Archive for June, 2008
சைட் ஹமிட்:போலீசார் அவர்களது கடமையை ஆற்ற விடுங்கள் 30 Jun | செய்தி.
அன்வார் இப்ராஹிமுக்கு எதிராக, முகமட் சைபுல் புகாரி அஸ்லான் செய்துள்ள புகார் குறித்து போலீசார் புலனாய்வுகளை நடத்துவதில், அவர்களது கடமைகளை ஆற்ற அனுமதிக்க வேண்டும் என்று உள்நாட்டு அமைச்சர் சைட் ஹமிட் அல்பார் இன்று கூறியுள்ளார்.
அன்வாரின் உயிருக்கு ஆபத்து என...
அன்வார் துருக்கிய தூதரகத்தை விட்டு வெளியேறினார் 30 Jun | செய்தி.
ஓரினப் புணர்ச்சி குற்றச்சாட்டை எதிர்நோக்கிய பின்னர் துருக்கிய தூதரகத்தில் தஞ்சம் புகுந்த மாற்றரசாங்கக் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் இன்று மாலை மணி 6.30 க்கு அங்கிருந்து வெளியேறினார்.
ஈப்போவிலும் அன்வார் அலை 30 Jun | செய்தி.
அன்வார் மீதான ஓரின புணர்ச்சி குற்றச்சாட்டின் அதிர்ச்சி அலைகள் நேற்றிரவு ஈப்போவிலும் உணரப்பட்டது.
நேற்று அவர், பக்காத்தான் ரக்யாட் ஆட்சிக்கு வந்த 100 வது நாளையொட்டி ஈப்போ விளையாட்டரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணியில் 20,000 பேருக்கு மத்தியில் உரையாற்றுவதாக இருந்தது.
ஆனால் தம்...
சைபுல் தலைமறைவு – மாமா நம்பிக்கை 30 Jun | செய்தி.
அன்வாருக்கு எதிராக புகார் செய்துள்ள முகமட் சைபுல் புகாரி அஸ்லானைப் பற்றி இணையத்தில் தாறுமாராக பேசப்பட்டு வருகிறது. மேலும், 23 வயதான சைபுல் இப்போது மலேசியாவில் காணப்படவில்லை.
பாரிசான் நேசனல் அரசியல்வாதிகளின் சதித் திட்டத்தில் சைபுல் சம்பந்தப்பட்டிருக்கிறார் என நம்பப்படுகிறது.
ஆடம்பர அடுக்குமாடி வீட்டில் தடயவியல் அதிகாரிகள் சோதனை 30 Jun | செய்தி.
கெஅடிலான் தலைவர் அன்வார் இப்ராகிமுக்கு எதிராக கூறப்பட்டுள்ள ஓரினப் புணர்ச்சிக் குற்றச்சாட்டு தொடர்பில் ஆதாரங்களைத் தேடி போலிஸ் தடயவியல் குழுவினர் டாமன்சாராவில் உள்ள ஆடம்பர அடுக்குமாடி வீட்டுக்குச் சென்றனர்.
ஓரினப் புணர்ச்சி நிகழ்ந்ததாக கூறப்படும் வீட்டை தடயவியல் குழுவினர் ஐந்து மணி...
அன்வாரின் பாதுகாப்புக்கு பிரதமரின் உத்தரவாதம் கோருகிறார் வான் அசிசா 30 Jun | செய்தி.
அன்வார் இப்ராகிமின் பாதுகாப்பிற்கு பிரதமர் அப்துல்லா அகமட் படாவி உத்தரவாதம் வழங்குவாரானால் தம் கணவர் அன்வார் இப்ராகிம் துருக்கிய தூதரகத்திலிருந்து வெளியில் வருவார் என கெஅடிலான் தலைவர் டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில் கூறினார்.
அப்துல்லா உத்தரவாதம் வழங்குவாராயின் கெஅடிலான்...
அன்வாருக்கு எதிரான சதித் திட்டத்தில் சம்பந்தமில்லை:நஜிப் 30 Jun | செய்தி.
கெஅடிலான் தலைவர் அன்வார் இப்ராகின் அரசியல் வாழ்வைச் சீர்குலைக்கும் சதித் திட்டத்தில் சம்பந்தம் இருப்பதாகக் கூறப்படுவதைத் துணைப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் மறுத்தார்.
தலைப்புச் செய்திகள்: ஜூன் 30 30 Jun | செய்தி.
மலேசியாவில் இன்று வெளியாகியுள்ள ஆங்கில, மலாய், தமிழ் மற்றும் சீன நாளிதழ்களின் முக்கிய செய்திகளும் தலையங்கமும்.
முகப்புச் செய்திகள்
ஆங்கில நாளிதழ்கள்
கெஅடிலான் கட்சியின் தலைவர் அன்வார் இப்ராகிம், அவர்மீது ஓரினப்புணர்ச்சி குற்றம் சுமத்தப்பட்டதை தொடர்ந்து துருக்கி தூதரகத்தில் ஒளிந்து கொண்டிருக்கின்றார் என்பதை நியு...
அன்வார் விவகாரம்:துருக்கிய தூதரை ராயிஸ் சந்திப்பார் 30 Jun | செய்தி.
உயிருக்கு மருட்டல் ஏற்பட்டுள்ளதால் மாற்றரசுக் கட்சி தலைவர் அன்வார் இப்ராகிம் துருக்கி தூதரகத்தில் தஞ்சம் புகுந்துள்ளதை துருக்கி தூதரகம் மீண்டும் பரிசீலனை செய்ய வேண்டும் என அரசாங்கம் கேட்டுக் கொள்ளும்.
தன் மீது சும்மத்தப்பட்டுள்ள ஓரினப் புணர்ச்சிக் குற்றச்சாட்டை மறுத்த அன்வார்...
இசா-எதிர்ப்புப் பேரணியில் ஆயிரம் பேர் 30 Jun | செய்தி.
உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தை எதிர்த்தும் அச்சட்டத்தின்கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை விடுவிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் சனிக்கிழமை இரவு ஷா அலாம் மெலாவத்தி அரங்கில் பேரணி ஒன்று நடைபெற்றது.
சுமார் ஆயிரம் பேர் அப்பேரணியில் கலந்து கொண்டனர்.இசா ஒழிப்பு இயக்கத்தின்(ஜிஎம்ஐ) தலைவர் சைட்...
