செராஸ் சாலை மறியலில் கலவரம் 9 May | செய்தி.

cheras.jpgவழக்கமாக அமைதியாய் இருக்கும் பண்டார் மக்கோத்தா செராஸ் (பிஎம்சி) நேற்றிரவு அல்லோலகல்லோலப்பட்டது. சுமார் 500 குடியிருப்பாளர்மீது போலிசார் பீரங்கி வண்டியிலிருந்து தண்ணீரைப் பீய்ச்சி அடித்ததுடன்  கண்ணீர் புகைக்குண்டுகளையும் வெடித்தனர்.

அப்போது மூண்ட குழப்பத்தில் செகாம்புட் நாடாளுமன்ற உறுப்பினர் லிம் லிப் எங்கும் பிம்சி திறந்த சாலைக் குழுத் தலைவர் தான் பூன் ஹுவாவும் சாதாரண உடை தரித்திருந்த போலிசாரால் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

காஜாங்-செராஸ் நெடுஞ்சாலையிலிருந்து பண்டார் துன் உசேன் ஒன்னுக்குப் பிரிந்து செல்லும் சாலையில் குடியிருப்பாளர்களுக்கு ஆதரவு தெரிவிப்பதற்கு லிம் இரவு சுமார்  மணிக்கு வந்து சேர்ந்தபோது அச்சம்பவம் நிகழ்ந்தது.

பிஎம்சி குடியிருப்பாளர்கள், சாலைக்கட்டண சாவடியைroad3.jpgத் தாண்டிroad21.jpgச் செல்வதைத் தடுப்பதற்கு கிரேண்ட் சாகா சென். பெர்ஹாட் மூன்றாவது முறையாக காங்கிரிட் தடுப்பு ஒன்றை சாலையில் அமைக்க முயன்றதுதான் இந்த அமளிக்கு மூலகாரணமாகும்.

இந்தச் சாலைத் தடுப்பின் விளைவாக சாலையைப் பயன்படுத்துவோர் கூடுதலாக ஆறு கிலோமீட்டர் தூரம் பயணம் செய்ய வேண்டியிருப்பதுடன் ஒவ்வொரு முறையும் கிரேண்ட் சாகாவுக்கு 90 சென் சாலைக்கட்டணமும் செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.

லிம் அங்கு சென்றடைந்தபோது காங்கிரீட் தடுப்பை அமைக்கும் பணியில் ஈடுப்பட்டிருந்த கிரேண்ட் சாகா நிறுவன ஊழியர்களைச் சுற்றி குடியிருப்பாளர்கள் சூழ்ந்து கொண்டிருந்தனர்.
 
கிரேண்ட் சாகா ஊழியர்களையும் போலிசாரையும் அணுகிய லிம், அங்கு கட்டுமான வேலைகளுக்கு பொறுப்பானவர் யார் என்பதை அறிந்து கொள்ள விரும்பினார். அதற்கு சரியான பதில் கிடைக்காததால், கான்கிரீட் தடுப்பில் எஃகு கம்பிகளைப் பொருத்துவதற்கு ஊழியர்கள் பயன்படுத்திய பத்திரி வைப்பு கருவிகளின் மின்கம்பிகளை அகற்ற அவர் முடிவு செய்தார்.

பத்திரிவைப்புக் கருவிகள் செயல்படாத நிலையில் கிரேண்ட் சாகா நிறுவன ஊழியர்கள் பின்வாங்க, குடியிருப்பாளர்கள் பாய்ந்து சென்று அரைகுறையாக கட்டப்பட்டிருந்த தடுப்பை வெறும் கைகளால் நிமிடத்தில் உடைத்தெறிந்தனர்.

இச்செய்கையால் அகமகிழ்ந்துபோன குடியிருப்பாளர் கூட்டம் லிம்மைத் தூக்கிப் போட்டு கொண்டாடியது. ஆனால் கூட்டத்தைக் கலைந்து செல்லும்படி கலகத் தடுப்புப் போலிசார் எச்சரிக்கை விடுத்ததும் நிலைமையில் எதிர்பாராத திருப்பம் ஏற்பட்டது.

திடீரென்று சுமார் 50 போலிசார் கூட்டத்தினரை நோக்கி நகர்வதற்கு தயாராக இருந்தனர். தண்ணீர் பீரங்கி வண்டி ஒன்று கூட்டத்தினரை நோக்கி நகரவே அதைத் தடுக்கும் நோக்கில் லிம் அந்த வண்டிக்கு குறுக்கே போய் நின்றார்.

அப்போது சாதாரண உடை தரித்திருந்த பல போலிஸ் அதிகாரிகள் வலுக்கட்டாயமாக லிம்மை அந்த இடத்தை விட்டு அப்புறப்படுத்த முயன்றனர். அதன் விளைவாக அங்கே கைகலப்பு மூண்டது.

“என்னைத் தனியே இழுத்து சென்று அடித்து உதைத்தனர்”,என்று சம்பவம் நடந்து முடிந்த இரண்டு மணி நேரத்துக்குப் பின் செய்தியாளர்களிடம் அவர் கூறினார்.

அவரது சட்டை கிழிந்திருந்தது.

அவர் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் என்று கூறிய பின்னர்தான் அடியும் உதையும் நின்றதாக அங்கு வந்திருந்த சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் இயான் யோங் ஹியான் வா நிருபர்களிடம் தெரிவித்தார்.

ஒரு வழக்குரைஞருமான லிம், பிஎம்சி சாலைக்குழுவின் சட்ட ஆலோசகர் என்ற முறையில் அக்குடியிருப்பாளர்களிடையே மிகவும் பிரபலமானவர்.

லிம் தாக்கப்படுவதைக் கண்டு அவருக்கு உதவி செய்ய சாலைக்குழுத் தலைவர் தான் முயன்றபோது அவரும் தாக்கப்பட்டார். பின்னர் கைது செய்யப்பட்டார். சாதாரண உடை தரித்த போலிஸ் அதிகாரி ஒருவர், நிருபர்களும் புகைப்படக்காரர்களும் பார்த்துக் கொண்டிருந்தபோதே தான்னின் வயிற்றில் ஒருமுறை குத்தினார் என சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறினர்.
 
தான் போலிஸ் ரோந்து காரில் கொண்டு செல்லப்பட்டார். குடியிருப்பாளர் ஒருவர் லிம்மையும் இயான் யோங்கையும் அருகில் இருந்த ஒரு மருந்தகத்துக்கு அழைத்துச் சென்றார்.

இதனிடையே போலிசார் ஒருமுறை பீரங்கி வண்டியிலிருந்து தண்ணீரைப் பீய்ச்சி அடித்தனர். மூன்று சுற்றுகள் கண்ணீர் புகைக் குண்டுகளை வெடித்தனர்.

நேற்றிரவு காஜாங்  வட்டார போலிஸ் துணைத் தலைவர் சுப்பிரெண்டெண்ட் தோகா அப்துல்லாவை அணுகி விசாரித்தபோது போலிஸ் அடித்தது பற்றித் தமக்குத் தெரியாது என்றார்.

போலிஸ் வேலைகளுக்கு இடையூறு செய்ததால் கூட்டத்தை போலிஸ் கலைக்க வேண்டியதாயிற்று என்றும் அவர் கூறினார்.

நள்ளிரவுக்குப் பின்னர் காஜாங் மாவட்ட போலிஸ் தலைவரைத் தொடர்பு கொண்டு பேசியபோது, தடுத்து வைக்கப்பட்டவர்கள்மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டு குறித்து இன்னும் முடிவு செய்யப்பட வில்லை என்றார்.

தான் இன்று காலை ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.

 
You can leave a response, or trackback from your own site.

Leave a Reply