Archive for April, 2008
சாமிவேலுக்கு எதிராக அன்வார் வழக்கு 30 Apr | செய்தி.
கெஅடிலானின் நடப்புத் தலைவர் அன்வார் இப்ராகிம் பற்றி சாமிவேலு கூறிய அவதூறுகள் ஏப்ரல் 15 ஆம் திகதி வெளியான பெரித்தா ஹரியானில் பிரசுரிக்கப்பட்டிருக்கிறது.
அன்வார் மீது அவர் கூறிய அவதூறுகளுக்காக சாமிவேலு பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். மேலும் ரிம100 மில்லியன்...
கிரீஸ் கத்தியைக் குறை சொல்லுங்கள், துடைப்பத்தை அல்ல 30 Apr | செய்தி.
மலாய்க்காரர்-அல்லாதாரிடையே கடும் எதிர்ப்பைத் தூண்டிவிட்ட கிரீஸ் கத்தியை அசைத்துக் காட்டிய சம்பவம் மார்ச் 8 தேர்தலில் அம்னோ மற்றும் பாரிசானின் மோசமான பின்னடைவுக்குக் காரணமாக இருந்திருக்கலாம். முன்னாள் சிலாங்கூர் மந்திரி புசார் டாக்டர் முகம்மட் கீர் தோயோ இவ்வாறு கூறுகிறார்.
அறிவிப்பு:உலக பத்திரிகைச் சுதந்திர நாள் 30 Apr | செய்தி.
மே 3 ஆம் தேதி உலக பத்திரிகைச் சுதந்திர நாள். அந்நாள் நெருங்கி கொண்டிருக்கிறது. இதனையொட்டி இவ்வாண்டு, சுதந்திர பத்திரிகையாளர் மையம் (சிஐஜெ) (Centre for Independent Journalism)இரண்டு நாள் நிகழ்வு ஒன்றுக்கு ஏற்பாடு செய்துள்ளது.
லீயின் கட்சித் தாவலுடன் தேமுக்கு காலக்கெடு நெருங்குகிறது 30 Apr | செய்தி.
டாக்டர் மகாதீர் இப்போது வெளி நாட்டில் இருக்கலாம், இருப்பினும் இங்கு ஏற்படும் அரசியல் மாற்றங்களை அவர் கவனித்துக் கொண்டுதான் வருகிறார்.
தலைப்புச்செய்திகள் : ஏப்ரல்30 30 Apr | செய்தி.
இன்றைய ஆங்கில மலாய் சீன நாளிதழ்களின் முக்கிய செய்திகளும் தலையங்கமும்
ஆங்கில நாளிதழ்கள்
ஸ்டார், சன், நியு ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் ஆகிய மூன்று நாளிதழ்களும் நேற்று தொடங்கிய 12வது நாடாளுமன்ற கூட்டத்தொடரின் அரச உரை குறித்த செய்தியை முகப்புச் செய்தியாக வெளியிட்டிருக்கின்றன.
இசா சட்டம் அகற்றப்படும் சாத்தியம் இன்னும் தென்படவில்லை 30 Apr | செய்தி.
செய்தி ஊடகங்கள் மீதிலான கட்டுப்பாட்டு சட்டம் விரைவில் அகற்றப்படும் நம்பிக்கையை அண்மையில் நியமிக்கப்பட்ட புதிய உள்துறை அமைச்சர் சைட் ஹமிட் அல்பார் தகர்த்திருக்கிறார்.
தொலைக்காட்சி ஆர் டி எம் 1 இல் பெர்செமுகா பெர்சமா மீடியா நிகழ்ச்சியில், அச்சக மற்றும் பதிப்பகச்...
நாடாளுமன்றத்தில் காரசாரமான வாதம் 30 Apr | செய்தி.
இன்று மக்களவையின் கேள்வி நேரம் காரசாரமாக தொடங்கியது. மாற்றரசாங்கக் கட்சி உறுப்பினர்களும் அவைத் தலைவரும் அரசாங்க தரப்பு உறுப்பினர்களும் சூடான சொற்களைப் பரிமாறிக்கொண்டனர்.
கைரி மன்னிப்பு கேட்க வேண்டும் – கோபிந்த் 30 Apr | செய்தி.
அம்னோ இளைஞர் பிரிவின் துணைத்தலைவரும் ரெம்பாவ் நாடாளுமன்ற உறுப்பினருமான கைரி ஜமாலுடின் தமது தலைவர் ஹிஷாமுடின் ஹுசேனைப் பின்பற்றி கடந்த வருட பெர்சே மறியலில் கலந்து கொண்டவர்களை “பெரோக்” (குரங்குகள்) என்று குறிப்பிட்டதற்காக மன்னிப்புக் கோரவேண்டும்.
அம்னோவின் கல்விக் கொள்கை அனுமதித்தது மசீசவும் மஇகாவும்தான் 30 Apr | கடிதங்கள்.
- கம்போங் துங்கு மாக்சிக்
எஸ்பிம்,எஸ்டிபிஎம் முடிவுகள் வெளிவரும் நேரமிது. ஒவ்வோராண்டும் இந்நேரத்தில் என் மனம் படாத பாடு படும். கடந்த பத்தாண்டுகளாக இப்படி நடந்து வருகிறது.
கெராக்கான் கட்சித் தேர்தல் முன்கூட்டியே நடத்தப்படும் 30 Apr | செய்தி.
கெராக்கான் கட்சித் தேர்தல் இவ்வாண்டு நடத்தப்படும் என்று அதன் தலைமை செயலாளர் சியா குவாங் சைய் நேற்று அறிவித்துள்ளார். தொடக்கத்தில் கட்சித் தேர்தல் அடுத்தாண்டுக்கு தள்ளி வைக்கப்பட்டிருந்தது.
