Archive for August, 2010
தியோ “அழுக்குப் படிந்தவர்” எனக் கூறிய ஹிஷாமைச் சாடுகிறார் தெரசா கோக் 31 Aug | செய்தி.
சிபுத்தே நாடாளுமன்ற உறுப்பினரும் டிஎபி பிரச்சாரக் குழுச் செயலாளருமான தெரசா கோக், டிஎபி நாடாளுமன்ற உறுப்பினர் தியோ நீ சிங்கை “அழுக்குப் படிந்தவர்” எனவும் அவரது சூராவ் வருகை முஸ்லிம் சமூகத்துக்குப் “பேரழிவு” என்றும் வருணித்துள்ள உள்துறை அமைச்சர் ஹிஷாமுடின்...
லிம் குவான் எங் மீது அம்னோ இன்னொரு தாக்குதலை தொடுத்துள்ளது 31 Aug | செய்தி.
முஸ்லிம் சமூகமும் பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங்கும் சம்பந்தப்பட்ட இன்னொரு குற்றச்சாட்டு இப்போது தொடுக்கப்பட்டுள்ளது. அது பாஸ் கட்சிக்கு ஆத்திரத்தை மூட்டியுள்ளது.
லங்காட் 2 தேக்க நிலை தீர்ந்து விட்டதாக கூறுவதை சிலாங்கூர் அரசாங்கம் மறுக்கிறது 31 Aug | செய்தி.
லங்காட் 2 நீர் சுத்திகரிப்பு நிலையம் தொடர்பாக கூட்டரசு அரசாங்கத்துடன் நிலவுகிற தேக்க நிலை தீர்க்கப்பட்டு விட்டதாகக் கூறப்படுவதை சிலாங்கூர் அரசாங்கம் மறுத்துள்ளது.
அன்றைய பாஸ்தான் இன்றைய அம்னோ 31 Aug | செய்தி.
”முன்பு வேண்டுமானால் பாஸ் இனவாதியாக இருந்திருக்கலாம். ஆனால் இப்போது அம்னோவே இனவாதியாகத் திகழ்கின்ற உண்மையை யாராவது மறுக்க முடியுமா? பாஸ் பக்காத்தானில் ஒர் உறுப்பினராக இணைந்த பின்னர் இனவாதப் போக்கை குறைத்துக் கொண்டு வருகிறது. ஆனால் அம்னோ மோசமாகி விட்டது.”
“இது நமது தாய்நாடு, தயவு செய்து ஞாபகத்தில் கொள்ளுங்கள்”, பிரதமர் நஜிப் 31 Aug | செய்தி.
இன்று சுதந்திர தினம். அந்நிய ஆட்சியிலிருந்து நமது நாடு விடுதலை அடைந்த நாள். இதனைவிடச் சிறந்த நாள் ஒரு மலேசியனின் வாழ்க்கையில் இருக்க முடியாது. இந்நன்னாளில் பிரதமர் கூறுகிறார், “இது நமது தாய்நாடு, தயவு செய்து ஞாபகத்தில் கொள்ளுங்கள்.”
பிரதமர்: இனவாதம் நம்மை அழிக்க அனுமதிக்காதீர்கள் 30 Aug | செய்தி.
பல்வகைத்தன்மை, மிதவாதம் ஆகியவற்றை அடித்தளமாகக் கொண்ட மலேசிய வாழ்க்கை முறை, இன சமய விவகாரங்கள் வழி சித்தரிக்கப்படும் தீவிரப் போக்கினால் சிதைவதற்கு, சமுதாயம் அனுமதிக்கக்கூடாதென பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கூறியுள்ளார்.
தியோ: மேலும் பல சூராவ்களுக்கு வருகை புரியும்படி நிக் அசிஸ் எனக்கு ஊக்கமூட்டுகிறார் 30 Aug | செய்தி.
கடந்த வாரம் சூரா ஒன்றுக்கு தாம் மேற்கொண்ட வருகை குறித்து, அம்னோவும் சிலாங்கூர் சமய மன்றமும் கடுமையாகச் சாடியுள்ளதை புறந்தள்ளியுள்ள செர்டாங் நாடாளுமன்ற உறுப்பினர் தியோ நீ சிங், முஸ்லீம் தொழுகை இல்லங்களுக்கு வருகை புரியும்படி பாஸ் ஆன்மீகத் தலைவர்...
‘மலேசியாகினி’ அச்சுப் பதிப்பை உள்துறை அமைச்சு நிராகரித்தது 30 Aug | செய்தி.
செய்தி இணையத் தளமான மலேசியாகினி தினசரி அச்சுப் பதிப்பு ஒன்றை வெளியிடுவதற்கு சமர்பித்த விண்ணப்பத்தை பரிசீலிப்பது இல்லை என்று உள்துறை அமைச்சு எடுத்த முடிவை நீதித்துறை மறுபரிசீலனை செய்வதற்கு விண்ணப்பிக்கும்.
எல்லா “சபா 12″ பேரும் இடை நீக்கம் செய்யப்பட்டதாக பிகேஆர் தலைமைச் செயலாளர் கூறுகிறார் 30 Aug | செய்தி.
பார்ட்டி சிந்தா சபா (பிசிஆர்) என்னும் போட்டிக் கட்சியை பதிவு செய்ய முயன்றதற்காக பிகேஆர் கட்சியிலிருந்து இடை நீக்கம் செய்யப்படுவதற்கு ஒழுங்கு நடவடிக்கைக் குழு பரிந்துரை செய்த 12 பேரில் மூவர் மட்டுமே இடைநீக்கம் செய்யப்பட்டதாக கூறும் தகவல்களை பிகேஆர்...
சிலாங்கூருடனான தண்ணீர் பிரச்னை தீர்க்கப்பட்டுள்ளதாக முஹைடின் கூறுகிறார் 30 Aug | செய்தி.
சிலாங்கூர் அரசாங்கம் லங்காட் 2 நீர் சுத்திகரிப்பு நிலையம் அந்த மாநிலத்தில் கட்டப்படுவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளது. அதனால் அந்த விஷயம் மீது மாநில அரசாங்கத்துக்கும் கூட்டரசு அரசாங்கத்துக்கும் இடையில் நீண்ட காலமாக நிலவி வந்த தேக்க நிலை முடிவுக்கு வந்துள்ளதாக...
