அம்னோ போட்டியிடுமா? தலையை ஆட்டினார் முகைதின்
பெனாந்தி இடைத்தேர்தலில் அம்னோ போட்டியிடுமா என்பது ஏதோ ஒரு பெரிய இரகசியம் போல் தோன்றுகிறது. துணைப் பிரதமர் முகைதின் எதுவும் கூற மறுத்து விட்டார்.
இன்றைய அம்னோ அரசியல் குழு கூட்டத்தில் இடைத்தேர்தல் பற்றிய விவாதம்தான் முதலிடம் வகிக்கும் என்று கூறப்பட்டது. ஆனால், அக்குழு இது பற்றி விவாதிக்கவில்லை என்றார் முகைதின்.
“அவ்விவகாரம் குறித்து நாங்கள் விவாதிக்கவில்லை, எந்த முடிவும் எடுக்கப்படவில்லை”, என்றாரவர்.
என்னதான் விவாதித்தீர் என்று கேட்டதற்கு, “உங்களிடம் ஏன் சொல்ல வேண்டும்?”, என்று பதிலளித்தார்.
“போட்டியிடுவீரா, இல்லையா?”, என்று செய்தியாளர்கள் தொடர்ந்து கேட்டபோது, அவர் வெறுமனே தலையை ஆட்டினார். அதன் அர்த்தம் என்ன என்று அவர் கூறவில்லை.







May 5th, 2009 at 5:30 am
Umno sarri..barisanum sarri intha idai tertalil podiyidal manaithaan kouvaveh vendum..!! Ithu muyiddin tehriyatha ehnna..!! Pahyithil pesamudiyamal ularukirar naam great thalaivar..!! ” Thirudateh papah thirudateh” padalthan ehvarkaluku pohrunthum..!!