் இவனெல்லாம், (பி.என். அமைச்சர்கள் எல்லாரும்) சொல்லும் ஆசை வார்த்தைகளை நம்பி ஓட்டுப் போடாதீர்கள். வயதான நம் பெற்றோர்களுக்கும் இதைச் சொல்லுங்கள். மீண்டும் மீண்டும் ஆட்டிறைச்சிக்கும், அரிசி பருப்புக்கும் ஆசைப்பட்டு தற்காலிக அற்ப சுகத்துக்காக எதிகாலத்தை வீணடிக்க வேண்டாம். சீனரைப் பார்த்தாவது நாம் திருந்த வேண்டும். அப்டியும் ரோசம் வரவில்லை என்றால் சீனனோட ________

  27. Tamilarasan says:

    Satu Malaysia is actually becoming and showing that it is soothu malaysia so long as Barisan is in power. Indians, especially the MIC fellows must wake up.
    Learn from MCA.

  28. Nethra says:

    வணக்கம். உழைக்கும் வர்க்கம் இந்தியர். பொருள் ஈட்டும் வர்க்கம் சீனர். பதவியில் உட்கார்ந்து கொண்டு ஊதியம் பெரும் வர்க்கம் யார் என்பது நமக்கு தெரியாது என்று கல்வி(இல்லாத) அமைச்சர் நினைக்கின்றார் போலும்.. கொடுக்கின்றோம் என்று கூறும் இவன் யார் வீட்டு பணத்தை கொடுக்கிறான்? முதலில் இவன் வாங்கும் ஊதியமே இந்த சீன இந்திய இனம் ஈட்டும் பணம் என்பது மறந்து விட்டதா? ம.இ.கா (மானம் இழந்த கட்சி) தலைவர்கள் வேண்டுமென்றால் வாய் மூடி இரசிப்பார்கள். நாம் இனி ரோட்டில் நின்று வீரத்தை காட்ட மாட்டோம்… ஓட்டில் நின்று காட்டுவோம்.!!!

  29. Murugan says:

    Negara ini tak perlu sekolah tamil dan cina. Sebab kita berpegang teguh kepada 1 Malaysia. Jadikanlah semua sekolah Tamil dan Cina sebagai sekolah kebangsaan. Disini saya ingin menanya satu soalan sahaja iaitu bolehkah KPM memberi jawatan GB di sekolah kebangsaan kepada kaum India atau pun Cina? Bolekah beri jawatan Pengetua di sekolah Menengah? Bolehkah beri jawatan Ketua PPD di setiap Daerah? Bolehkah beri jawatan Pegarah di JPN? Bolehkah beri jawatan Pengarah di Poli Teknik? Bolehkah beri jawatan Pengarah Kolej Komuniti? Boehkah beri jawatan Naib Couselor di Universiti? Bolehkah beri jawatan Pengarah IPG? Bolehkah beri jawatan Ketua Setiausaha KPM? Bolehkah beri jawatan Ketua Pengarah KPM? Jawatan ini semua di KPM sahaja belum lagi jawatan d Kementerian lain. Kalau ini semua boleh, saya setuju untuk hantar anak saya ke Sekolah Kebangsaan dan saya sendiri akan membuat promosi supaya kaum bukan Melayu hantar anak mereka ke sekolah kebangsaan. Apa terimakah cabaran saya?

Leave a Reply