Archive for April, 2009
முஸ்லிம்-அல்லாதார் விவகாரப் பிரிவு தேவை 30 Apr | செய்தி.
இஸ்லாத்துக்கு மதமாற்றம் செய்யப்படுவதால் எழும் பிரச்னைகளுக்குத் தீர்வு காண ஒரு தனித் துறை தேவை என்று மஇகா இளைஞர் பிரிவு அரசாங்கத்துக்குக் கோரிக்கை விடுத்துள்ளது.
உதயா தேசநிந்தனை வழக்கு அவர் இல்லாமலேயே நடக்கலாம் 30 Apr | செய்தி.
தடுப்புக் காவலில் உள்ள இண்ட்ராபின் சட்ட ஆலோசகர் உதயகுமாரின் தேச நிந்தனை வழக்கின்போது அவரை கோலாலும்பூர் உயர்நீதிமன்றத்துக்குக் கொண்டுவருவதற்கு அவரின் வழக்குரைஞர்கள் செய்த முயற்சி பயன்தரவில்லை.
சிலாங்கூரில் ஓர் இடைத்தேர்தலா? 30 Apr | செய்தி.
கோட்டா அலாம் ஷா சட்டமன்ற உறுப்பினர், எம்.மனோகரன் -இப்போது உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் காவலில் வைக்கப்பட்டுள்ளவர்- தம் தொகுதியிலிருந்து விலகிக்கொள்வது பற்றி ஆலோசித்து வருவதாக மலேசியாகினி அறிய வருகிறது.
தொகுதி மக்களுக்குச் சேவையாற்ற முடியாமல் இருப்பதை எண்ணி அந்த வழக்குரைஞர் மனம்...
தலைப்புச் செய்திகள்-ஏப்ரல் 30,2009 30 Apr | செய்தி.
மலேசிய நாளிதழ்களின் முக்கிய செய்திகளும் தலையங்கமும்.
முகப்புச் செய்திகள்
ஆங்கில நாளிதழ்கள்
நியு ஸ்டிரேய்ட்ஸ் டைம்ஸில், மனிதக் கடத்தலில் ஈடுபடும் நிறுவனங்கள், மலேசியாவை மையமாகக் கொண்டு செயல்படுகின்றன என்பது தலைப்புச் செய்தி.
சிவகுமாரை பதவி நீக்கம் செய்ய ஜாம்ரியின் தீர்மானம் 30 Apr | செய்தி.
மே மாதம் 7 ஆம் தேதி நடைபெறவிருக்கும் பேராக் சட்டமன்ற கூட்டத்தில் சட்டமன்ற தலைவர் வி. சிவகுமாரை அகற்றுவதற்கான தீர்மானத்தை பாரிசான் கட்சியின் மந்திரி புசார் ஜாம்ரி அப்துல் காடிர் முன்மொழிவார்.
ஏப்ரல் 27 ஆம் தேதியிட்ட கடிதத்தின் வாயிலாக அனைத்து...
தமிழ் இனப்படுகொலை: அவசர வேண்டுகோள் 29 Apr | செய்தி.
“மோசமான இனப்படுகொலையை தடுத்து நிறுத்த மலேசிய மக்களின் அவசர முயற்சி தேவை”, என்று போருக்கு எதிரான மக்கள் ஒன்றியம் அறைகூவல் விடுத்துள்ளது.
கனரக ஆயுதங்கள் பயன்படுத்தக்கூடாது என்று சிறிலங்கா இராணுவத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக நேற்று கூறினார்கள். போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டு விட்டதாகக் கூறி...
பிஎஸ்எம்மின் மடக்கப்பட்ட கைமுட்டி சின்னத்துக்கு அங்கீகாரம் 29 Apr | செய்தி.
பத்தாண்டுகளுக்கு மேலாக அரசியல் கட்சியாக பதிவு பெறப் போராட்டம் நடத்தி அதில் அண்மையில் வெற்றிகண்ட மலேசிய சோசலிச கட்சி (பிஎஸ்எம்),தம் கட்சிச் சின்னத்தைத் தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டிருப்பதாக இன்று அறிவித்தது.
தலைப்புச் செய்திகள்-ஏப்ரல் 29,2009 29 Apr | செய்தி.
மலேசிய நாளிதழ்களின் முக்கிய செய்திகளும் தலையங்கமும்.
முகப்புச் செய்திகள்
ஆங்கில நாளிதழ்கள்
நியு ஸ்டிரேய்ட்ஸ் டைம்ஸிலும் த ஸ்டாரிலும் உலக சுகாதார நிறுவனம், பன்றிக் காய்ச்சல் பரவல் தொடர்பான எச்சரிக்கையை 4-ம் தளத்துக்கு உயர்த்தியிருப்பது முதன்மைச் செய்தி. மலேசியாவில் சுகாதார அமைச்சு நிலைமையை அணுக்கமாகக்...
பெனாந்தி:அம்னோ நாளை கூட்டம் நடத்தும் 29 Apr | செய்தி.
மே 31-இல் நடைபெறும் பெனாந்தி இடைத்தேர்தலில் போட்டியிடுவதா இல்லையா என்பதை முடிவு செய்ய அம்னோ அரசியல் பிரிவு நாளை கூடுகின்றது.
இக்கூட்டம் நடைபெறும் என்பதை அம்னோ அதிகாரபூர்வ வலைத்தளம் உறுதிப்படுத்துகிறது.
பாஸ்: நஜிப்பை விசாரிக்க அரச ஆணையம் வேண்டும் 29 Apr | செய்தி.
பிரதமர் நஜிப் மங்கோலியப் பெண் அல்தான்துயா கொலையில் சம்பந்தப்பட்டிருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்த ஓர் அரச ஆணையம் அமைக்க வேண்டும் என்று மலாய் ஆட்சியாளர்கள் மன்றத்திற்கு அனுப்பியுள்ள கடிதத்தில் பாஸ் கோரியுள்ளது.
