குறையில்லா கார்கள் விநியோகம் – புரோட்டோன் கொள்கை 27 Jun | செய்தி.

proton.jpgவெளிநாட்டுக் கார்களுக்கு நிகராக உள்நாட்டு வாகனங்களின் தரத்தை உயர்த்த “சீரோ டிபெக்ட்” எனும் பிரச்சாரத்தை தேசிய கார் நிறுவனமான புரோட்டோன் தொடங்கிவைத்தது.

ஓட்டுனர்கள் எண்ணெய் விலை அதிகரிப்பை சமாளிக்க அக்டோபர் மாதம் முதல் அனைத்து வித கார்களிலும் இயற்கை எரிவாயு தாங்கி பொருத்தும் திட்டம் உள்ளதாக புரோட்டோன் நிர்வாக அதிகாரி சேட் சைனால் அபிடின் அறிவித்தார்.

மலேசிய மக்களிடையே பிரபலமாக விளங்கும் பல்வகை பயன்பாட்டு வாகனங்களுக்கு அடுத்த மார்ச் மாதம் இத்திட்டம் முதல் கட்டமாக ஆரம்பிக்கப்படும்.

இலாபத்தையும் வெளிநாட்டிற்கு ஏற்றுமதியையும் அதிகரிக்க கார்களின் தரத்தை பாதுகாக்க  தீவிரமாக ஈடுபட வேண்டும் என இரண்டு வருடங்களுக்கு முன் தலைமை பொறுப்பை வகித்த பொறியியலாளர் சைனால், வயது 45, 5,000 தொழிலாளர்களுக்கு கட்டளையிட்டார்.

“நாம் தரம் குறைந்த கார்களை உற்பத்தி செய்தால் பயனீட்டாளர்கள் நம்மிடம் கோபித்துக் கொள்வார்கள். அண்மைய எண்ணெய் விலையேற்றத்தினால் பயனீட்டாளர்கள் தரம் நிறைந்த கார்களையே விரும்புவார்கள். அவர்கள் அதிக எதிர்ப்பார்ப்புகள் கொண்டுள்ளார்கள்”, என கோலாலம்பூர் புரோட்டோன் தொழிற்சாலையில் நடத்திய கூட்டம் ஒன்றில் அவர் இவ்வாறு சொன்னார்.   

“அனைவரும் இணைந்து நேர்மையான முறையில் செயலாற்றினால் நிறுவனத்தின் இலாபத்தை பெருக்க முடியும்”, என அவர் மேலும் கூறினார்.

விநியோகிப்பாளர்களிடமிருந்து தரம் குறைந்த உபரிப்பொருட்கள்

புரோட்டோன் கார்களின் 60 விழுக்காட்டின் குறைபாடுகள் விநியோகிப்பாளர்களிடம் பெறப்படும் தரம் குறைவான உபரிப்பாகங்களே காரணம். மற்ற குறைபாடுகளுக்கு நிறுவனத்தின் தொழிலாளர்கள் காரணம் என சைனால் சொன்னார்.

“இன்று, நாம் நிறுவனத்தின் புதுப்பொழிவிற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். புரோட்டோன் புகழ் பெறச் செய்வோம், தரம், உற்பத்திகள் மற்றும் இலாபத்தை அதிகரிப்போம். உலகலாவிய அளவில் போட்டியிட ஏற்பாடு செய்ய வேண்டும்”, என்றாரவர்.

பயனீட்டாளர்கள் இயற்கை எரிபொருளை மையமாக கொண்டுள்ள வாகனங்களை வாங்குவதற்கு அரசாங்கம் பாதுகாப்பு வழங்கியுள்ளது என்றார் சைனால்.

“அக்டோபர் மாதம் அனைத்து புரோட்டோன் கார்களிலும் இவ்வசதியை காணலாம். எண்ணெய் பயனீட்டை குறைக்க அரசாங்கத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இது ஒரு திட்டமாக அமைந்துள்ளது”, என்றார்.

“நிறுவனத்திற்கு பல்வேறு பயன்பாட்டிற்குறிய வாகனங்களின் மாதிரிகள் தேவைப்படுகிறது. மக்களின் வாழ்க்கை பாங்கு மாறிவிட்டது. விலை கொஞ்சம் அதிகமாக இருக்கும்”, என்றாரவர்.

புரோட்டோன் டிசம்பர் மாதம் வரை ஒன்பது மாதங்களுக்கு ரிம32.92 மில்லியன் மொத்த இழப்பீட்டை பதிவு செய்துள்ளது. ஆனால் இது கடந்த ஆண்டின் ரிம590.448 மில்லியன் இழப்பீட்டைக் காட்டிலும் குறைவு.

 
You can leave a response, or trackback from your own site.

Leave a Reply