உங்கள் கருத்து:“இண்ட்ராப் பக்காத்தானில் சேர்வது நல்லது”
“பாரிசான் நேசனல் அரசாங்கம் இந்த இயக்கத்தை ஏற்கப்போவதில்லை.எனவே, அதற்குள்ள ஒரே வழி பக்காத்தானில் இணைவதுதான். அப்படி செய்வதால் இண்ட்ராபுக்கு ஆதரவு கூடும்……”
இண்ட்ராப் நவம்பர் 25 பேரணியை நினைவுகூர்கிறது
ஐவி பாலா: இண்ட்ராப் தன் கோரிக்கைகளை முன்கொண்டு செல்ல அரசியலில் இறங்குவது பற்றி ஆலோசிக்க வேண்டும். பாரிசான் நேசனல் அரசாங்கம் இந்த இயக்கத்தை ஏற்கப்போவதில்லை. எனவே, அதற்குள்ள ஒரே வழி பக்காத்தானில் இணைவதுதான்.
அப்படி செய்வதால் இண்ட்ராபின் கோரிக்கைகளுக்கு ஆதரவு கூடும். மலேசிய தமிழர்கள் பலர் இண்ட்ராப்பை ஆதரிக்கிறார்கள். கோரிக்கைகளை வெளிச்சம் போட்டுக்காட்டவும் ஆதரவைச் சிறப்பாக ஒழுங்குபடுத்தவும் இண்ட்ராப்புக்கு ஒரு வழிமுறை தேவை.
ஜிகே: இந்திய வாக்காளர்களுக்கு, அந்த வகையில் மலேசிய வாக்காளர்களுக்கும்கூட நான் சொல்ல விரும்புவது இதுதான். பலஇன அரசியலை நாடிச் செல்லுங்கள். ஓர் இனத்தின் உரிமைக்காக மட்டுமே நாம் போராடிக்கொண்டிருக்க முடியாது. அதுதான் இனவாத அரசியல் எனப்படுவது. அதை விடுத்து பலஇன அரசியலை நாடுவோம்.
ஜிரோனிமோ: இண்ட்ராப் மலேசிய அரசியல் வானில் முதலில் தோற்றம் கண்டபோது நான் அதன் தீவிர ஆதரவாளர்களில் ஒருவனாக இருந்தேன். ஓராண்டுக்குப் பின்னர் இந்தியர்கள் வெளியிலிருந்து தங்களுக்கு உதவி கிடைக்கும் என்று எண்ணுவதை நிறுத்திக்கொண்டார்கள். சீனர்களைப்போல் அவர்களும் பக்குவப்பட்டு தங்கள் பிழைப்புக்கு வழிசெய்யும் அவசியம் மற்றவர்களுக்கு இல்லை என்பதால் யாரிடமிருந்தும் எதையும் எதிர்பார்ப்பதில்லை.
அவரவரும் அவரவர் நலனைப் பார்த்துக்கொள்ள வேண்டியதுதான். வாழ்க்கைப்போரில் தாக்குப்பிடித்து நிற்க ஒவ்வொருவரும் ஆயத்தமாக இருத்தல் வேண்டும். பிச்சைக்காக அழாமலும் புலம்பாமலும் உங்களுக்கு வேண்டியதை நீங்களே தேடிக்கொள்ள வேண்டியதுதான்.
பிரிமலேசியா: ஆமாம். இந்தியர்களும் சீனர்களைப்போல் ஆக வேண்டும். சீனர்கள், வெற்றிக்காகக் கடுமையாக உழைக்கிறார்கள். முடிவில் ஒவ்வொருவரும் விரும்புவது எதையென்றால் “சுயமாக” சாதித்தோம் என்ற நினைப்பில் தலை நிமிர்ந்து நடப்பதைத்தான்.
மேலும், அரசாங்கத்திடமிருந்து பெரிதாக உதவி கிடைக்கும் என்று இண்ட்ராப் எதிர்பார்க்க இயலாது. 1மலேசியா என்பது ஆளை ஏய்க்கும் வேலை. இந்தியர்கள், பிச்சைக்காகக் காத்திராமல் சுய முயற்சியில் வெற்றிபெற வேண்டும். அரசாங்கத்திடமிருந்து உதவி கிடைப்பதில்லை.
ரஞ்சிட் சிங்: இண்ட்ராப்பும் இந்தியர் சமூகமும் பிச்சை கேட்கவில்லை. நீங்கள் தப்பாக புரிந்துகொண்டிருக்கிறீர்கள். கடும் உழைப்பு என்பது ஒரு விருப்பத் தேர்வல்ல. அது அனைவருக்கும் தேவையான ஒன்று. இந்தியர்கள் கடும் உழைப்பாளிகள் என்பதில் ஐயமில்லை. அதனால்தான் 1800-களில் காலனித்துவ அரசு தோட்டங்களில் பணிபுரிய இந்தியர்களைக் கவனமாகத் தேர்ந்தெடுத்து அழைத்து வந்தது. தோட்டத் தொழிலாளர்களின் வேலை காலை மணி 5-க்குத் தொடங்கி மாலை 4-க்கு முடிவுறும்.
இண்ட்ராப், இந்தியர்களுக்குச் சம உரிமை வேண்டும் என்றும் அவர்கள் கொளரவமாக நடத்தப்பட வேண்டும் என்றும் கோருகிறது. அதில் தவறில்லை. எந்த ஒரு நாகரிக சமுதாயமும் அப்படிப்பட்ட கோரிக்கையை மதிக்கும். அதேபோல்தான் மார்டின் லூதர் கிங், ஆப்ரிக்க அமெரிக்கர்களுக்கு சம உரிமை பெற்றுத்தரவும் அவர்கள் மதிப்புடன் நடத்தப்பட வேண்டும் என்பதற்காகவும் போராடினார். வெள்ளை பேரினவாதிகள் அவரைத் தீயவராகச் சித்தரித்துக்காட்டினார்கள்.
பல ஆண்டுகளுக்குப் பிறகுதான் அமெரிக்கர்கள், சிவில் உரிமைகளின் உண்மைப் பொருளை உணர்ந்தார்கள். மலேசியர்கள் இன்னும் அந்த அளவுக்கு முதிர்ச்சி காணவில்லை போல் தெரிகிறது.
ராகவன் மேனன்: மகாத்மா காந்தியும் மார்டின் லூதர் கிங்கும் இன்று உயிருடனிருந்தால், இண்ட்ராப்பை எண்ணிப் பெருமை கொள்வர். சமுதாயத்துக்கு துணிச்சலும் தியாக மனப்பான்மையும் கொண்ட (இண்ட்ராப்பில் இருப்பவர்கள் போன்று) உண்மையான தலைவர்கள் தேவை.
டேனியல்: இண்ட்ராப்பின் உணர்வுகளைப் பாராட்டுகிறேன். ஆனால் 18-மணி நேர அடையாள உண்ணாவிரதப் போராட்டம்? அது எதிர்ப்பைக் காட்டும் அடையாளமாக இருக்கலாம் ஆனால் அது, இந்தியர் பிரச்னைகளைத் தீர்க்கும் என்று நான் கருதவில்லை.
இனச் சமத்துவம், பாகுபாட்டுக்கு எதிர்ப்பு என்ற போக்கிலேயே சென்று கொண்டிருக்காமல் ஏன் இண்ட்ராப் தொழிலாளர் கொள்கைகளுக்காக தொழிற்சங்க இயக்கத்தில் ஈடுபட்டுப் போராடக் கூடாது? அவர்களின் சம உரிமைக் கோரிக்கைகளை வலியுறுத்த தொழிற்சங்க இயக்கம் நல்ல வாய்ப்பாக அமையும்.
மலேசியாவில் உடல் உழைப்பு தேவைப்படும் துறைகளில் (தொழிற்சாலைகளில், தோட்டங்களில், துப்புரவுப் பணிகளில்) இந்த சமூகத்தைச் சேர்ந்தவர்கள்தாம் அதிகம் பணி புரிகிறார்கள்.
அல்பிரட் அடைக்கலராஜ்: இவர்கள் தங்கள் சமூகத்துக்கு ஏதாவது நல்லது செய்ய நினைத்தால், முன்னிலும் கடுமையாக உழைக்க வேண்டும். எதிர்ப்பைக் காட்டுவதிலும் பேரணி நடத்துவதிலும் கோரிக்கைகளை முன்வைத்துப் போராடவும் செலவிடும் நேரத்தைத் தங்களை வளப்படுத்திக்கொள்ளவும் அதன்வழி சமூகத்தை வளப்படுத்தவும் அவர்கள் செலவிடலாம்.
அநியாயம் நிலவுவது உண்மையாக இருக்கலாம். அதனால் என்ன? எங்குதான் அது இல்லை. அதை உணர்ந்து அதையும் தாண்டிச் சென்று தன்னைத்தானே மேம்படுத்திக்கொள்ள வேண்டும்.
ஏதோ பணத்திமிரில் நான் வேடிக்கையாக பேசுவதாய் சிலர் நினைக்கலாம். உண்மை அதுவல்ல. என் 19-வது வயதில் ஓர் உணவகத்தில் மணிக்கு ரிம2.50 சென் சம்பளத்தில் வேலை செய்யத் தொடங்கினேன். வேலைக்காக ஒவ்வொரு நாளும் எட்டு மைல் சைக்கிளோட்டிச் செல்வேன். கடுமையாக உழைத்து வாழ்க்கையில் நல்ல நிலைக்கு உயர்ந்தேன்.







November 26th, 2009 at 4:44 pm
I support hindraf’s to join PKR may be we can see some improvements but PKR leader must fulfil our hindraf’s leader all the requirements.I hope all our indian brother’s and sister’s can fully support our hindraf’s leader for achive our requirements next election.
The most important PKR must show strong group member team and must be show good manage one strong team to sucees next election.
November 26th, 2009 at 7:41 pm
saya setuju hindraf join dengan pakatan tapi dengan satu syarat iaitu melalui sebuah parti india.sebab dalam pakatan tiada parti india.kalau ini terjadi kita akan mendapat kerusi di parlimen dan dun dan kita boleh bertanding di pilihanraya umum yang akan datang.saya juga berharap kawan p.utayakumar akan membawa masuk partinya kedalam pakatan rakyat.kalau dia bertanding dalam pilihanraya akan datang dengan sendiri saya yakin dia tidak dapat menang di 15parlimen dan 38 dun yang akan ditandingi oleh partinya nanti.
November 26th, 2009 at 11:45 pm
biasa lah i dah lama sdh tahu dia org mesti msk politik atau buka parti,yang mangsa ialah kita………………….bila nak ubah sikap mcm ni…………………………..kesihan lah org2 msk penjara…………..comment ni bg i lah,,,,,,,,,,,,,,,,,,,,,,sorry 4 hindaf supporter