எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராஹிம் மீதான குதப்புணர்ச்சி குற்றச்சாட்டு வழக்கு விசாரணையில் மலேசியாவின் நீதித் துறையை குறை கூற வேண்டாம் அல்லது அதில் “தலையிடவும் வேண்டாம்” என்று மலேசியா இன்று அந்நிய அரசாங்கங்களை எச்சரித்தது.
அவர் மீதான விசாரணை எதிர்த்தரப்பைக் கீழறுக்கும் அரசியல் சதி என்று அன்வார் வருணித்துள்ள அந்த விசாரணையை மேற்கத்திய அரசுகள் அணுக்கமாக கவனித்து வருகின்றன. கடந்த வாரம் தொடங்கிய அந்த விசாரணையில் அவற்றின் அரசதந்திரிகளும் கலந்து கொள்கின்றனர்.
“மலேசியாவின் சட்ட, நீதித் துறையை அந்நிய அரசதந்திரிகளும் தூதரகங்களும் மதிக்க வேண்டும்”, என்று வெளியுறவுத் துணை அமைச்சர் ஏ கோகிலன் பிள்ளை ஏஎப்பி செய்தி நிறுவனத்திடம் கூறினார்.
“அவர்கள் அன்வாருடைய வழக்கு விசாரணையை தாங்கள் விரும்பும் அளவுக்கு அணுக்கமாக கவனிக்கலாம். ஆனால் அவர்கள் எங்கள் சட்டங்களை மதிக்க வேண்டும். எல்லா வகையான குற்றச்சாட்டுக்களை வீசி எங்களுடைய உள்விவகாரங்களில் தலையிடக் கூடாது”, என்று அவர் சொன்னார்.
“அந்த வழக்கு இப்போதுதான் தொடங்கியுள்ளது. அந்த அந்நிய அரசுகள் நமது முறை மீது பாதகமான கருத்துக்களை வெளியிடுவதின் மூலம் தங்களது சொந்த விசாரணையை நடத்துவதற்குப் பதில் மலேசிய நீதிபதிகள் முடிவுகளைச் செய்வதற்கு விட்டு விட வேண்டும்”, என்றாரவர்.
கோகிலன் எந்த ஒரு நாட்டையும் குறிப்பிட்டுக் கூறவில்லை என்றாலும் ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தின் வெளியுறவு மீதான துணைக் குழுவின் தலைவர் மைக்கல் டான்பி ஆற்றிய உரையை அரசாங்கத்துடன் தொடர்புடைய நியு ஸ்ரேய்ட்ஸ் டைம்ஸ் பத்திரிக்கை திங்கட்கிழமை வெளியிட்டது.
“தேசிய அரசியலிலிருந்து அன்வார் இப்ராஹிமை விரட்டுவதற்கு நடப்பு அரசாங்கத்தின் ஆதரவாளர்கள் மலேசிய சட்ட முறையை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்துகின்றனர்,” என்று கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் டான்பி கூறியிருந்தார்.
“அரசியம் நோக்கங்களுக்காக சட்ட முறையை பயன்படுத்தி பாலியல் குற்றங்களை அன்வார் மீது சுமத்துவது மனித உரிமைகளை அவமானப்படுத்துவதாகும்,” என்றும் அவர் சொன்னார்.
அன்வார் விவகாரங்களில் தலையிடுவதாகக் கருதப்படும் நாடுகளின் பேராளர்களை தாம் அழைக்கப் போவதாகவும் கோகிலன் கூறியதாக நியு ஸ்ரேய்ட்ஸ் டைம்ஸ் தெரிவித்துள்ளது.
“நாங்கள் அதனை இன்னும் செய்யவில்லை. ஆனால் விசாரணை முடிந்ததும் அந்த வழக்கு பற்றி அரசதந்திரிகளுக்கு நாங்கள் விளக்குவோம்,” என்றும் கோகிலன் ஏஎப்பி யிடம் கூறினார்.
ஆஸ்திரேலியா அல்லது மற்ற நாடுகளின் தூதர்களை அவர் அழைப்பாரா என்ற கேள்விக்குப் பதில் அளித்த போது அவர் கோகிலன் அவ்வாறு பதில் அளித்தார்.

ஆனால் அந்நிய முதலீட்டு மட்டும் வேண்டும்.. :0
இங்கே பாரையா….இந்தியனை எதெதெர்க்கெல்லாம் கனகட்சிதமா இவங்க பயன்பாட்டுக்கு பயன்படுத்திகிறாங்க…? இஞ்சின் திருடுபோனதற்கு முதல்கொண்டு…அறிக்கைகள் விடுவதுவரை இன்னும் எத்தனை எத்தனையோ…நாமதான்யா…முதுகிலே தட்டிக்கொடுத்தா மற்றவர்களுக்கு நாலுகால்கள் காட்டக்ககூடிய நன்றியைவிட முன்னிலையில் தக்கவைத்துக்கொண்ட தலையாய நன்றியுள்ள மனித ஜந்துகள். வாழ்க நம்மவர்களின் உலகமகா விசுவாசம்.