-ஆறு.நாகப்பன்
தொடக்கப் பள்ளியின் யூ.பி.ஏஸ்.ஆர் தேர்வும் இடைநிலைப் பள்ளியின் பி.எம்.ஆர். தேர்வையும் நிறுத்திவிடும் கல்வி அமைச்சின் நோக்கத்தை துணைப்பிரதமரும் கல்வி அமைச்சருமான முகைதீன் யாசின் அறிவித்துள்ளார்.
இதைக் குறித்துப் பொது மக்கள் தங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம் என்றும் அவர் கூறியிருக்கிறார். வேலை வாய்ப்புக்கும் கல்லூரி நுழைவுக்கும் எஸ்.பி.எம் தேர்வு முடிவே பயன்படுத்தப்படுவதால் அந்த ஒரு தேர்வே போதுமானது என்று கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார். தேர்வை அடிப்படையாய்க் கொண்ட கல்வியைவிட புறப்பாட நடவடிக்கைகள் மூலம் மாணவர்களின் திறனை மேம்படுத்தும் கல்வி முறை பற்றியும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இப்போதுள்ள யூ.பி.எஸ்.ஆர். தேர்வும் பி.எம்.ஆர். தேர்வும் பள்ளிநிலைத் தேர்வுகளாகத் தொடரும் என்றும் அவர் கூறியுள்ளார்.
அதிரடி மாற்றங்கள் கல்வித்துறையைச் சீரழிக்கும்
காலத்திற்கேற்ற மாற்றங்கள் மறுக்கப்பட முடியாதவை. என்றாலும் அடிக்கடி வரும் அதிரடி மாற்றங்கள் கல்வித்துறையைச் சீர்குலைத்துவிடும். அறிமுகமாகும் ஒரு மாற்றம் அறிவியல் பூர்வமான ஆய்வுகளுக்குப் பின்பே வர வேண்டும். செயல்பாட்டுக்கு வந்த மாற்றம் பயன் தருவதற்கும் சில ஆண்டுகள் போகும்.
மலேசியக் கல்வித் துறையில் மாற்றங்கள் நிதானமாகக் கொண்டு வரப்படுவதில்லை. திடீரென்று வருவதும் சில ஆண்டுகளுக்குள் இது சரியில்லை என்று இன்னொன்று மாற்றப்படுவதும் வழக்கமாய் உள்ளது.
கணிதம், அறிவியல் ஆங்கிலத்தில் வந்த பின்பு ஆறு ஆண்டுகளில் மீண்டும் தாய் மொழிகளில் என்று ஆகியுள்ளது ஓர் எடுத்துக்காட்டு.
கே.பி. எஸ்.ஆர். என்னும் தொடக்கப் பள்ளிகளுக்கான புதிய கலைத்திட்டம் அறிமுகமாகிச் சில ஆண்டுகளுக்குப் பின்னர் செய்யப்பட்ட ஆய்வுகளால் அத்திட்டம் எதிர்பார்த்த வெற்றியைத் தரவில்லை என்று அறிவிக்கப்பட்டது.
கல்வித் துறையின் தலைமை இயக்குநரும் கல்வி அமைச்சரும் மாறி வரும் போதெல்லாம் கூடவே சில மாற்றங்களும் வந்தால்தான் வரலாற்றில் அவர்கள் பேசப்படுவார்கள் என்ற ‘அடையாள ஆசைகளாலும்’ நமது கல்வித் துறையில் மாற்றங்கள் வந்துள்ளன.
ஒவ்வொரு முறையும் வரும் மாற்றங்களால் அறிமுகமாகும் திட்டம் சோதனைக்கு உள்ளாவது போல் அதைப் பின்பற்றும் மாணவர்களும் சோதனைக்கு ஆளாகின்றனர்.
இப்படிப் பல சோதனைகளைக் கடந்து வந்த மாணவர்கள் தரமான ஒரு கல்வித் திட்டத்தில் பயின்று பயன் பெறுவதற்குள் அவர்கள் பள்ளி வாழ்க்கை முடிந்து போகிறது. மலேசியக் கல்வித் துறையின் கடந்த முப்பது ஆண்டுகள் இந்த உண்மையைத் தெளிவாக நிறுவியுள்ளன.
சோதனைகள் வேலைகளுக்காக அல்ல
பள்ளிச் சோதனைகளுக்குப் பல நோக்கங்கள் உள்ளன. மாணவர்கள் தங்கள் அடைவு நிலையை அளந்தறிவதற்கும் ஆசிரியர்கள் தங்கள் கற்பிக்கும் திறனை ஆய்வுக்குட்படுத்திக் கொள்வதற்கும் தேர்வுகள் பயன்படுகின்றன. நடைமுறையில் இருக்கும் கலைத்திட்டம் மற்றும் பாடத்திட்டங்களின் தகுதிப்பாட்டைச் சோதித்தறியவும் தேர்வுகள் துணை செய்கின்றன.
மாணவர்கள் தம் கற்றல் பாதையில் எதிர்நோக்கும் இடையூறுகளையும் தேக்கங்களையும் கண்டறிவதோடு மாணவர்களின் உள்ளார்ந்த ஆற்றலை அளவிடுவதற்கும் தேர்வுகள் உதவும்.
மாணவரின் கற்றல் ஆற்றலுக்கு ஓர் உந்து சக்தியாகவும் தேர்வுகள் இருக்க முடியும். இதனை யூ.பி.எஸ்.ஆர். தேர்வில் தெளிவாகக் காண முடிகிறது. பெற்றோர்களும் மாணவர்களும் ஆசிரியர்களும் ஆகிய முத்தரப்பினரின் கூட்டு முயற்சி, செயல்திட்டம், செயல்பாடு ஆகியவற்றை இத்தேர்வுக்கான முன்னெடுப்புகளில் காண முடிகிறது.
புறப்பாட நடவடிக்கைகள்
புறப்பாட நடவடிக்கைகளை மேம்படுத்துவதன் மூலம் மாணவர்களின் திறனை வளர்ப்பதை மாற்றுத் திட்டமாகக் கல்வி அமைச்சர் முன்மொழிந்துள்ளார்.
இது மிகுந்த ஆபத்தானது. புறப்பாட நடவடிக்கைகள் திறன் வளர்ப்புத் திட்டமாக மலேசியாவில் இது வரை முதிர்ச்சி அடையவில்லை என்பதைப் பள்ளிகளோடு தொடர்புடைய பணிகளில் ஈடுபட்டிருந்தவர்களுக்கும் ஈடுபட்டிருப்போருக்கும் நன்கு தெரியும்.
இந்தப் பரிந்துரையை நம்பித் தேர்வுகளைக் கைவிடலாமா என்று கல்வியாளரும் பெற்றோரும் சிந்திக்க வேண்டும்.
பொதுத் தேர்வா? பள்ளித் தேர்வா?
அரசு நடத்தும் பொதுத்தேர்வு பொதுவான கல்வித்திட்டத்தின் சாதக பாதகங்களைக் கண்டறிய துணை செய்வதோடு தேசிய தரத்திற்கான அளவீடாகவும் அமையும். இதுவே பள்ளித் தேர்வாயின் பொதுப் பாடத் திட்டத்தின் அடிப்படையில் செய்யப்பட்டாலும் தேசியத் தரத்தின் அளவீடாக அதன் முடிவுகள் அமைய முடியாது.
சுருங்கக் கூறின் ஒரு நாட்டின் அறிவுத்துறையின் நாற்றங்கால் அந்நாட்டின் பள்ளிகளே ஆகும். அறிவுத் துறையின் பல்வேறு நிலைகளில் எந்த நிலையும் முக்கியமானதே. ஒரு சங்கிலியில் ஒவ்வொரு கண்ணியும் உறுதியாக இருந்தால்தான் அந்தச் சங்கிலி அறுபடாமல் உறுதியாய் இருக்க முடியும்.
கல்வி அமைச்சர் இந்த விஷயத்தையும் அம்னோவின் திட்டமாகக் ஆக்கி விடாமல் அனைத்து மலேசியரின் பொதுப் பிரச்சனையாக இதனைப் பார்க்க வேண்டும்.
கல்வியாளர்களும் பெற்றோர்களும் தங்கள் கருத்துகளை உடனே பதிவு செய்ய வேண்டுமாய்க் கேட்டுக் கொள்கிறோம்.

அனைத்து மலேசிய தமிழர்களுக்கும் வணக்கம்…
தற்போது நமது கல்வி அமைச்சு கொண்டு வந்த திட்டமான, யூபிஎஸ்.ஆர் மற்றும் பிம்.ஆர் தேர்வுகளை அகற்றுவது நல்லத் திட்டம் என ஒரு சாரார் செவி சாய்ப்பது, அதனுடைய விளைவுகளைப் பற்றி அவர்கள் தெளிவடையவில்லை என்பதே இங்கு புலப்படுகிறது. தற்போழுது நமது மாணவர்கள் யூபிஎஸ்.ஆர் தேர்வுகள் இருப்பதாலேயே படிப்பின் மீது அக்கறை கொண்டு கவனம் செலுத்துகிறார்கள். அதன் விளைவுதான் அவர்கள் இடைநிலைப் பள்ளிகளில் சிறந்து விளங்க துணைபுரிகின்றது என்பது வெள்ளிடைமலை. அந்த இரு தேர்வுகளும் இல்லாத பட்சத்தில் ஒரு மாணவர் ஒரே ஒரு சோதனைக்காக 11 ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருக்கும். அப்படியொரு நிலைமை ஏற்ப்ட்டால் தற்பொழுது தமிழ்ப்பள்ளிகளுக்கு கிடைத்து வரும் துளி மரியாதைகள் பிடுங்கி எரியப்படும். தமிழர்களின் அடையாளமே தமிழ்ப்பள்ளிகள் தானே!!!
யூபிஎசார் தேர்வு இல்லாவிட்டால் நாளடைவில் தமிழ்ப்பள்ளிகளும் இல்லாமல் போய்விடும். தேசிய வகை பள்ளிகளைக் குறிப்பாகத் தமிழ்ப்பள்ளிகளை ஒழிப்பதற்காகவே இப்படியெல்லம் புதிய திட்டங்களைக் கொண்டு வருகின்றனர் என்பது என் கருத்து. பிஎம்ஆர் தேர்வு இல்லாவிடினும் பரவாயில்லை. தமிழ்ப்பள்ளிகளின் தரத்தை மேலும் உயர்த்த க்ண்டிப்பாக யுபிஎசார் தேர்வு நடத்தப்பட வேண்டும்.
dalam hidup kita upsr and pmr satu tangga kemaju kita…lagipun tangga pertama ialah upsr…tangga kedua pmr..kalau kita gagal tangga pertama tape kita cuba tangga kedua…kalau dua tangga tade hidupan kita ini juga ?…lagi anak kita tade arah ke universiti……
upsr n pmr kandippaaga irukka vendum. tadpolutu tamil palli aasiriyarkalinn tiramai pala vaaraaga pesapadukuratu…. upsr iruntaal, naam nam pallikalin tiramaiyai kaada mudiyum….
I’m not very sure what the government was looked at when they released the decision to media in consideration of removel of UPSR & PMR eximination at country level & let the both eximination being conducted at respective school level.
Irregarless whether Malay, Chinese or Indian, every examination has created it’s own strenght in every individual student & teacher which eventually formed a very good strong foundation to drive themselve to a direction called “Career” in particular in a student’ life.
Whereby one should understand that foundation state is a very preliminary stage & it’s need a lot of effort to create it. It’s not formed in overnight.
As such, if we were to accept the decision of Education department, it is very obvious that our young generation might be lack of mental & emotional strenght to compete with global achievement.
ஓர் இனத்தை அழிப்பதற்கு முன்பு அந்த இனத்தின் மொழியை மெல்ல அழித்துவிடு என்றான் ஒரு கயவன். அந்தச் செயலை இந்த அரசு மெல்ல மெல்ல அரங்கேற்றி வருகிறது. இதை இங்கு உள்ள தமிழர் ஆழ்ந்து சிந்திக்க வேண்டும். அது தனி நபராக இருந்தாலும் சரி, பொது அமைப்பாக இருந்தாலும் சரி, அரசியல் கட்சியாக இருந்தாலும் சரி. குறிப்பாக, ஆளும் அரசைச் சார்ந்த அரசியல் கட்சிகள் இந்த விஷயத்தில் குறுகிய கால அரசியல் இலாபத்தை கருத்தில் கொண்டு பல் இளித்துக்கொண்டு சொல்லுவதற்கெல்லம் ஆமாம் சாமி போட்டுக் கொண்டு நிற்காமல் துணிந்து குரல் கொடுக்க வேண்டும். இல்லை என்றால் கடந்த கால ஏமாளித்தனத்தால் பலவற்றை இழந்து நிற்கிறோம். இனியும் அது தொடர்ந்தால் வரலாற்றுப்பிழையும் கல்விக் கொலையும் செய்தவர்கள் பட்டியலில் நாம் இடம் பெறுவோம் என்பது மட்டும் திண்ணம்.
pepriksaan upsr perlu dikekalkan untuk membollehkan murid dan guru berkobar-kobar untuk mendapatkan kejaayaan.guru-guru juga sentiasa bersaing antara satu sama lain untuk meningikkan pretasi mata pelajaran yang diajar.
tamil palli maanavargalugku upsr veendum.ethu ellaviddal
varum kaalatil tamil palligale irukkatu.pmr ellavittal paravavillai.spm erukku .ok sar mellnilai pallikku spm mattrum
arramba pallikku upsr.nandri.