உங்கள் கருத்து:”பிடிஎன் ஒற்றுமையை வளர்க்கிறதா? ஒப்புக்கொள்ள மாட்டேன்.” 27 Nov | செய்தி.

நான் பிடிஎன் பயிற்சி வகுப்புகளில் கலந்து ஒண்டிருக்கிறேன். அங்கு மூளைச் சலவை செய்யப்படுகிறது. தேமு(தேசிய முன்னணி)வை ஆதரிக்காவிட்டால் நாடு அழிந்துபோகும் என்று கூறுவார்கள். ஒரே மலேசியா, தேசியம், ஒற்றுமை பற்றிக் கற்றுக்கொள்கிறோமா? அதெல்லாம் வெறும் கதை.”

பிடிஎன் பயிற்சிகளில் மூளை சலவை செய்யும் வேலை இல்லை- முகைதின்
பிடிஎன் பயிற்சிகளைத் தற்காத்துப் பேசுகிறார்கள் அமைச்சர்கள்

ஜிபிஎல்கே7277: நான் பிடிஎன் பயிற்சி வகுப்புகளில் கலந்துகொண்டதுண்டு. அங்கு மூளை சலவை செய்யப்படுவது உண்மைதான். அங்கு என்ன சொல்வார்கள் தெரியுமா, நாமெல்லாம் குடியேறி வந்தவர்களாம், “டுரியானி”ல் சிறிய பகுதிதான் நமக்குரியதாம். அதற்கு நாம் ஏற்கனவே ஒப்புக்கொண்டிருக்கிறோமாம்.

அதனால், எது குறித்தும் கேள்வி கேட்க முடியாது. வாயை மூடிக்கொண்டு கிடைக்கும் டுரியானைப் பெற்றுக்கொள்ள வேண்டியதுதான். மீறி வாயைத் திறந்தால் சீனாவுக்கோ இந்தியாவுக்கோ திரும்பிப் போக வேண்டியதுதான். அது பெரும்பாலும் அரசியல் சார்ந்த பயிற்சிதான். பெர்சே, இண்ட்ராப் பேரணிகளைக் காண்பித்து தேமு-யை ஆதரிக்காவிட்டால் நாட்டில் குழப்பம் ஏற்படும். நாடு அழிந்துபோகும் என்பார்கள்.

1மலேசியா, தேசியம், ஒற்றுமை பற்றியெல்லாம் கற்றுத்தரப்படுகிறதா? அதெல்லாம் கதை.

காம்வேரா ஜோஸ்: 2000-இல், பெட்ரோனாஸ் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டில் படித்துக்கொண்டிருந்தபோது கேம் பினா நெகரா முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டர்களில் நானும் ஒருவன். கெடாவில் ஒரு ராணுவ முகாமுக்கு அனுப்பப்பட்டோம்.

சொற்பொழிவுகள் இடம்பெற்றன. உடல் பயிற்சி  நடவடிக்கைகளில் ஈடுபட்டோம். இரண்டு விசயங்களை மட்டும் என்னால் மறக்க வியலாது. ஒரு கலந்துரையாடலின் முடிவில் பயிற்றுநர் கூறினார், மலாய்க்காரர் சிறப்புரிமைகள் பற்றி மலாய்க்காரர்-அல்லாதார் கேள்வி எழுப்புலாகாது, அவர்கள் கடுமையாக உழைத்து முன்னேற வேண்டும் என்று.

இன்னொரு உரைநிகழ்வில் “புதிய அரசியல் கட்சிகள்’ ‘நாட்டின் பாதுகாப்புக்கு மிரட்டல்” என்று வலியுறுத்திச் சொல்லப்பட்டது.

ஜவஹர் ஹசன்: பிடிஎன் முகாமுக்குச் சென்றவர்கள் அந்தப் பயிற்சி வகுப்புகள் எப்படி நடக்கும் என்பதை  அறிவார்கள். கைபேசிகளையும் ஒலிப்பதிவு கருவிகளையும் அங்குள்ள அதிகாரியிடம் ஒப்படைத்து விட்டுத்தான் பயிற்சி வகுப்புக்குள் செல்ல வேண்டும். அதன் காரணம் என்ன? அப்படி ஒரு விதிமுறை தேவைதானா? எதை மறைக்கப் பார்க்கிறார்கள்?

சேம்சேம்: நம் துணைப் பிரதமர் பொய் சொல்கிறார். தாம் சொல்வதுதான் சரி என்பதை அவரால் நிரூபிக்க முடியுமா? இன்னமும் நம்மை ஏமாளிகள் என்றும் மடையர்கள் என்றும்தான் அவர்கள்  நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்.

துணைப் பிரதமர் அவர்களே, நாங்கள் ஏமாளிகளுமல்ல, மடையர்களுமல்ல. நீங்கள் பொத்திக்கொண்டு சும்மா இருப்பது நல்லது. வாயைத் திறந்து மாட்டிக்கொள்ளாதீர்கள். (பாரிசானில் உள்ளவர்கள் அடிக்கடி அதைத்தான் செய்கிறார்கள்)

சீ ஹோ: அரசு ஊழியர்களும், மற்ற பொதுத்துறை ஊழியர்களும் பிடிஎன் முகாமுக்குச் செல்லத்தான் வேண்டும் என்று சட்டம் எதுவும் இருக்கிறதா? அப்படி ஒன்றில்லை என்றால் அந்தப் பரப்புரை முகாம்களுக்குச் செல்லாமல் இருப்பதே நல்லது.

கழுகு: பிடிஎன் பயிற்சிகளின் உள்ளடக்கத்தை வெளியிடுங்கள். அது இனவாதத்தைத் தூண்டி விடுகிறதா என்பதை முடிவு செய்து கொள்கிறோம். அத்துடன், மக்களாகிய எங்களுக்கு எது நல்லது என்று உபதேசம் செய்வதையும் நிறுத்துங்கள். எங்களுக்கு  நல்லதை எங்களால் முடிவு செய்துகொள்ள முடியும். சமயம் வரும்போது உங்கள் எதிர்காலத்தையும் நாங்களே முடிவு செய்வோம்.

லுசியாபா: பிடிஎன் பயிற்சிகளில் கலந்துகொண்டவர்கள் அச்சமின்றி முன்வந்து அங்கு நடந்ததை விவரிப்பார்களா?

சிலாங்கூர் அரசின் கல்வி, உயர்க்கல்வி, மனிதவள மேம்பாட்டுக்குழுத் தலைவர், சொல்வது உண்மையா அல்லது துணைப் பிரதமர் உண்மையை மூடி மறைக்கப்பார்க்கிறாரா?

இருவரில் யாரோ ஒருவர் உண்மை சொல்லவில்லை என்பது மட்டும் வெளிப்படை. அந்தப் பொய்யர் யார்? அம்பலப்படுத்திக் கண்டிக்கப்பட வேண்டிய தருணம் வந்து விட்டது.

கிரி: இரத்தம் கொதிக்கிறது. ஆண்டவனே, இப்படியும் பொய் சொல்வார்களா? 

டிகேசி: துணைப் பிரதமர் அவர்களே, “அவர் சொன்னார், இவர் சொன்னார்” என்பதெல்லாம் வேண்டாம். பிடிஎன் பயிற்சிகளின் நிகழ்த்தப்படும் சொற்பொழிவுகளின் எழுத்துப் படிவங்களை இணையத்தளத்தில் வெளியிடுங்கள். நாங்கள் முடிவு செய்து கொள்கிறோம். தயவு செய்து, அது ஓஎஸ்ஏ- இன்கீழ் இரகசியமானது என்று மட்டும் கூறாதீர்கள். 

அஸ்மில்: முற்போக்காக நடந்து கொண்டிருக்கும் சிலாங்கூர் அரசுக்கு, சபாஷ்!. பிடிஎன் பயிற்சி வெறுப்பை வளர்க்கும் ஒன்றாக விளங்குகிறது. அப்படிப்பட்ட ஒன்றை உருவாக்கியிருக்கவே கூடாது. வலுக்கட்டாய போதனைகளின் மூலம் குடியுரிமையின் மதிப்புகளைப் பதிய வைக்க முடியாது. அதுவும் இனவெறுப்பேற்றும் போதனை மூலமாக நிச்சயமாக முடியாது.

கேலியோ: பிடிஎன் முகாம்களில் தேமு கீழ்த்தரமான போதனைகளைப் புகட்டுவதற்கு நான் சாட்சி கூறுவேன். அங்கு நிகழ்த்தப்பட்ட “ceramah”களில் “Ketuanan Melayu “pendatang” போன்ற சொற்கள் தாராளமாக ஆளப்பட்டன. அதன் தொடர்பில் முகாம் ஏற்பாட்டாளர்கள்மீது ஆத்திரம் கொண்டு அவர்களில் ஒருவருடன் வாதாடியதுகூட எனக்கு நினைவில் இருக்கிறது.

எல்லா முகாம்களிலும் அப்படித்தானா என்பது எனக்குத் தெரியாது. ஆனால், என்னுடன் பயிற்சியில் கலந்துகொண்டவர்கள்- மலாய்க்காரரும் மலாய்க்காரர்-அல்லாதாரும்- முகாம் அதிகாரிகள்மீது வெறுப்புக் கொண்டிருந்தார்கள் என்பது மட்டும் எனக்குத் தெரியும். 

பி தேவ் ஆனந்த் பிள்ளை:  சபாஷ் சிலாங்கூர். இந்த நல்ல பணியைத் தொடருங்கள். அடுத்த தேர்தலிலும் மக்கள் உங்கள் பக்கம்தான். மலேசியர்களை ஒற்றுமைப் பாதையில் இட்டுச் செல்லும் துணிச்சல்மிக்க மலாய்த் தலைவர்கள் சிலர் இருப்பதை அறிய மகிழ்ச்சியாக இருக்கிறது. மீண்டும் ஒரு சபாஷ்.

 
You can leave a response, or trackback from your own site.

One Response to “உங்கள் கருத்து:”பிடிஎன் ஒற்றுமையை வளர்க்கிறதா? ஒப்புக்கொள்ள மாட்டேன்.””

  1. Ramabarathi says:

    Its true that BTN camp is a racialist camp. Many of my students who had attended the camp were belittled. Reminded that they were “pendatang” and should be grateful to the BN government as well as must accept and submit to “Ketuanan Melayu”. Its utter lie that it teaches about 1Malaysia whereas the camp is going on for years to propagate UMNO’s “Ketuanan Melayu” and 1Malaysia being propogate just few months since our great Najib took over the primiership. Political leader who hold high offices should be symbol of intergrity !

Leave a Reply