கோட்டா சிபுத்தே: தேர்தல் ஆணையத்திற்கு இடைக்கால உத்தரவு கிடைத்தது
24 Nov | செய்தி.
You can leave a response, or trackback from your own site.
கோட்டா சிபுத்தேயில் இடைத்தேர்தல் நடத்துமாறு தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் வழங்கியிருந்த தீர்ப்பு அமலாக்கம் செய்வதைத் தள்ளி வைக்கும் இடைக்கால உத்தரவை இன்று மேல்முறையீட்டு நீதிமன்றம் பிறப்பித்தது.
இந்த உத்தரவை மேல்முறையீட்டு நீதிமன்றம் இன்றிரவு மணி 7.20 க்கு பிறப்பித்தது. தேர்தல் ஆணையம் இடைத்தேர்தல் நடத்துவதற்கான உத்தரவு பிறப்பிக்க வேண்டிய கடைசி நாள் நாளையாகும்.
இன்று வழங்கப்பட்ட இந்த இடைக்கால உத்தரவு தேர்தல் ஆணையம் இடைத்தேர்தலுக்கான வாக்காளர் நியமன நாள் மற்றும் வாக்களிப்பு நாள் ஆகியவற்றை அறிவிக்கும் உத்தரவு பிறப்பிக்கப்படுவதைத் தள்ளிவைக்க வகைசெய்கிறது..
