பாலா பேட்டி: “ஏன் இந்த ஆழ்ந்த மௌனம்?” 22 Nov | செய்தி.

“அந்தப் பேட்டிகளுக்கு முன்னர் நான் உட்பட மூன்று மூத்த வழக்குரைஞர்கள் பி பாலசுப்ரமணியத்தை கடுமையாக ‘குறுக்கு விசாரணை’ செய்துள்ளோம் என்பதை உங்களுக்கு உறுதியாகக் கூற விரும்புகிறேன்.”

பாலா சொல்வது உண்மையானால் நம்மை இறைவன் காப்பாற்றட்டும்.

அமெரிக் சித்து : அந்தப் பேட்டிகளுக்கு முன்னர் நான் உட்பட மூன்று மூத்த வழக்குரைஞர்கள் பி பாலசுப்ரமணியத்தை கடுமையாக “குறுக்கு விசாரணை”  செய்துள்ளோம் என்பதை உங்களுக்கு உறுதியாகக் கூற விரும்புகிறேன். அவர் உண்மையைத் தான் கூறுகிறார் என்பதில் நாங்கள் மிகவும் மனநிறைவு அடைந்துள்ளோம்.

நிதி ஆதாயம் என்பது அவரது நோக்கமல்ல. அவருடைய வருமான வழி இப்போது துண்டிக்கப்பட்டுள்ளது. ஆகவே மிரட்டல் என்ற பிரச்னையே இங்கு எழவில்லை. அவர் சொல்வது உண்மை இல்லை என்றால் அவரைக் குற்றம் சாட்டியிருக்கின்றவர்கள் காட்டும் ஆழந்த மௌனம் நம்மை செவிடாக்குகிறது.

ஒரே மலேசியா நண்பன் : சாதாராண பார்வையாளர் கண்ணோட்டத்தில் அவருடைய தகவல்களை நாம் முதலில் ஆராய்வோம். தமது முதலாவது சத்தியப் பிரமாணம் உண்மை என்று பி பாலா உறுதிப்படுத்தியிருப்பது மிகவும் மிகவும் கடுமையான விஷயமாகும். அது உண்மை என்றால் அது நமது பிரதமருக்கும் மலேசியாவுக்கும் அவமானம். உலகம் நம்மை பார்த்துக் கொண்டிருக்கிறது.

நமது பிரதமர் மௌனமாக இருப்பதற்குப் பதில் உடனடியாக நடவடிக்கை எடுத்து எல்லாவற்றையும் சீர்படுத்த வேண்டும். இல்லை என்றால் அதனை சாதாரண மனிதனால் புரிந்து கொள்ள முடியாது. தனிப்பட்ட துப்பறிவாளர் பாலா கூறுவதையே நம்புவான்.

சுசாகேஸ்: நான் மறைக்க விரும்பவில்லை. பெரும்பாலும் நஜிப் ரசாக்கும் ரோஸ்மாவும் இப்படித் தான் பதில் அளிப்பார்கள்: ஆகவே என்ன? இன்னும் எங்கள் செல்வாக்கு உயர்வாகத் தான் உள்ளது. நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையை நாங்கள் பெற முடியும் என்று நினைக்கிறோம். நீங்கள் அதற்கு சவால் விட விரும்புகின்றீர்களா?

கோபம் : தனிப்பட்ட துப்பறிவாளர் பாலா விவகாரத்தின் மீது ஏன் இவ்வலவு சர்ச்சை? எனக்கு ஒன்றுமே புரியவில்லை. பாலா நாட்டில் இருந்ததே தமக்குத் தெரியாது என்று தேசிய போலீஸ் படைத் தலைவர் கூறுவதை என்னால் நம்ப முடியவில்லை. அதுவும் போலீஸ்காரர்கள் அவரைத் தேடிக் கொண்டிருக்கும் வேளையில்.

நஜிப்புக்கு உணர்வு ஏதும் இருந்தால் அவர், முழுமையான சுயேச்சை விசாரணையைத் தொடங்கி  பாலா குறிப்பிட்டுள்ள நபர்கள் அனைவரையும் இழுத்து, அந்த விஷயத்தை தீவிரமாக ஆய்வு செய்து உண்மையை வெளிக் கொணருமாறு போலீசாருக்கு உத்தரவிட வேண்டும்.

மசீச வில் நிகழும் தெருச் சண்டை பற்றி அக்கறை எடுத்துக் கொள்ளும் நஜிப் பாலா விஷயத்தில் உண்மையைக் கண்டு பிடிக்க ஏன் ஆர்வம் காட்டவில்லை? நஜீப், பாலா உங்களுக்கும் சட்ட அமலாக்க அமைப்புக்களுக்கும் சவால் விடுத்துள்ளார். அதனை நீங்கள் ஏற்றுக் கொள்ளப் போகின்றீர்கள?

ராக்கி: போலீசார், எம்ஏசிசி போன்றவை சட்டத்திலோ எது சரி எது தவறு என்பதிலோ அக்கறை காட்டவில்லை. தங்களது அரசியல் எஜமானர்களைத் தொடர்ந்து பதவியில் இருக்கும்படி செய்து தங்களை செல்வந்தர்களாக்கிக் கொள்வதற்கு சகாயங்களை நாடுவதில் தான் அவை நாட்டம் கொண்டுள்ளன.

பார்வையாளர்: நான் பாலாவை நம்புகிறேன். ஏனெனில் அவரது கதை பொருத்தமாகத் தோன்றுகிறது. அவர் மௌனமாக இருந்து கொண்டு பணத்தைக் கறந்து கொண்டிருப்பது அவருக்கு ஆதாயமாக இருந்திருக்கும். உண்மையை வெளிப்படுத்தியதின் மூலம் அவர் தம்மையும் தமது குடும்பத்தாரையும் பெரும் அபாயத்திற்கு இலக்காக்கியுள்ளார். அவர் துணிச்சலானவர். உண்மையை அறிந்திருந்தும் தங்களது வருமான வழி அடைபட்டுப் போகும் என்று அஞ்சி மௌனமாக இருப்பவர்களுக்கு அவர் ஒரு துண்டுகோலாக இருக்க வேண்டும் என்று நான் நம்புகிறேன்.

சர்வாதிகாரி முகாபே நடத்தும் கொடுங்கோல் ஆட்சிக்கு பரவலாக எதிர்ப்பு இருந்த போதிலும் அதிகாரத்தில் அவர் இன்னும் எப்படி ஒட்டிக் கொண்டிருக்கிறார் என்பதை பாருங்கள். அவருக்குப் போலீஸும் இராணுவமும் ஆதரவாக உள்ளது. தங்களது வருமானம் பாதிக்கப்படாமல் இருக்க அவை முகாபேயைப் பாதுகாக்கின்றன. சிம்பாப்வே போன்று மலேசியாவும் மாறாது என நம்புவோம்.

அஸ்மில் தாய்ப்: பாலா வழங்கிய ஐந்து பகுதி பேட்டி உண்மையானதாக எனக்குத் தெரிகிறது. அதில் எந்த சந்தேகமும் இல்லை. அவரை பெருமதிப்புக்குரிய வழக்குரைஞர்கள் குறுக்கு விசாரணை செய்துள்ளனர். இப்போது அந்த வழக்கு மீண்டும் திறக்கப்பட்டு நீதி மன்றத்தில் விசாரிக்கப்பட வேண்டும். சாட்சி என்ற முறையில் பாலாவுக்குப் பாதுகாப்பு கொடுக்கப்பட வேண்டும். அந்தப் பேட்டியில் குறிப்பிடப்பட்டவர்கள் வெளியில் வந்து ஏதாவது சொல்ல வேண்டும்.

சார்லஸ் சியா: தனிப்பட்ட துப்பறிவாளர் பாலா தமது பேட்டியில் கூறியிருப்பது உண்மையோ அல்லது பொய்யோ, நிச்சயமாக அச்சத்தை ஏற்படுத்துகிறது. கடுமையானது. அது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் பிரதமரும் அவரது துணைவியாரும் அடுத்து என்ன செய்யப் போகிறார்கள் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம். பொது மக்களுடன் உலகமும் பார்த்துக் கொண்டிருக்கிரது.

 
You can leave a response, or trackback from your own site.

One Response to “பாலா பேட்டி: “ஏன் இந்த ஆழ்ந்த மௌனம்?””

  1. abishegam says:

    நம் நாட்டில் கோமாளிகள் மலிந்து விட்டார்கள்! அவர்கள் ஆடும் ஆட்டமென்ன! மரண்பாடான போக்கென்ன! இந்தப் பாவ ஜென்மங்கள் இருந்தென்ன, இறந்தென்ன?
    அபி

Leave a Reply