பினாங்கு மாநில துணை முதல்வர் செம்மொழி மாநாட்டில் கலந்துகொள்ள மாட்டார் 1 Jan | செய்தி.

இந்தியாவில் நடைபெறவிருக்கும் பரவசி மாநாட்டிலும் செம்மொழி மாநாட்டிலும் கலந்துகொள்ளுமாறு பினாங்கு மாநில துணை முதல்வர் இராமசாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த அழைப்புகளை ஏற்றுக்கொள்ள அவர் மறுத்து விட்டார்.

“ஈழத்தமிழர்களுக்கு துரோகமிழைத்த இந்தியாவின் பரவசி மாநாட்டையும் கருணாநிதியின் செம்மொழி மாநாட்டையும் நான் புறக்கணிக்கின்றேன்”, என்று பினாங்கு மாநில துணை முதல்வர் இராமசாமி கூறினார்.

ஈழத் தமிழர்களின் போராட்டத்தை அழிப்பதற்கு இந்தியா இதர நாடுகளுடன் சேர்ந்துகொண்டு செய்த துரோகத்தை எந்த தமிழனும் மன்னிக்க மாட்டான்.

“தமிழீழ போராட்டத்தை அடக்குமுறையின் மூலம் ஒடுக்க சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகளோடு ஒன்றாக இணைந்து இந்தியா மாபெரும் துரோகம் புரிந்துள்ளது. ஈழ தமிழர்களின் வாழ்வுரிமைப் போராட்டத்தை ஒடுக்குவதில் இந்தியா ஆற்றிய பெரும் பங்கை எந்த ஒரு உலகத்தமிழனும் மன்னிக்க மாட்டான்.

இலங்கையில் அரங்கேற்றப்பட்ட இனப்படுகொலையை ஆதரித்த இந்திய அரசு ஏற்பாடு செய்யும் இந்த மாநாட்டில் நான் கலந்துக்கொண்டால், இந்திய அரசின் செயல்பாடுகளுக்கு நானும் உடந்தையாக இருந்ததாக ஆகிவிடும். ஆகவே இந்த பரவசி மாநாட்டை நான் புறக்கணிக்கிறேன்”, என்றார் இராமசாமி.

செம்மொழி மாநாட்டிலும் கலந்துகொள்ளப்போவதில்லை

தமிழ் நாட்டில் நடத்தப்படவிருக்கும் செம்மொழி மாநாட்டிலும் தாம் கலந்துகொள்ளப்போவதில்லை என்றும் அவர் கூறினார்.

“தமிழக முதல்வர் கருணாநிதி அறிவித்திருக்கும் செம்மொழி மாநாட்டிலும் நான் கலந்துக்கொள்ளப் போவதில்லை; காரணம், இந்திய நடுவண் அரசு செய்த துரோகத்திற்கு உடந்தையாக இருந்தவர் இந்த தமிழக முதல்வர்”, என்றார் இராமசாமி.

கருணாநிதி ஏற்பாடு செய்யும் இந்த செம்மொழி மாநாட்டினால் உலக தமிழர்களுக்கு எந்தவோர் பலனும் ஏற்படப்போவதில்லை என்று அவர் மேலும் கூறினார்.

இன்று இது போன்ற மாநாடு அவசியமா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

“பக்கத்து நாட்டில் தமிழர்கள் துடிக்க, துடிக்க படுகொலை செய்யப்பட பொது, தமிழுணர்வோடு எதுவும் செய்யாமல் இருந்துவிட்டு, இன்றும் அகதிகள் முகாமில் பல்லாயிரக்கணக்கான ஈழத்தமிழர்கள் அடைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த செம்மொழி மாநாடு அவசியமான ஒன்றா?”, என்று அவர் வினவினார்.

“கருணாநிதி நடத்தும் இந்த செம்மொழி மாநாட்டில் கலந்துக்கொண்டால், தமிழர்களின் வாழ்வுரிமை போராட்டத்தை மறந்து விடுவது போன்றதாகி விடும், ஆகையால், செம்மொழி மாநாட்டை புறக்கணிக்கிறேன்”, என்றாரவர்.

உலக தமிழர் பாதுகாப்பு மாநாட்டில் கலந்துகொள்கிறார்

செம்மொழி மாநாட்டில் கலந்துகொள்ள மறுத்து விட்ட பினாங்கு மாநில துணை முதல்வர் கோவையில் நடபெறவிருக்கும் உலக தமிழர் பாதுகாப்பு மாநாட்டில் கலந்துகொள்ளப்போவதாக கூறினார்.

மலேசியாவில் வாழும் இனமானமுள்ள தமிழர்கள், உலக தமிழர் பாதுகாப்பு மாநாட்டில் பெரும் திரளாக கலந்துக்கொண்டு உலக தமிழினத்தின் ஒற்றுமையைப் புலப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

“மலேசிய தமிழர்களான நாம், ஈழத் தமிழ் மக்களின் வாழ்வுரிமைப் போராட்டத்தில் கொண்டுள்ள கரிசனையை வெளிப்படுத்தும் அதேவேளை, ஈழத்து விடுதலை போரை கசப்பான முடிவுக்கு கொண்டு சென்ற இந்தியாவின் துரோகத்தை கண்டிப்பாக மறக்கவோ, மன்னிக்கவோ கூடாது”, என்பதை இராமசாமி வலியுறுத்தினார்.

*Please visit proframateam.blogspot.com for

 
You can leave a response, or trackback from your own site.

11 Responses to “பினாங்கு மாநில துணை முதல்வர் செம்மொழி மாநாட்டில் கலந்துகொள்ள மாட்டார்”

  1. மறவன் says:

    ஐயா, உங்களின் துணிச்சலை நான் வரவேற்கிறேன், மதிக்கிறேன்

  2. you are a thru tamil,i salute you SIR!
    VALLGA TAMIL,VALLGA TAMILAH.

  3. காளிதாசன் நாகப்பன் says:

    sabas neer thaanaiya maanamulla unmaiyaana tamilan.go ahead

  4. baskaran says:

    sir. we really respect u! ithu unggalin unarvu illai… oddu motthe tamil samutayathin kural. Sattiyameh vellum attai naalai malarum tamil eelam sollum.

  5. surian says:

    இதுவல்லவோ மானமுள்ள தமிழனின் குணம்
    வாழ்க அய்யா,வாழ்த்துக்கள் .

  6. malaysia tamilan says:

    Mr.karunaneethi is worst tamil leader in this world..!! Ulagga tamilanin muthal “pachai thuroki” ” EHDAPPAN” intha karunaneethi..!! Intha maahnadu irvaruku oru kehdah..!!

  7. RAAKIAR says:

    நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறனுமின்றி வஞ்சனை செய்வாரடி கிளியே; வாய்ச்சொல்லில் வீரரடி.
    எதிர்கால (இப்போதைய) தமிழக தலைமை ஆளுநர்களின் ஆளுமையின் அதிகாரம் எப்படி இருக்கும் என்பதனை முன்னாள் பாட்டுக்குப் புலவன் பாரதி அப்போதே பாடிவைத்தான்.
    ஈழ செய்திகளை படிக்கும்போது உண்மையான பல விடயங்களை நம்மால் உள்வாங்கமுடிகிறது என்பதற்கு இதோ ஒரு அடையாள விடயம்.
    “ஈழ தமிழனுக்கு; தான்+தன் இனம்+இனம் சார்த்த நாடு+நாடு சார்ந்த மொழி என்ற வேகமும் விவேகமும் எழ முதல் காரணியை உருவாக்கிக் கொடுத்ததே சிங்கள அரசுதான் என்ற உண்மையை அறியமுடிந்தது. எப்படி என்கிறீர்களா. தமிழனுக்கு அறிவுக்கு கேடாய் இருக்கும் திரைப்படங்களை அரங்குகளில் திரையேற்றுவதற்கு தடை விதித்ததே. ஆனால், அரசு நினைத்தது ஒன்று. விளைந்தது வேறொன்று. ஈழத் தமிழர்கள் எழுச்சிகொள்ள அரசின் அந்த செயற்பாடு மிகப் பெரிய உந்துசக்தியை அவர்களின் அறிவுக்கு வழங்கியது.
    இதை தமிழக அரசின் தற்போதைய ஆளுநர்களும் நன்றாகவே அறிவார்கள். அறிவதோடு மட்டும் அல்ல. அதை செயல் படுத்தியும் வருகிறார்கள். வீட்டுக்கு வீடு தொலைக்காட்சிப் பெட்டிகளைக் கொடுத்து அறிவைக் கெடுத்து (தமிழர்களால்) அவர்களின் ஆட்சிக்கு தொல்லைகள் வராமல் ஒரு மாயை வேலி போட்டு கட்டிவைதிருக்கிறார்கள். ஆகவே, நாம் (மலேசியா தமிழர்கள்) விழிப்பு என்ற மூன்றாம் கண்ணை திறக்காத வரையில் மிகப் பெரிய வீழ்ச்சியைத்தான் எதிர்நோக்க(நோக)வேண்டியிருக்கும்.
    இந்த விடயத்தில் பினாங்கு மாநில துணை முதல்வர் மதிப்புமிகு இராமசாமி அவர்களின் மனக்குமுறல் அனைத்து உணர்வுமிக்க மலேசியத் தமிழர்களின் மனக்குமுறல்களாகட்டும்.
    ஆண்மை பொதுவானது. ஆனால், பேராண்மை எல்லாருக்கும் இருப்பதில்லை. மாண்புமிகு துணை முதல்வருக்கு என்னுடைய நன்றி…அவருடைய எழுச்சிக்கு.

  8. dhandapani.coimbatore says:

    இந்த விடயத்தில் பினாங்கு மாநில துணை முதல்வர் மதிப்புமிகு இராமசாமி அவர்களின் மனக்குமுறல் அனைத்து உணர்வுமிக்க தமிழர்களின் மனக்குமுறல்களாகட்டும்.
    ஆண்மை பொதுவானது. ஆனால், பேராண்மை எல்லாருக்கும் இருப்பதில்லை. மாண்புமிகு துணை முதல்வருக்கு என்னுடைய நன்றி…அவருடைய எழுச்சிக்கு.இதுவல்லவோ மானமுள்ள தமிழனின் குணம்
    வாழ்க அய்யா,வாழ்த்துக்கள்

  9. Thiru says:

    Malaysian Tamils with self-respect will respect Prof Ramasamy’s decision.
    Mentally retarded Dr M.Karunanithi’s dramas will not relevant any more.
    Malaysian Tamils had learnt how does DMK and I-Congress had teamed up and kill the innocent Eeelam Tamil. Dr MK should not think he could wash away all the sins he had done to the Eelam Tamil with another செம்மொழி drama .Tamils with self-respect and conscience should reject the call for பரவசி மாநாடு and செம்மொழி மாநாடு lead by DMK. Thanks

  10. Ramabarathi says:

    “Ulaga Semmoli Conference” is nothing do with progress of Tamil languange and Tamil people. This conference will not change status quo of the Tamil Language. This is act of certain individuals, especially the traitor Mu Karunanithi. to enhance their image after their treachery towards the Tamils, especially Tamils of Tamil Eelam. I salute Dr Ramasamy for disassociating himself from these traitors.Mr Mu Ka never forget the effect of “Uuzhivinai” (Karma)! You and your group will pay the price! “Tamil penngalin kannirukku vilai undu’.

  11. tamil says:

    dr ramasamy unggal DAP goverment in penag ethavathu help panningalah elathukku

Leave a Reply