பேராக் மாநிலத்தில் தேர்தல் நடந்தால், பக்கத்தான் முன்னாள் மந்திரி புசார் முகமட் நிஜார் ஜமாலுடினை எதிர்த்து அவருடைய பாசிர் பாஞ்சாங் தொகுதியில் மனித உரிமைகள் கட்சி அதன் வேட்பாளர் ஒருவரை நிறுத்தக்கூடும்.
அக்கட்சியின் தற்கால பொதுச்செயலாளர் பி. உதயகுமார் இண்ட்ராப்பின் அரசியல் பிரிவான மனித உரிமைகள் கட்சி மேலும் ஆறு தொகுதிகளிலும் போட்டியிடும் என்று சித்தியவான் ரிக்ரியேசன் கிளப்பில் வார இறுதியில் கூறினார்.
புந்தோங், ஹூத்தான் மெலிந்தாங், ஜாலோங், சங்காட் ஜோங், ஜெலபாங் மற்றும் சுங்கை ஆகியவையே அந்த ஆறு தொகுதிகள்.
இக்கட்சி களமிறங்கினால், இத்தொகுதிகளில் முக்கோண போட்டி இருக்கும். பேராக் மாநில சட்டமன்றத்தில் 59 இருக்கைகள் இருக்கின்றன.
பேராக் மாநிலத்தின் சட்டப்பூர்வமான மந்திரி புசார் யார் என்பதை பெடரல் நீதிமன்றம் நாளை அதன் தீர்ப்பில் அறிவிக்கும்.
நாளை வழங்கப்படும் தீர்ப்பு அவருக்குச் சாதகமாக இருக்குமானால், பேராக் மாநிலத்தில் நிலவும் அரசியல் நெருக்கடியைத் தீர்ப்பதற்கு பேராக் சட்டமன்றத்தைக் கலைத்துவிட்டு தேர்தல் நடத்துவதற்கு நிஜார் வாக்குறுதி அளித்துள்ளார்.
பாரிசானின் ஜாம்ரி வெற்றி பெற்றால், அவர் தொடர்ந்து மந்திரி புசாராக நீடிப்பார்.
பேராக் மாநிலத்தின் அரசமைப்புச் சர்ச்சை கடந்த ஆண்டு பெப்ரவர் 6 ஆம் தேதியிலிருந்து தொடர்ந்து கொண்டிருக்கிறது.
புந்தோங் தொகுதியில் 46.2 விழுக்காடு இந்தியர்கள்
இத்தேர்தல் நடக்குமானால், தமது கட்சி அதன் சொந்தக் கொடியின் கீழ் அல்லது சுயேட்சையாக போட்டியிடும் என்று உதயகுமார் கூறினார்.
அக்கட்சி போட்டியிட தேர்வு செய்திருக்கும் ஏழு தொகுதிகளில் அதிக இந்தியர்களைக் கொண்ட தொகுதி புந்தோங் ஆகும். அத்தொகுதி வாக்காளர்களில் 46.2 விழுக்காட்டினர் இந்தியர்களாகும்.
அடுத்து, ஹூத்தான் மெலிந்தாங் 32.1 விழுக்காடு, ஜாலோங் 26.7 விழுக்காடு, சங்காட் ஜோங் 26 விழுக்காடு.
ஜெலப்பாங், பாசிர் பஞ்சாங் மற்றும் சுங்கை ஆகிய தொகுதிகளில் 20 விழுக்காட்டிற்குக் குறைவான இந்திய வாக்காளர்கள் இருக்கின்றனர்.
பல்லினக் கட்சி என்று கூறப்படும் மனித உரிமைகள் கட்சி கடந்த ஆண்டு ஜூலை 19 இல் தொடங்கப்பட்டது.
“எங்களுடைய இலட்சியத்திற்கு நாங்கள் போராடுகிறோம்…அதனை மற்றவர்கள் எங்களுக்காகச் செய்வார்கள் என நம்பியிருக்க முடியாது”, என்று கூறிய அவர் பாரிசான் நேசனலைப்போல் பக்கத்தான் ரக்யாட்டும் ஓரம் கட்டப்பட்ட மக்களின் தேவைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கவில்லை என்றார்.

காற்றை நிருத்தி கேளு
கடலை அழைத்து கேளு
இவந்தான் அசல் என்று சொல்லும்
கடமை செய்வதில் கொம்பன்
கடவுள் இவனுக்கு நண்பன்
நம்பிய பேருக்கு மன்னன்
நன்றியில் இவன் ஒரு கர்ணன்
அடடா அடடா அடடா
தல போல வருமா…
உதயா சார், உங்களுக்கு இந்தப்பாட்டு பொருந்துமோ!
பக்காத்தனையும் எதிர்த்து பாரிசானையும் எதிர்த்து போறாடினால் நமக்கு ஏதேனும் வழிப்பிறக்க வாய்ப்பிருக்கா!! அரசாங்க கஜானாவில் காசிருந்தும் நரிக்கு கிடைக்காத திராட்சையாக நாம் ஆகிவிடமாட்டோமா?
vera vela eruntha parukkunggappa