எஸ்பிஎம் தேர்விலிருந்து தமிழை அகற்றும் திட்டம் கடுமையாக கண்டிக்கப்பட்டது 27 Nov | செய்தி.

எஸ்பிஎம் (Sijil Pelajaran Malaysia) தேர்வு வழியாக தமிழ் மொழியை மலேசிய கல்வி அமைவிலிருந்து அகற்றுவதற்கு தீட்டப்பட்டிருப்பதாக கருதப்படும் ஒரு பெரும் திட்டத்திற்கு எதிராக நாட்டின் 20 க்கு மேற்பட்ட இந்திய அரசு சார்பற்ற அமைப்புகள் தங்களுடைய எதிர்ப்பைத் தெரிவிப்பதற்காக டிசம்பர் 12 ஆம் தேதி பெட்டாலிங் ஜெயா தோட்ட மாளிகையில் கூடுவர்.

அடுத்த ஆண்டிலிருந்து எஸ்பிஎம் தேர்வுக்கு 10 பாடங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் என்ற அரசாங்கத்தின் முடிவால் தமிழ் மொழி மற்றும் தமிழ் இலக்கியம் ஆகிய பாடங்கள் கல்வி போதனையிலிருந்து அகற்றப்பட்டிருப்பதற்கு எதிராக இந்த எதிர்ப்புக் கூட்டம் நடத்தப்படுகிறது.

அரசாங்கத்தின் இந்த முடிவால் தமிழைத் தாய் மொழியாகக்கொண்ட இந்திய மாணவர்கள் இவ்விரு பாடங்களைத் தேர்வுக்கு எடுத்துக்கொள்ள இயலாது. இது ஒரே மலேசியா கோட்பாட்டிற்கு ஏற்புடையதல்ல என்று இந்தக் கூட்டு இந்திய அரசு சார்பற்ற அமைப்புகளின் ஏற்பாட்டுக் குழுத் தலைவர் எ. திருவேங்கடம் கூறினார்.

பத்து பாடங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் என்ற முடிவுதான் இப்பிரச்னை எழுந்ததற்கான காரணம். ஓர் இந்திய மாணவர் 9 பாடங்கள் எடுத்தால், அவருக்கு மிச்சமிருக்கும் இன்னொரு பாடத்திற்கு தமிழ் மொழியை எடுத்தாரென்றால் அவர் தமிழ் இலக்கியப் பாடத்தை எடுக்க அனுமதிக்கப்படமாட்டார்.

அம்மாணவர் அனைத்து 10 பாடங்களையும் எடுத்தால், இரு தமிழ் பாடங்களில் எதனையும் தேர்ந்தெடுக்க முடியாது”, என்று அவர் மலேசியாகினிக்கு அளித்த நேர்காணலில் கூறினார்.

எஸ்பிஎம் தேர்வுக்கான 10 பாட திட்டம் மலேசியாவில் தமிழ் தாய்மொழிப் பாடமாக இருக்கும் தகுதியிலிருந்து அகற்றும் ஒரு பெரும் திட்டமாகும். இது அரசாங்கம் பரப்பி வரும் ஒரே மலேசியா கோட்பாட்டிற்கு ஏற்புடையதல்ல என்று அவர் மேலும் கூறினார்.

தவறானதும் நியாயமற்றதும் ஆகும்

மலேசியாவில் ஓர் இனத்தின் பெரும்பாலான மக்களால் பேசப்படும் ஒரு மொழியை நாட்டின் கல்வி அமைவிலிருந்து தூக்கி எறிவது மொத்தத்தில் தவறானதும் நியாயமற்றதுமாகும். இம்முடிவு இந்நாட்டில் தமிழ் பள்ளிகள் படிப்படியாக மூடப்படுவதற்கு வழிவகுக்கும்.

இறுதியில், தமிழ் மாணவர்கள் தமிழை ஒரு பாடமாக எஸ்டிபிஎம் தேர்விலும் பல்கலைக்கழகத்திலும் எடுக்க இயலாமல் போய்விடும். கல்வி அமைவிலிருந்து மொத்தமாக தமிழை அகற்றுவதற்கானத் திட்டம் இது”, என்று அரசு சார்பற்ற அமைப்புகளின் சார்பில் அவர் கூறினார்.

கூட்டாக இந்த எதிர்ப்புக் கூட்டத்தில் மலேசிய இந்து சங்கம், மலேசிய தமிழ் இலக்கிய மன்றம், மலேசிய திராவிட கழகம், இந்து தர்ம மகா மன்றம் மற்றும் பல இந்திய அரசு சார்பற்ற அமைப்புகள் பங்கேற்கவிருக்கின்றன.

தமிழ் மொழியையும் தமிழ் இலக்கியத்தையும் பாதுகாப்பதற்கும் பரப்புவதற்கும் வழிவகுக்கும் விதிகள் பெரும்பாலான இந்த இந்திய அரசு சார்பற்ற அமைப்புகளின் சட்ட விதிகள் இருக்கின்றன.

“மாணவர்கள் தமிழ் மொழி பாடம் எடுப்பது சாத்தியமில்லை என்றால் எதிர்காலத்தில் தமிழ் மொழியைப் போதிக்க போதுமான ஆசிரியர்கள் இருக்கமாட்டார்கள்”, என்று அவர் மேலும் கூறினார்.

முகைதின் அறிவிப்பு

இவ்வாண்டு ஜூன் மாத மத்தியில், துணைப் பிரதமர் முகைதின் அனைத்து மாணவர்களும் அதிக பட்சமாக 10 பாடங்கள் மட்டுமே எடுக்க அனுமதிக்கப்படுவர் என்று அறிவித்தார்.

இதற்கு ஒரு விதிவிலக்கு மட்டுமே உண்டு. அடுத்த ஆண்டு கூட்டு அறிவியல் மற்றும் சமய பாடங்களை எடுக்கும் மாணவர்கள் 11 பாடங்கள் எடுக்க அனுமதிக்கப்படுவர். அது பாடத்திட்டம் 2011 ஆண்டிற்குள் சீர்செய்யப்படும் வரையில் தொடரும். அதற்குப் பிறகு அவர்களும் அதிக பட்சமாக 10 பாடங்களே எடுக்க அனுதிக்கப்படுவர்.

“இதன் பொருள் என்னவென்றால், எஸ்பிஎம் தேர்வுக்கு 2011 ஆண்டிலிருந்து அனைத்து மாணவர்களும், அவர்கள் தேசிய, சுயேட்சை அல்லது தனியார் பள்ளிகளிலிருந்தோ வரலாம், அதிக பட்சமாக 10 பாடங்கள் மட்டுமே எடுப்பார்கள்”, என்று கல்வி அமைச்சருமான முகைதின்  ஜூன் 16 இல் கோலாலம்பூரில் நடந்த கோமன்வெல்த் கல்வி அமைச்சர்களின் 17 வது மாநாட்டிற்குத் தலைமைத் தாங்கிய பின்னர் செய்தியாளர்களிடம் கூறினார்.

எஸ்பிஎம் தேர்வுக்கான ஆறு அவசியம் கற்க வேண்டிய பாடங்களான பகசா மிலாயு, ஆங்கிலம், இசுலாமிய கல்வி அல்லது நன்னெறி பாடங்கள், வரலாறு, கணிதம் மற்றும் அறிவியல் ஆகியவற்றில் மாற்றமிராது என்று அவர் கூறினார்.

 
You can leave a response, or trackback from your own site.

6 Responses to “எஸ்பிஎம் தேர்விலிருந்து தமிழை அகற்றும் திட்டம் கடுமையாக கண்டிக்கப்பட்டது”

  1. Siva says:

    இந்தியர்களிடம் கலந்து பேசாமல் முடிவு எடுப்பது நான் வன்மையாக கண்டிக்கிறேன். இந்த கருத்து வெளியிட்டவரின் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். நமது பிரதமர் இந்த பிரச்சனையில் நேராக தலையிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

  2. gansan says:

    Muhaideen adalah seoarang menteri yg tidak ada berpendidikan tinggi.kelayakan beliau adalah spm sahaja.pasal itu beliau tidak berfikir secara rasional….dulu dia kondem masyarakat cina….apabila mereka menentang sudah diam….sekaranag dia kondem kaum masyarakat india…..Dia nak testing kekuatan masayarakt india……kita mestilah menunjukkaan kekuatan dan bersama -sama bersatu padu untuk menyokong kepada pihak -pihak yang menunjuk perasaan…..Kita mesti nak tunjuk kita punya kekuatan…

    Dear MIC’s…sesiapa yg ada tulang belakang dan berhasrat untuk tunjuk perasaan kepada BN untuk membelah Bahasa ibunda iaitu bahasa Tamil Harap…sesiapa yg ada tulang belakang akan bersama dgn kita untuk tunjuk kekuatan masayarakt india sambil membelah BAHASA IBUNDA KITA….diharap…semua akan menyertai dalam mogok haan inie…sekian terima kasih…..Tamil engal Uyir

  3. மறவன் says:

    இது சுதந்திர நாடு. ஜனநாயக நாடு. தேர்வில் எத்தனை பாடங்கள் எடுப்பது என்பது மாணவர்கள் திறமையைப் பொருத்தது, அரசாங்கம் அதை நிர்ணயிக்க நாம் அனுமதிக்க முடியாது. தேவையானால், அரசாங்க விருப்பப்படி 10 பாடங்களும் மாணவர்கள் தங்கள் விருப்பப்படி 2 பாடங்கள் ஆக 10+2 (12) பாடங்கள் எடுக்க அனுமதிக்க வேண்டும். அப்படி அனுமதிக்க முடியாது அன்று அரசாங்கம் கூறுமானால் அது தாய்மொழிக் கல்வியை அழிக்க மட்டும் அல்ல சம்மந்தப்பட்ட மொழிகளையே அழிக்கும் நோக்கமாகவே கருதப்படும்

  4. 1 malaysia says:

    menteri di malaysia sebelum umumkan sesuatu pembaharuan fikirlah secara dalam,ataupun minta pendapat dari mereka yang lebih arif tentang perkara berkenaan,jangan ingat bila jadi menteri engkau orang yang paling cerdik di malaysia,bila orang tegur sedarlah kesilapan engakau orang dan perbetulkan kesilapan itu,jgn jadi angko,nanti bukan masyarakat jah marah tuhanpun akan benci pada mereka yg angkoh,orang politik fikirlah untuk rakyat malaysia jgn fikir untuk satu kelompok sahaja.semoga tuhan restu perjuangan kita untuk 1 malaysia dan kita hidup aman damai.

  5. சித்திரப்பாவை says:

    பாவம் முஹிடின், இன்னும் எஸ்ட்டேட் மக்கள் நாம் என்று நினைக்கிறார் போலும் :) அவரின், அறியாமைக்கு என் வருத்தங்கள்.

    இப்படியெல்லாம் அறிக்கை விட்டு தமிழ் மக்களின் வயத்தெறிச்சலை கொட்டிக்கொண்டே இருக்கட்டும், இன்னும் 3 வருடம்தான் இவர்களின் ஆட்டம் அடங்கிவிடும்.

    எப்படியாகினும் அரசாங்கம் எங்கு நமது உரிமைகளில் எங்கு கைவைத்தாலும் நாம் அடயாளம் கண்டு. நம் உரிமைகளை விட்டுக்கொடுக்காமல் போறாடுவோம்.

  6. Muru says:

    My dear Indians,

    We must One Indians,as Mr Najip says One Malaysia. then we can ask what we want to the government.

Leave a Reply