குறைந்தபட்ச சம்பளம்: நாடாளுமன்றத்தில் தொழிற்சங்கத் தலைவர்கள் 7 May | செய்தி.

7b04d96fb969de5a1ae291a368dc481f.jpgமலேசியத் தொழிற்சங்கக் காங்கரஸின் தலைவர்கள் முன்பு அறிவித்திருந்தவாறு இன்று காலை 10.00 மணிக்கு நாடாளுமன்றத்தின் முன் கூடினர்.

குறைந்தபட்ச சம்பளம் ரிம900 மாக நிருணயிக்கப்பட வேண்டும் என்ற அவர்களின் கோரிக்கையை வலியுறுத்தி மீண்டும் ஒரு மனுவை பிரதமர் அப்துல்லா படாவியிடம்  வழங்குவதற்காக மலேசியத்  தொழிற்சங்கக்  காங்கரஸ் தலைவர்கள் உட்பட  300க்கு  மேற்பட்ட  தொழிற்சங்கத் தலைவர்கள் இன்று நாடாளுமன்றத்தின்முன் கூடினர்.

இன்று பிரதமரிடம் சமர்ப்பிக்கத் தயாரித்திருந்த மனுவில் கூறப்பட்டிருந்தவை:

  •  மலேசியத் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச சம்பளம் ரிம900 ஆக நிருணயத்தல்.
  • மலேசியத் தொழிற்சங்கக் காங்கரஸின் குறைந்தபட்ச சம்பளக் கோரிக்கை பற்றி பிரதமர் கூறியிருந்த அர்த்தமற்ற கருத்துகளுக்கு காங்கரஸ் தலைவர்களின் பதில்.
  • தொழிலாளர்களின் நலனைப் பாதிக்கும் வகையில் தொழில் நல்லுறவுச் சட்டத்திற்கு அரசாங்கம் இயற்றியுள்ள சட்டத் திருத்தங்கள் குறித்து காங்கரஸின் கருத்துகள்.

நாடாளுமன்றத்தின் முன் கூடியிருந்த 300க்கு மேற்பட்ட தொழிற்சங்கத் தலைவர்களில் 20 பேர் மட்டும் நாடாளுமன்ற வளாகத்தினுல் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

2007 ஆம் ஆண்டு மே தினச் செய்தியில் மலேசியத் தொழிலாளர்களை “நாட்டின் சொத்து” என்று வர்ணித்திருந்த பிரதமர் அப்துல்லா படாவி இன்று அவரைக் காண வந்திருந்த தொழிற்சங்கத் தலைவர்களைச் சந்திக்க நாடாளுமன்றத்தில் இல்லை. பிரதமர் துபாய்க்குச் சென்று விட்டார்.

வழக்கம் போல், பிரதமர்துறை அமைச்சர் நஸ்ரி தொழிற்சங்கத் தலைவர்களிடமிருந்து மகஜரை பிரதமர் சார்பில் பெற்றுக் கொண்டார். வழக்கம் போல், நஸ்ரி தொழிலாளர்களின் கோரிக்கையில் அவருக்கு இருக்கும் அக்கறையைத் தெரிவித்துக் கொண்டார். பிரதமரிடம் நிச்சயமாக மகஜரைச் சேர்த்து விடுவதாக நஸ்ரி கூறியதாக மலேசியத் தொழிற்சங்கக் காங்கரஸின் தலைமைச் செயலாளர் ஜி. இராஜ சேகரன் மலேசியாஇன்றுவிடம் கூறினார்.

நாடாளுமன்றத்தின்முன் கூடியிருந்த தொழிற்சங்கத் தலைவர்களை இருபதிற்கும் மேற்பட்ட மாற்றரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்தித்தினர். அவர்களில் டாக்டர் வான் அஸிசா மற்றும் சார்ல்ஸ் சந்தியாகு ஆகியோரும் அடங்குவர்.myt7hcavx5d2sca07t02oca4e8p7kcaottz9lcac5ia22cac19x4pcadz1fw8caurysrxcagya5whcaswihd6cagi33czca1bp0jhca5hjb7xca1zvyttca5wzqizcaq2zn2gca0ov4bvca0z330a.jpg

நாடாளுமன்றத்தின்முன் ஏராளமான போலிஸ்காரர்கள் திரண்டிருந்தனர். ஆனால், அசம்பாவிதங்கள் ஏதும் நடக்கவில்லை என்று இராஜ சேகரன் கூறினார்.9e6e2a6f7a8d100096ce67c271257642.jpg

குறைந்தபட்ச சம்பள கோரிக்கை மனுவை அமைச்சர் நஸ்ரியிடம் கொடுத்தபின் மலேசியத் தொழிற்சங்கத் தலைவர்கள் சுமார் 12.30 மணி அளவில் நாடாளுமன்றத்தை விட்டு புறப்பட்டனர்.

 
You can leave a response, or trackback from your own site.

Leave a Reply