வாக்களிப்பு நேரம் காலை மணி 8.00 லிருந்து மாலை மணி 5 வரையில். முடிவுகள் இரவு மணி 9.30 அளவில் தெரிய வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இத்தொகுதியில் 48 வாக்களிப்பு நிலையங்கள் இருக்கின்றன.
மொத்த வாக்காளர்கள்: 64,500. மலாய்க்காரர்கள்-34,020 (52.7%), சீனர்கள்-16,964 (26.3%), இந்தியர்கள்-12,453 (19.3%), 1,000-ஓராங் அஸ்லிகள்.
தற்போதைய நிலவரம்
காலை மணி 11.30: மணி 11.00 வரையில் மொத்த வாக்காளர்களில் 38.21 விழுக்காட்டினர், அதாவது 24,645 பதிவு செய்துகொண்ட வாக்காளர்கள், வாக்களித்துள்ளனர்.
பிகேஆரின் பணியாளர்களின் தகவல் படி, செரண்டா சமயப் பள்ளியில் 25 விழுக்காட்டினர் வாக்களித்துள்ளனர்.
இது ஒரு பல்லின தொகுதியாகும். அங்கு 1,898 வாக்காளர்கள் இருக்கின்றனர்.
வாக்காளர்கள், குறிப்பாக மூத்த குடிமக்கள், தவறான வாக்களிப்பு நிலையங்களுக்குச் சென்றுள்ளனர். அவர்களின் வாக்காளிப்பு நிலையம் மாற்றப்பட்டிருப்பது அவர்களுக்குத் தெரியவில்லை.
எஸ்ஆர்ஜெகே (சீ) பள்ளியிலுள்ள வாக்களிப்பு நிலையத்திற்குச் சென்றவர்களுக்கு தங்களுடைய வாக்களிப்பு நிலையம் கம்போங் பாரு செரண்டா வாக்களிப்பு மாவட்டத்திற்கு மாற்றப்பட்டிருப்பதுத் தெரியவில்லை.
