மலேசிய சோசலிச கட்சியின் இடதுசாரி நூல்நிலையம் திறப்பு 7 May | நிகழ்வுகள்.

புஸ்தக்கா கீரி (Pustaka Kiri) என்ற இடதுசாரி நூல்களைக் கொண்ட நூல்நிலையம் ஒன்றை மலேசிய சோசலிச கட்சி எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை காஜாங்கில் திறக்கவிருக்கிறது.

இடதுசாரி நூல்களைப் படிப்பதின் மூலம் இடதுசாரிகளின் கொள்கைகள், அவர்களின் போராட்டம், அவர்கள் பெற்ற வெற்றிகள் போன்றவற்றை மக்கள் புரிந்துகொள்ள முடியும் என்று மலேசிய சோசலிச கட்சியின் பொதுச் செயலாளர் எஸ். அருட்செல்வன் கூறினார்.

“இது ஒரு சிறிய நூல்நிலையம்தான். மக்களின் ஆதரவோடு மேலும் வளரும் என்ற நம்புகிறோம்”, என்று அவர் கூறினார்.

இந்த நூல்நிலைய திறப்பு நிகழ்வில் பொதுமக்கள், குறிப்பாக இளைஞர்கள், மற்றும் தொழிலாளர்கள் பெருமளவில் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்ப்பதாக என்று அருட்செல்வன் மேலும் கூறினார்.

புஸ்தகா கீரி நூல்நிலையம் திறப்பு நிகழ்ச்சி பற்றிய தகவல்:

நேரம்: மாலை மணி 4.00

நாள்: 9.05.2010 (ஞாயிற்றுக்கிழமை)

இடம்: எண் 8 (இரண்டாவது மாடி), ஜாலான்   பாலகாங் பத்து 11,
 ஜாலான் செராஸ், காஜாங்.

தொடர்பு: எஸ். அருட்செல்வன் 019-253 7791
 சிவன் 012-376 2023.

 

 
You can leave a response, or trackback from your own site.

Leave a Reply