தலைப்புச் செய்திகள்: ஜூன் 27 27 Jun | செய்தி.

imagesq.jpgஆங்கில, மலாய் மற்றும் தமிழ் நாளேடுகளில் வெளிவந்துள்ள முக்கிய செய்திகளின் தொகுப்பு

முகப்புச் செய்திகள்

ஆங்கில நாளேடுகள்

நியூ ஸ்ரேய்ட்ஸ் டைம்ஸ் மற்றும் த ஸ்டார்:
நேற்று நாடாளுமன்றத்தில் பிரதமர் அப்துல்லா அகமட் படாவி ஒன்பதாவது மலேசியத் திட்டத்தின் மத்தியத் தவணை மறு ஆய்வை மக்களவையில் தாக்கல் செய்த செய்தியினை வெளியிட்டுள்ளன. மத்திய தவணை மறு ஆய்வில் ரிம30 பில்லியன் அதிகரிக்கப்பட்டுள்ளதாக ஸ்டார் குறிப்பிட்டுள்ளது.

மலாய் நாளிதழ்கள்

உத்துசான் மலேசியா மற்றும் பெரித்தா ஹரியானின் தலைப்புச் செய்திகள் ஒன்பதாவது மலேசியத்  திட்டத்தைக் குறித்து வெளிவந்துள்ளன.

தமிழ் நாளிதழ்கள்

தமிழ் நேசன்: இந்திய சமூகத்திற்கு சிறப்பு உதவி வழங்கப்படும் என்று பிரதமர் அறிவித்திருப்பதை தலைப்பு செய்தியாகக் கொண்டுள்ளது.

மலேசிய நண்பன்: லாபிஸ், தினாங் தோட்டத்தில் மர்ம நோயால் மக்கள் அவதிப்படுவதை முதன்மைச் செய்தியாக வெளியிட்டுள்ளது.

தலையங்கம்

நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்:
பயணிகளிகளை ஏமாற்றி பணம் சம்பாதிக்கும் வாடகைக் கார் ஓட்டுனர்களைக் குறித்து பேசியுள்ளது.

பெரித்தா ஹரியான்:
நாடு பொருளாதாரா நெருக்கடியை எதிர்நோக்கும் இவ்வேளையில் ஒன்பதாவது மலேசியத் திட்ட மூன்றாவது மத்திய தவணை மறு ஆய்வை தாக்கல் செய்திருப்பதாகக் கூறியது. மேலும், முக்கியத் திட்டங்களை மட்டுமே அமலாக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

உத்துசான் மலேசியா:
மக்களின் ஆதரவு இருந்தால் மட்டுமே நாட்டின் வளர்ச்சித் திட்டங்களை தொடர வேண்டும் என கேட்டுக் கொண்டது.

 
You can leave a response, or trackback from your own site.

Leave a Reply