ஆயிரம் அன்னையரை அழைத்து அவர்களுக்கு மரியாதை செய்து அன்பளிப்பும் வழங்கும் நிகழ்ச்சி ஒன்றை மலேசிய இந்திய மேம்பாடு மற்றும் ஒற்றுமை மன்றம் (மிண்டாஸ்) ஏற்பாடு செய்துள்ளது.
இது மிண்டாஸ் அன்னையருக்கு எடுக்கும் இரண்டாம் ஆண்டு நிகழ்வாகும்.
இந்நிகழ்ச்சியில் 1000 அன்னையர் பங்கேற்பர். அவர்களுக்கு உரிய மரியாதை செய்து அன்பளிப்பும் வழங்கப்படும் என்று மிண்டாஸ் தலைவர் எல். சேகரன் கூறினார்.
இந்த நிகழ்வில் மிண்டாஸ்சுடன் சூப்ரிம் எண்டெர்டெய்னர்ஸ் மற்றும் பெர்சாத்துவான் பெங்உசாஹா லிட்டல் இந்தியா கிள்ளான் இணைந்து மண்ணின் மைந்தர்களின் “தாய்க்கோர் தாலாட்டு” 2 என்ற நிகழ்ச்சியைப் படைக்கின்றனர்.
இவற்றோடு விருந்தும் உண்டு. கட்டணம் ஏதும் இல்லை என்றும் சேகரன் கூறினார்.
இந்த நிகழ்ச்சியின் இன்னொரு சிறப்பு அங்கம்: 53 சிறந்த மாணவர்களுக்கு அன்பளிப்பும் சான்றிதழும் வழங்கப்படும்.
அன்னையருக்கும் மாணவர்களுக்கும் சிறப்பும் மரியாதையும் செய்யப்படும் இந்நிகழ்ச்சிக்கு அனைவரும் அவசியம் நேரம் தவறாமல் வர வேண்டும் என்று எல். சேகரன் வேண்டிக்கொண்டார்.
இந்நிகழ்ச்சி பற்றிய தகவல்:
நாள்: 9.05.2010 (ஞாயிற்றுக்கிழமை)
நேரம்: மாலை மணி 7.30
இடம்: தேவான் ஹம்சா, கிள்ளான்
தொடர்பு: எல். சேகரன் 016-251 0752.
