இன்றைய ஆங்கில, மலாய், தமிழ், சீன நாளிதழ்களின் முக்கிய செய்திகளும் தலையங்கமும்.
ஆங்கில நாளிதழ்கள்
வலைப்பதிவர் ராஜா பெட்ரா கமருடின் மீதும் சைட் அக்பர் அலி மீதும் அரச நிந்தனை குற்றம் நேற்று சுமத்தப்பட்டமை தொடர்பான செய்தியை நியு ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சும் சன்னும் முகப்புச் செய்திகளாக வெளியிட்டிருக்கிறன.
ஸ்டார்: நர்கிஸ் சூறாவளி தாக்கியதில் பர்மாவில் ஏறக்குறைய 22,000 பேர் பலியானதுடன் 41,000 பேர் காணாமல் போயிருப்பது தொடர்பான செய்தியை முதன்மைச் செய்தியாக வெளியிட்டுள்ளது.
மலாய் நாளிதழ்கள்
உத்துசான் மலேசியா:மாநில இஸ்லாமியதுறை இயக்குனர் தொடர்பாக பேரா சுல்தான் மேற்கொண்ட நடவடிக்கையைக் குறைகூறி ஜசெக தலைவர் கர்ப்பால் சிங்குக்கு அம்னோ தலைவர்கள் கண்டனம் தெரிவித்தது தொடர்பான செய்தியை வெளியிட்டிருக்கிறது.
பெரித்தா ஹரியான்: ராஜா பெட்ரா மீதான அரச நிந்தனை குற்றம் சுமத்தப்பட்டதும் சிலாங்கூர் அரசாங்கத்தின் தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாததை பொதுமக்கள் எண்ணிப்பார்க்க வேண்டும் என நஜீப் கேட்டுக்கொண்டிருப்பதும் முதன்மைச் செய்தியாக வெளிவந்துள்ளது.
தமிழ் நாளிதழ்கள்
தமிழ் நேசன்: மஇகா பலமாக இருப்பதாகவும் புதிய உறுப்பினர்களை தேர்வு செய்யவேண்டிய இக்கட்டான நிலையில் இல்லை எனவும் ம இ காவின் தகவல் பிரிவுத்தலைவர் எம். சரவணன் கூறியிருப்பது தொடர்பான செய்தியை முகப்புச் செய்தியாக வெளியிட்டிருக்கிறது.
மலேசிய நண்பன்: 28 தமிழ்ப் பள்ளிகளின் அவல நிலையைத்தீர்ப்பதற்கு பினாங்கு பக்காத்தான் ராக்யாட் சிறப்புக் குழு அமைத்திருக்கும் செய்தியை முதன்மைச் செய்தியாக வெளியிட்டிருக்கிறது.
மக்கள் ஓசை: நேற்று ராஜா பெட்ரா மீதான அரச நிந்தனை குற்றம் சுமத்தப்பட்டமை முகப்புச் செய்தியாக வெளியிட்டிருக்கிறது.
தலையங்கம்
நியு ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்: மலேசிய இளைஞர்களுக்கான தேசிய சேவை அவர்களை உறுதி படைத்தவர்களாக மாற்ற உதவுகிறது. அதை ஒரு இராணுவ பயிற்சி என்பதை விட கல்வி ரீதியிலான பயிற்சி எனலாம் என்று கருத்து கூறியுள்ளது.
பெரித்தா ஹரியான்: வெளிநாடு செல்லும் பெண்கள் அனுமதிக் கடிதங்களை பெற்றிருக்க வேண்டும் என வெளியுறவு அமைச்சர் ரய்ஸ் யாதிம் கூறியிருப்பது வெளிநாடு செல்லும் மக்கள் உடனெடுத்துச் செல்லும் பணம் குறித்து அறிவிக்க வேண்டும் என்ற பேங்க் நெகராவின் நிபந்தனைக்கு ஒப்பானது.
சன்: மத்திய மாநில அரசாங்கங்களுக்கிடையில் ஒத்துழைப்பு இல்லாதது குறித்து தலையங்கம் வரைந்துள்ளது. இந்த ஒத்துழைப்புக் குறைவினால் புதிய அரசுகளை தேர்ந்தெடுத்த மக்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதை எழுதியுள்ளது.
தமிழ் நேசன்: அனைத்துலக கடத்தல் நிறுவனங்கள் போதைப்பொருள் கடத்தலுக்கு மலேசிய பெண்களை அதிகமதிகமாக பயன்படுத்துவது குறித்து தலையங்கம் வரைந்துள்ளது.
மலேசிய நண்பன்: தமிழ்ப்பள்ளிகளை பாதிக்கும் நிலப்பிரச்னைகளுக்கு தீர்வுகாணப்பட வேண்டும் என்பதை தலையங்கத்தில் குறிப்பிட்டுள்ளது.
