Archive for January, 2009
பேராக் ஆட்சிமன்ற உறுப்பினர்களை “காணவில்லை”, கட்சித் தாவலா? 31 Jan | செய்தி.
நான்கு நாட்களாகக் காணவில்லை
ஊழல் வழக்குடன் தொடர்புள்ளதா?
இரண்டு பேரா மாநில ஆட்சிமன்ற உறுப்பினர்களைக் கட்சி மாறச் செய்வதற்கு, துணைப் பிரதமர் நஜிப் துன் ரசாக் அவர்களை தம் வசம் இழுக்க முயலுவதாக, கெஅடிலான் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது. அவ்விருவரையும் கடந்த நான்கு நாட்களாகக்...
பேராக் மந்திரி புசார் மாற்றப்பட மாட்டார் 31 Jan | செய்தி.
பாஸ் கட்சியைச் சேர்ந்த புசார் முகமட் நிஜார் ஜமாலுடினுக்குப் பதில் பிகேஆர் ஆள் ஒருவர் பேராக் மந்திரி புசாராக அமர்த்தப்படுவார் என்ற ஆருடத்தை பாஸ் மற்றும் பிகேஆர் தலைவர்கள் மறுத்துள்ளனர்.
“கலகக்கார” சாமி, மஇகாவுக்குத் திரும்ப வந்தார் 31 Jan | செய்தி.
மஇகாவில் இது ‘மறப்போம் மன்னிபோம்’ காலம் போலும். கட்சியிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் உதவித் தலைவர் எம்.முத்துபழநியப்பன் திரும்பவும் சேர்த்துக்கொள்ளப்பட்டார். அதேபோல் இன்னொரு புரட்சியாளரான கே.பி.சாமியும் திரும்பவும் கட்சியில் சேர்த்துக்கொள்ளப்பட்டிருக்கிறார்.
உங்கள் கருத்து 31 Jan | செய்தி.
மஇகா-வில் சில்லறை பூசல்கள் நிற்க வேண்டும்.
எஸ்ஓஎஸ்: மஇகா உண்மை நிலவரங்களைவிட்டு எவ்வளவு தூரம் விலகிப் போயிருக்கிறது என்பதை நினைத்தால் தலை சுற்றுகிறது. கடந்த வாரம் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் உதவித் தலைவர் மீண்டும் சேர்த்துக்கொள்ளப்பட்டிருக்கிறார். அதேபோல் கடந்த ஜனவரியில் இண்ட்ராப்...
மருத்துவ நிபுணர்கள்: குகன் மூழ்கடிக்கப்பட்டாரா? 31 Jan | செய்தி.
மூழ்குதல்: மூச்சுத் திணறி மரணமடைதல்
காயங்கள்: அடித்து உதைத்து அல்லது கசையடியால் ஏற்படுத்தப்பட்டவை
காவல் கைதி குகன் ஆனந்தன், ஒரு கிளாஸ் நீரை அருந்திய பின்னர் மயக்கமடைந்து இறந்ததாக கூறும் போலீஸ் அறிக்கையும், அவரது இறப்புக்கு நுரையீரலில் சேர்ந்த நீர் காரணம் என்று ...
International-sponsored ceasefire only – LTTE 30 Jan | செய்தி.
To resolve the conflict between the Tigers and the Sri Lankan government, there must be a “permanent ceasefire mooted by the International Community and negotiations followed by it”, LTTE’s...
சிறி லங்கா: போர் நிறுத்தக் கோரிக்கை வலுத்து வருகிறது 30 Jan | செய்தி.
சிறி லங்கா அரசாங்கப் படைக்கும் தமிழ்ப் புலி போராளிகளுக்கிடையில் நடைபெற்று வரும் கடுஞ்சண்டையில் அகப்பட்டுக்கொண்டிருக்கும் இரண்டு இலட்சத்து ஐம்பதினாயிரத்திற்கு மேற்பட்ட பொதுமக்களின் பாதுகாப்பிற்கு பேராபத்து ஏற்பட்டிருப்பதால், போர்நிறுத்தம் உடனடியாக அமலாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை இன்று வலுப்பெற்றது.
“டய்மே தம்மைப் பாதுகாத்துக்கொள்ள முடியவில்லை” 30 Jan | செய்தி.
டய்மே ( Daim) தம்மைப் பாதுகாத்துக்கொள்ள முடியவில்லை: கடிதம்: ஜெ.டி.லவ்ரென்சியர்
அண்மையில் திருடர்கள் துன் டயிமின் காலணிகளைக் கவர்ந்து சென்றுள்ளனர். இதற்கு துணைப் பிரதமர் என்ன சொல்வார் என்று தெரியவில்லை.
துணைப் பிரதமர், மலேசியர்கள் நாட்டில் குற்றச்செயல் விகிதம் பற்றிய தங்கள் கருத்தை...
பட்ஜெட்டில் பற்றாக்குறை அதிகரிக்கும் 30 Jan | செய்தி.
2009 க்கான வரவு-செலவுத் திட்டத்தில் பற்றாக்குறை, ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட 4.8 விழுக்காட்டைவிடவும் அதிகமாக இருக்கும் என்று அரசாங்கம் கூறுகிறது. பொருளாதாரச் சுணக்கத்தைச் சமாளிக்க புதிய ஊக்குவிப்புத் திட்டம் அறிமுகப்படுத்தப்படுவது இதற்குக் காரணமாகும்.
உங்கள் கருத்து: வாங்கிக் கட்டிக்கொள்கிறார் சைட்அமிட் 30 Jan | செய்தி.
சைட் அமிட் வாயைக் கொடுத்து வாங்கிக் கட்டிக்கொள்கிறார்.
ஜான் ஜான்சன்: உள்துறை அமைச்சர் மறுபடியும் குளறுபடி செய்கிறார். குகன் குற்றவாளியோ இல்லையோ, அவரைச் சாகும்வரை அடித்து சித்திரவதை செய்யும் உரிமையை மலேசியப் போலீசாருக்குக் கொடுத்தது யார்?
