Archive for November, 2009
முன்னாள் போலீஸ் படைத் தலைவர்: சின் பெங்கை ஒதுக்குவது நியாயமல்ல 30 Nov | செய்தி.
மலாயாக் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் தலைவர் சின் பெங் மலேசியாவுக்கு திரும்புவதற்கு குறைந்த பட்சம் சோஷியல் விசிட் பாஸ் என்ற வருகையாளர் அனுமதியலாவது வருவதற்கு உரிமை பெற்றுள்ளதாக முன்னாள் தேசிய போலீஸ் படைத் தலைவர் அப்துல் ரஹீம் நூர் கூறுகிறார்.
சர்ச்சைக்குரிய பிடிஎன் பயிற்சிகள் திருத்தி அமைக்கப்படும் 30 Nov | செய்தி.
பிடிஎன் எனப்படும் தேசிய குடியியல் அலுவலகம் வழங்கும் பயிற்சிகளை பிரதமரின் ஒரே மலேசியா கோட்பாட்டுக்கு இணங்க இருக்கும் பொருட்டு அவற்றின் உள்ளடக்கம் திருத்தியமைக்கப்படவிருக்கிறது. அதற்கு அமைச்சரவை இணக்கம் தெரிவித்துள்ளது.
உங்கள் கருத்து: ‘அமைதி ஒப்பந்தத்தை பின்பற்றுங்கள் அவரைத் தாயகம் திரும்ப அனுமதியுங்கள்’ 30 Nov | செய்தி.
‘பறையா அரசாங்கம் தான் அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு பின்னர் சின் பெங் திரும்புவதற்கு வழி வகுக்கும் அதில் உள்ள நிபந்தனைகளைப் பின்பற்றாமல் பின்வாங்கும்’
அன்வார் நீக்கப்பட்டதற்கு எதிரான முறையீடு வியாழக்கிழமை விசாரிக்கப்படும் 30 Nov | செய்தி.
1998 ம் ஆண்டு அரசாங்கத்திலிருந்து தாம் நீக்கப்பட்டதற்கு எதிராக அன்வார் இப்ராஹிம் சமர்பித்துள்ள முறையீட்டை கூட்டரசு நீதிமன்றம் வியாழக்கிழமை விசாரிக்கவிருக்கிறது.
நஜிப், நிக் அஜீஸிடம் மன்னிப்பு கோருமாறு கேட்க மாட்டார் 30 Nov | செய்தி.
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், கிளந்தானுக்கு எண்ணெய் உரிமப் பணம் கொடுக்க கூட்டரசு அரசாங்கம் மறுத்தால் தம்முடைய எதிர்காலமும் அம்னோவின் எதிர்காலமும் நாசமடைய வேண்டும் என்று பிரார்த்திப்பதற்கு கிளந்தான் மந்திரி புசார் நிக் அஜீஸ் நிக் மாட் கொண்டுள்ள நோக்கத்தின்...
பிபிபி பதவி விலகுமாறு முருகையாவுக்கு நோட்டீஸ் அனுப்பும் 29 Nov | செய்தி.
பிபிபி என்ற மக்கள் முற்போக்குக் கட்சி அடுத்த 14 நாட்களுக்குள் துணை அமைச்சர் பதவியைத் துறக்குமாறு கேட்டுக் கொள்ளும் நோட்டீசை டி முருகையாவுக்கு நாளை அனுப்பவிருக்கிறது.
சிலாங்கூர் பிடிஎன் பயிற்சிக்குப் பதில் திட்டத்தை முன்மொழிகிறது 29 Nov | செய்தி.
சிலாங்கூர் மாநில அரசாங்கம் கூட்டரசு அரசாங்கம் நடத்துகிற சர்ச்சைக்குரிய பீரோ டாட்டா நெகாரா என்ற தேசிய குடியியல் அலுவலகப் பயிற்சிக்குப் பதில் தனது சொந்த நாட்டு நிர்மாணிப்புப் பயிற்சித் திட்டத்தை அறிமுகம் செய்ய எண்ணியுள்ளது.
‘சுதந்திரமான ஊடகத்தின் 10 ஆண்டுகள்’ 29 Nov | செய்தி.
மலேசியாகினி தனது 10 வது ஆண்டு நிறைவைக் கொண்டாடிய வேளையில் விருந்தில் கலந்து கொண்ட சில முக்கியப் பிரமுகர்கள் மலேசியாகினியின் 10 ஆண்டு காலப் போராட்டம் பற்றியும் மலேசியாவின் சிரமமான ஊடக வடிவமைப்பில் சுயேச்சையான சுதந்திரமான ஊடகத்தை உருவாக்குவதில் அது...
“உங்கள் உதவி இல்லாமல் நாங்கள் அதனை செய்திருக்க முடியாது” 29 Nov | செய்தி.
10 ஆண்டுகள் நிறைந்துள்ள மலேசியாகினி நிதி அடிப்படையில் சுதந்திரமாக இயங்குவதற்கு உதவும் ஆயிரக்கணக்கான சந்தாதாரர்களுக்கு அதன் கூட்டு நிறுவனர்களான ஸ்டீவன் கானும் பிரமேஷ் சந்திரனும் நன்றி தெரிவித்துக் கொண்டுள்ளனர்.
மன்னிப்புக் கேட்க மறுக்கும் சின் பெங்கின் கடைசி ஆசை 29 Nov | செய்தி.
மலாயா கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் தலைவர் சின் பெங்கின் இறுதி ஆசை தாயகம் திரும்புவது தான். ஆனால் தாம் செய்த காரியங்களுக்காக மன்னிப்பு கேட்க அவர் தயாராக இல்லை.
