மலேசியாவில் இன்று வெளியாகியுள்ள ஆங்கில, மலாய் மற்றும் தமிழ் நாளிதழ்களின் முக்கிய செய்திகளும் தலையங்கமும்.
ஆங்கில நாளிதழ்கள்
த ஸ்டார்:சித்தி ஃபத்திமா டான் அப்துல்லா இஸ்லாத்தை துறந்து பெளத்தமதத்தை தழுவுவது தொடர்பான செய்தியை முகப்புச் செய்தியாக வெளியிட்டுள்ளது.
நியு ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்: பேராக் சுல்தான் பற்றி அரச நிந்தனைக்குரிய கருத்து தெரிவித்த ஜசெக தலைவர் கர்ப்பால் சிங்கிற்கு எதிராக போலிஸ் புகார் செய்யும்படி பிரதமர் அப்துல்லா படாவி பணித்திருப்பது தொடர்பான செய்தியை முதன்மைச் செய்தியாக வெளியிட்டிருக்கிறது.
மலாய் நாளிதழ்கள்
பெரித்தா ஹரியான்: தாய்லாந்தியிருந்து இறக்குமதி செய்யப்படும் அரிசியில் 500,000 மெட்ரிக் டன் அதிகரிப்பது தொடர்பான செய்தி முதல் பக்கத்தில் வெளிவந்துள்ளது..
உத்துசான் மலேசியா: பேராக் சுல்தான் குறித்து கர்ப்பால் சிங்கின் கேள்வியால் மலேசிய மக்கள் ஆத்திரமடைந்திருப்பதாக பிரதமர் நேற்றைய அறிக்கையில் தெரிவித்ததை முதல்பக்கச் செய்தியாக வெளியிட்டுள்ளது.
தமிழ் நாளிதழ்கள்
மலேசிய நண்பன், மக்கள் ஓசை, தமிழ் நேசன் ஆகிய மூன்று தமிழ் நாளிதழ்களும் கோலாலம்பூர் உணவகம் ஒன்றில் இந்திய தொழிலாளர்கள் அடிமைகள் போன்று நடத்தப்பட்டுள்ளதாக கூறியிருக்கும் செய்தியை வெளியிட்டிருக்கின்றன.
தலையங்கம்
நாட்டின் நிதிநிலைமையில் பிரச்னை ஏற்படாதிருக்க உதவித் தொகை அளிப்பதை திருத்தி அமைக்க வேண்டும் என்று பெரித்தா ஹரியான் கருத்து தெரிவித்துள்ளது.
பர்மாவில் நர்கிஸ் சூறாவளி ஏற்பட்ட பின்னர் நிவாரண உதவிக்குழுக்கள் நாட்டிற்குள் செய்வதற்கான அனுமதியை இராணுவ ஆட்சியர் தாமதப்படுத்துவதை நியு ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கண்டித்துள்ளது.
மக்கள் ஓசை : நாட்டில் கைக்குட்டை தயாரிப்பு தொழிலைஅனைவரும் ஊக்கப்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளது.
நர்கிஸ் சூறாவளியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சர்வதேச உதவியை ஏற்கும்படி பர்மா ஆட்சியரை தமிழ் நேசன் கேட்டுக்கொண்டுள்ளது.
பொதுப்பணி அமைச்சர் மாட் சின் முகமட் அறிவித்துள்ளபடி சாலைக் கட்டணங்கள் மறு ஆய்வு செய்யப்பட வேண்டும் என மலேசிய நண்பன் விரும்புகிறது.
