பாராளுமன்றத்தில் விலைவாசி விவாதம் 6 May | செய்தி.

parliament1.jpgஅரிசி விலைவாசி உயர்வு தொடர்பாக மாற்றரசுக் கட்சிகள் கொண்டுவந்த பிரேரணை மீதான விவாதம் இன்று பிற்பகல் நாடாளுமன்றத்தில் நடைபெறும்.

சலாயுதின் ஆயுப் (பாஸ்- குபாங் கிரியான்) முன்வைத்த  அப்பிரேரணை நாடாளுமன்றத்தால் இன்று காலையில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. பிரேரணை பிற்பகல் 4.30 மணிக்கு  விவாதிக்கப்படும்.

“27 மில்லியன் மலேசிய மக்களின் அடிப்படை உணவுப்பொருளான   அரிசியின்  விலை  தொடர்ந்து உயர்ந்து வருவது பற்றி விவாதிக்கப்படும். ஜனவரி மாதம் ரிம 20 ஆக  இருந்த 10 கிலோ அரிசியின் விலை இந்த வாரம் ரிம 29.39 க்கு உயர்வடைந்துள்ளது.

சிங்கப்பூர், தாய்லாந்து, இந்தோனேசியா போன்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் மலேசியாவில் அரிசிவிலை
 ரிம 3.00 குறைவாக இருக்கிறது” என உள்நாட்டு வர்த்தக மற்றும் பயனீட்டாளர் விவகார அமைச்சர் ஷாகிர் அப்துல் சமாட் நேற்றுக் கூறினார்.

 
You can leave a response, or trackback from your own site.

Leave a Reply