சுவா : ஒங்கிற்கு அவரே தான் பெரிய எதிரி 14 Sep | செய்தி.

ம சீ ச தலைவர் ஒங் தீ கியாட் பல முனைகளில் போராடலாம். ஆனால் தலைவருக்கு அவரைத் தவிர வேறு யாரும் இல்லை என்று அவருடைய முன்னாள் துணைத் தலைவரான டாக்டர் சுவா சொய் லெக் கூறியிருக்கிறார்.

“மற்ற அரசியல் கட்சிகளைப் போன்று ம சீ ச வும் பல போராட்டங்களைக் கடந்துள்ளது. உங்களுக்கு நம்பிக்கை வேண்டும். மக்கள் உங்களை ஆதரிக்கிறார்கள் என நீங்கள் நம்பவேண்டும். நீங்கள் சரியானதை செய்வதாக நம்பவும் வேண்டும்.” 

“நீங்கள் சொந்த நிழலுடன் சண்டையிடக் கூடாது. ஒங் தீ கியாட்டின் பெரிய எதிரி அவரே தான். என்னை மேற்கோள் காட்டலாம்.  அவர் தன்னையே நம்பமாட்டார். அவர் தம்மைச் சுற்றியுள்ள மனிதர்களுக்கு பணிந்து விடுவார்,” என்றும் சுவா குறிப்பிட்டார்.

அவர் கடந்த வெள்ளிக் கிழமை மலேசியாகினிக்குப் பேட்டி அளித்தார். சுவாவை மீண்டும் சேர்த்துக் கொள்வதற்கு உதவியாக அவசரப் பொதுக் கூட்டத்தை கூட்டுமாறு கேட்டுக் கொள்ளும் கடிதம் ஒன்றை அன்றைய தினம் அவரது ஆதரவாளர்கள் ம சீ ச தலைமையகத்தில் சமர்பித்தனர்.

ஒங்கை சுற்றிலும் “ஆமாம் மனிதர்கள்” நிறைந்திருப்பதாக சுவா தெரிவித்தார். அவர்கள் அனைவரும் நியமிக்கப்பட்ட இளம் தலைவர்கள். அவர்கள் கட்சித் தலைவருக்கு உருப்படியான யோசனைகளை கூறுவது கிடையாது.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கட்சித் தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொண்ட பின்னர் தாம் சாதித்ததாக காட்டுவதற்கு அவரிடம் ஒன்றும் இல்லை என்றும் அவர் வலியுறுத்தினார்.

ம சீ ச கப்பலை சரியான பாதையில் செலுத்தத் தவறிய கேப்டன், ஒங் என்றும் சுவா வருணித்தார். கடந்த எட்டு இடைத் தேர்தல்களிலும் அது தெளிவாகத் தெரிந்தது. சீன வாக்காளர்கள் தொடர்ந்து பக்காத்தான் ராக்யாட்டுக்கு ஆதரவு அளித்தனர்.

“அவர் சாதித்தது ஒன்றே ஒன்று தான். அதாவது என்ன நீக்கியது,” என்றும் சுவா குறிப்பிட்டார்.

‘பேச்சு வலிமையால் உருவாக்கப்பட்ட பணி’

செக்ஸ் டிவிடி ஊழலில் சம்பந்தப்பட்டதின் வழி கட்சியின் தோற்றத்திற்கு சுவா களங்கத்தை ஏற்படுத்தி விட்டதாக கண்டு பிடித்து ம சீ ச ஒழுங்கு நடவடிக்கை வாரியம் வழங்கிய பரிந்துரைக்கு இணங்க அவரைக் கட்சித் தலைமைத்துவம் கடந்த ஆகஸ்ட் மாதம் 26 ம் தேதி கட்சியிலிருந்து நீக்கியது.

சுவாவை தமது எதிரி என்று கருதிக் கொண்டு அவரி நீக்குவதற்கு ஒங் திட்டமிட்டார் என்று சுவா ஆதரவாளர்கள் குற்றம் சாட்டினர்.

தம்மை நீக்குவதற்கு முன்னதாக ஒங் தமக்கு எதிராக பல குற்றச்சாட்டுக்களை சுமத்தியதாகவும் சுவா குறிப்பிட்டார். அவற்றுள் கட்சித் தலைவரை வீழ்த்துவதற்கு சுவா 100 மில்லியன் ரிங்கிட்டைத் திரட்டியிருக்கிறார் என்ற குற்றச்சாட்டும் அடங்கும்.

அத்துடன் சுவாவுக்கு குண்டர் கும்பல்களுடன் தொடர்பு உள்ளது. புதிய கட்சியைத் தொடங்கவிருக்கிறார் என்றும் ஒங் பழி சுமத்தினார்.

அவர் தியோங்குடன்(கிங் சிங்) என்னை பிணைப்பதற்கு எப்போதும் முயற்சி செய்து வந்தார். எனக்கு தியோங்குடன் எதுவும் கிடையாது. அது தான் எல்லா

குழப்பங்களிலும் பெரியது. நீங்கள் ஒங்கின் அரசியல் வரலாற்றைப் பார்த்தால் எதிரிகளை பேச்சு வன்மையால் ஒடுக்கியதின் மூலம் அவர் வளர்ந்திருப்பது தெரிய வரும்,” என்றார் அவர்.

“போக்குவரத்து அமைச்சருமான ஒங்கை கட்சித் தலைவரை வீழ்த்துவதற்கு 100 மில்லியன் ரிங்கிட் திரட்டுவதற்கு தியோங் சுவாவுக்கு உதவுவதாக ஒங் முகாம் அண்மைய வாரங்களாக வதந்திகளைப் பரப்பி வருகிறது.”

போர்ட் கிளாங் தீர்வையற்ற வாணிகப் பகுதி ஊழல் தொடர்பில் அதனை நிர்மாணிக்கும் கோலா டைமன்சி சென் பெர்ஹாட் மீது போக்குவரத்து அமைச்சர் என்ற முறையில் பல விசாரணைகளை ஒங் தொடக்கியுள்ளார்.

“என்னிடம் 100 மில்லியன் ரிங்கிட் இருந்தால் நான் ஒங்கிடம் கூறுவேன்: தயவு செய்து .. நான் சம்பந்தப்பட விரும்பவில்லை. தலைவர் பதவி 100 மில்லியன் ரிங்கிட் மதிப்புடையது அல்ல’ சரியா? என்று சுவா அந்தக் குற்றச்சாட்டுக் குறித்துக் கருத்துரைத்த போது கூறினார்.

போர்ட் கிளாங் தீர்வையற்ற வாணிகப் பகுதி ஊழல் தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது

“ஒங் தம்மை ஒரு வீரராக காட்டிக் கொள்ள முனைந்துள்ளார். அவ்வாறு செய்யும் போது தாம் அவரது அமைச்சுப் பணிகளைக் கட்சிக்குள் நான் கொண்டு வருவதாக ஒங் என் மீது குற்றம் சாட்டுவதாக” சுவா கூறினார்.

“அவர் தமது அமைச்சுப் பணியை அரசியல் பிரச்னையாக மாற்றி விட்டார். தாம் ஒருவர் மட்டுமே வேலை செய்வதைப் போலவும் மற்றவர்களுக்கு அதில் அக்கறை இல்லை என்ற தோற்றத்தை உருவாக்க அவர் முனைகிறார். அது தனி நபர் ஆராதனைக்கு ஒப்பாகும். அதனால் பெரிய விஷயங்கள் தியாகம் செய்யப்பட்டு விடுகின்றன.”

“பாரிசான் நேசனல், ம சீ ச ஆகியவையே பெரிய விஷயங்கள். அவருக்கு அந்த விஷயங்கள் முக்கியம் அல்ல. அவரிடம் காட்டுவதற்கு அடைவு நிலை ஏதுமில்லை. ஆகவே போர்ட் கிளாங் தீர்வையற்ற வாணிகப் பகுதி ஊழலை அவர் பயன்படுத்த வேண்டியுள்ளது,” என்றும் சுவா தெரிவித்தார்.

அவ்வாறு செய்யும் போது பல ஊழல்களை வெளிப்படுத்தியுள்ளார். அவருக்கும் தியோங்கிற்கும் இடையில் நிலவிய சொகுசான் உறவுகள் வெளிப்பட்டதும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமும் போலீசாரும் அவரை விசாரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

அந்த நிலை, போர்ட் கிளாங் தீர்வையற்ற வாணிகப் பகுதி ஊழல் விவகாரத்தைப் பயன்படுத்தி அரசியல் ஆதாயம் தேடவும் “வெண்மையைக் காட்டிலும் வெண்மையானவர்” என்று தம்மைக் காட்டிக் கொள்ள ஒங் முயற்சி செய்த போதிலும் அவருடைய தோற்றத்திற்கு களங்கத்தை ஏற்படுத்தி விட்டது என்றார் சுவா.

போர்ட் கிளாங் தீர்வையற்ற வாணிகப் பகுதி ஊழல் விவகாரத்தை ஒங் ம சீ ச அரசியலுடன் இணைக்கக் கூடாது. ஏனெனில் அந்த விசாரணை அமைச்சரவை உத்தரவின் பேரில் தொடங்கப்பட்டது.

தியோங்கிற்கும் ஒங்கிற்கும் இடையிலான சொகுசான உறவுகள் வெளிப்பட்டதும் அமைச்சரவை போர்ட் கிளாங் தீர்வையற்ற வாணிகப் பகுதி ஊழலை விசாரிக்க சிறப்பு பணிக்குழுவை அமைத்திருப்பதில் வியப்பு இல்லை என்றும் அவர் சொன்னார்.

“மக்கள் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது (பிரதமர்) நஜிப்பிக்கு(அப்துல் ரசாக்கிற்கு) தெரியும். அந்தப் பணிக் குழு வெற்றி அடையாவிட்டால் அரசாங்கம் வீழ்ச்சி அடையும்,” என சுவா எச்சரித்தார்.

 
You can leave a response, or trackback from your own site.

Leave a Reply